தொடரும் தோழர்கள்

புதன், ஜூலை 01, 2015

என்னைப்பார்,யோகம் வரும்!



இன்று ஸ்வாமி ஒரு கடையில் ஒரு போர்டைப் பார்த்தார்

அதில் எழுதியிருந்த வாசகம்”என்னைப்பார் யோகம் வரும்”

படம் வேறு போட்டிருந்தது.என்ன படம் என்று பார்த்தால் ஒரு கழுதையின் படம்!

அந்தப்பத்தைப் போட்டு, பார்த்தால் யோகம் வரும் என்றால்,யாருக்கு யோகம் வரும்?

போர்டைப் பார்ப்பவருக்கா?

போர்டைத் தொங்க விட்ட கடைக் காரருக்கா?

அல்லது கழுதைக்கா?

நரி முகத்தில முழிச்சிட்டான் என்பார்கள்.நரியைக் காலையில் பார்த்தால் நல்லதே நடக்கும் என ஒரு மூட நம்பிக்கை!

கவுண்டமணி செந்தில் நகைச்சுவை நினைவுக்கு வருகிறதா?(சிரிப்பு)

அது போல கழுதையைப் பார்த்தால் யோகம் வரும் என்கிறார்களா?

வெளுப்பவனுக்கு உதவியாக அழுக்குத்துணி மூட்டையைச் சுமந்து செல்கிறது கழுதை.

வேடிக்கையாக ஒன்று சொல்வேன்! பள்ளிச் சிறார்களை பாருங்கள்.புத்தகப்பையைப் பெரிய சுமையாக முதுகில் சுமந்து  முதுகு வளைந்து செல்வதைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது.

நமது கல்வி அவர்களையும் கழுதைகளாக்கி விட்டது!

பார்த்தால் நாம் எல்லோருமே கழுதைகள்தான்.

காலை எழுந்ததும் கண்ணாடியைப் பார்த்தாலே யோகம் வந்து விடுமே!

காமம்,குரோதம், ,லோபம், மோகம்,மதம் , மாச்சர்யம் ஆகிய அழுக்குகளை மூட்டையாக நம் மனதில் சுமந்து கொண்டிருக்கிறோம்! அதாவது அவா,சினம்,கடும்பற்று, இனக்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை,வஞ்சம்.

கழுதையின் அழுக்கு மூட்டைச் சுமையாவது துவைக்கும் இடம் சென்ற பின் இறக்கி வைக்கப்படுகிறது

ஆனால் நாம் சிறிதும் ஓய்வின்றி எந்நேரமும் அழுக்கு மூட்டையைச் சுமந்து கொண்டேதான் அலைகிறோம்!

இறக்கி வைப்பதற்கு மாறாக புதிய சுமைகளைச் சேர்க்கிறோம்.தேவையற்ற கவலைகள்,நான் என்னும் அகங்காரம், இப்படிப் பலப்பல!

எனக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை என்றால் எப்படி இருக்கும்?

மகீழ்ச்சி எப்படி வரும்?

வயிற்றில் அமிலம்தான் சுரக்கும்!நெஞ்செரிச்சல் அதிகமாகும்.

ஒரே நாளில் எல்லாச்சுமையையும் இறக்கி வைத்து விட முடியாது.ஆனால் சிறிது சிறிதாக இறக்கி வைக்க முயல் வேண்டும்.

அதற்கு மனம் வேறொன்றை நாட வேண்டும்.

இறை நம்பிக்கை!

சிக்கென அவன் பாதம் பற்றுங்கள்.

கிருஷ்ணன் ஆயினும்,கிறித்து ஏசு  ஆயினும் உங்கள் சுமைய இறக்கி வைத்து உங்களுக்கு உதவக் காத்திருப்பவரே.

அதற்கு உங்கள் முயற்சி வேண்டும்.

நாளை முதல் என்று சொல்லாதீர்கள்.

இன்றே ,இங்கே,இப்போதே தொடங்கலாம்.


காலையில் கண்ணாடி பார்ப்பது பற்றி நகைச்சுவையாகச் சொன்னேன்.

ஆனால் அதிலும் ஒரு விவரம் இருக்கிறது. 

கண்ணாடியில் சோர்ந்து போன உங்கள் முகத்தைப் பார்த்தால் எப்படி நல்லது நடக்கும். 

கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்.”இன்று உன் எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுவாய்.இன்று முழுவதும் நல்லதே நினைப்பாய்,நல்லதே செய்வாய்”என்று


அந்த பிம்பம் உங்களைப் பார்த்து அதையே சொல்லும்.

அதே உற்சாகத்தோடு நாளைத் தொடங்குங்கள்






(ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதியின் உரையிலிருந்து)



26 கருத்துகள்:

  1. அடேடே... நாமெல்லோரும் பாரம் சுமக்கும் கழுதைகள், ஆற்றங்கரை வந்தும் அழுக்கு மூட்டை இறக்காத கழுதைகள் என்று மிக அழகாக பித்தானந்த சரஸ்வதி சொல்லிவிட்டாரே..

    வேடிக்கையானாலும் உண்மையான பதிவு.

    God Bless You

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா... அருமை... எதிரொலி போலத்தான் வாழ்க்கை...

    பதிலளிநீக்கு
  3. கண்ணாடியில் சோர்ந்து போன உங்கள் முகத்தைப் பார்த்தால் எப்படி நல்லது நடக்கும்.

    கண்ணாடியில் தெரியும் பிம்பத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்.”இன்று உன் எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறுவாய்.இன்று முழுவதும் நல்லதே நினைப்பாய்,நல்லதே செய்வாய்”என்று//


    உண்மையான உண்மைதான்...ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. தன்னம்பிக்கையை சுயமாக
    ஏற்றிக் கொள்ளச் சுலபமான வழி
    கழுதையில் தொடங்கி முடிவில்
    நம் முகத்தில் முடித்ததை மிகவும்
    இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பித்தானந்த சரஸ்வதியின் உபதேசங்கள் அருமையாக இருக்கின்றன! சிஷ்யனாகும் பாக்கியம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஓட்டுப்பட்டை இருக்கிறதே!

      நீக்கு
    2. "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" இது பழமொழி,
      http://gopalkrishnaniyer.blogspot.in/2013/04/blog-post_1037.html
      பதினொன்றாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் வசித்த சித்தர் ஒருவர் இவ்வகை கழுதைகளை ஆராய்ந்தார்,..... அபூர்வ வகையைச் சார்ந்த கழுதைதான் வெள்ளை மூக்கு கானகக் கழுதை. இந்த வகை "வெள்ளை மூக்கு கானக கழுதைகள்" மிக விரைவாக ஓடிச்செல்லும் விலங்குகளில் இதுவும் ஒன்று. இந்த கழுதையின் சிறப்பம்சமே இதன் வேகம் தான். மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் ஓடும் திறனுடையது. இவை எச்சரிக்கை உணர்வும், புத்திசாலித்தனமும் மிகுந்தவை. "எப்படி இந்த வகை கழுதைகளுக்கு அத்தனை சக்தி கிடைக்கிறது என்று அந்த வகை கழுதைகள் மேயும் இடங்களுக்கு சென்று அவைகள் உண்ணும் தாவர புல் வகை மூலிகைகளை சேகரித்து அதன் மூலம் பல பலசாலிகளான வீரர்களை உருவாக்கியதாக ஒரு செய்தி உண்டு. அவர் கூறியதாக பிறரால் எழுதிய குறிப்புகளில் அப்படி அவர் காட்டில் தேடியபோது "கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்" என்கிற கூற்று பிறகு பழமொழியாக திரித்து பேசப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கானக கழுதையில் பல வகைகள் உள்ளன. லடாக் பகுதியில் காணப்படும் வகை, கட்ச் பகுதியில் உள்ளதைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வாறே காஷ்மீரில் காண்பது பிரிதொருவகை. இன்று இவ்வினம் ரான் பகுதியில் சுமார் ஐயாயிரம் சதுர கி.மீ. பரப்பளவிலான ஒரு சரணாலயத்தில் மட்டுமே காணப்படுகிறது. நமது பொதி சுமக்கும் கழுதையின் மூதாதையர் இனம் தான் இந்த ஒயில்ட் ஆஸ் என்னும் கானக கழுதை. குறிப்பாக இந்த வகை வெள்ளை மூக்கு கானகக் கழுதை உருவத்தில் சற்று பெரியது. பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் உண்டு. முற்காலத்தில் நமது உள்ளூர் கழுதைகள் துணி மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கும் போதே இந்த கானகக் கழுதைகள் வடமேற்கு இந்தியப் பகுதியில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தன என்று கூறப்பட்டுகிறது.

      " எல்லாம் சரிங்க கடவுள் கழுதைக்கு ஏன் தலையில் கொம்பை படைக்கவில்லை?"

      அதற்க்கு மாறாகத்தான் கடவுள் கழுதைக்கு காலில் பலத்தைக் கொடுத்திருக்கிறார்,..... உதய் வாங்கியவர்களை கேட்டுப்பாருங்கள் அதன் பலம் என்ன வென்று தெரியும்.

      விடாமல் முயலுங்கள்,
      விரும்பியதைப் பயிலுங்கள்.
      தொடர்ந்து சிந்திப்போம் .....
      மீண்டும் சிந்திப்போம்!
      நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி. (புது தில்லி) தற்போது இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்திலிருந்து....

      நீக்கு
  7. அருமையான பதிவு.

    நேரம் கிடைக்கும் போது எனது பக்கத்தையும் வாசிக்க வாருங்கள். நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம் !

    பதிலளிநீக்கு
  8. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  9. நல்ல வேளைநான் படிக்கும்போது புத்தகம் சுமக்கும் கழுதையாக இருக்கவில்லை த.ம 8

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஐயா
    கண்ணாடி பற்றி அருமையான சிந்தனை பகிர்வுக்கு நன்றி த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. நாங்களும் கழுதைகளே உண்மை தான் மறதி என்று ஒன்று இல்லை யென்றால் இன்னும் எவ்வளவு குப்பை சேர்ந்திருக்கும் நல்ல வேளை.
    நன்றி நல்லதோர் பதிவு!

    பதிலளிநீக்கு
  12. நம்மைப் பார்த்தாலே போதும் என்ற சிந்தனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மிக மிக அருமையான கருத்து....நாம் எல்லோரும் கழுதைகள்தானோ...

    பதிலளிநீக்கு
  14. பித்தானந்த சரஸ்வதி கலக்குகிறாரே! :)

    பதிலளிநீக்கு