தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 09, 2012

அதுவும் ஒரு சுகமே!


சுருட்டை முடியில்லை

சுடர் விடும் கண்ணில்லை

எடுப்பான நாசியில்லை

எழிலான சிரிப்புமில்லை

சிவந்த தோல் இல்லை

சிங்கார வார்த்தை இல்லை

அகன்ற தோளில்லை

பரந்த மார்பில்லை

ஜிம்முக்குச் சென்றதில்லை

சிக்ஸ் பேக்கும் முயன்றதில்லை

ஆனாலும்

என்னை நீ காதலித்தாய்

என்ன கண்டாய் என்னிடத்தில்

இன்று வரை புரியவில்லை

நானும் கேட்டதில்லை

நீயும் சொன்னதில்லை

அப்படியே போகட்டும்

அதுவும் ஒரு சுகமே!46 கருத்துகள்:

  1. ada.. neenga kooda kavithai ezhutha aarambichtiteengale.... engalukku elaam pottiyaa.... nalla irukku..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவ்வப்போது கவிதைகள் எழுதிக்கொண்டுதானிருக்கிறேன்.சில நாட்களுக்கு முன் கூட “கண்ணம்மா அந்தாதி” என்ற கவிதை எழுதியுள்ளேன்.

      நன்றி ரிஷ்வன்!

      நீக்கு
  2. சார் காதலுக்குக் கண்ணும் இல்லை. அழகு கவிதை.

    பதிலளிநீக்கு
  3. // என்ன கண்டாய் என்னிடத்தில்

    இன்று வரை புரியவில்லை//

    அதற்கு உங்கள் முகராசி தான் காரணம்!! கவிதைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. காரணம் கேட்டு கேட்டு தோற்று போன அனுபவம் எனக்கும் உண்டு ஐயா ...

    பதிலளிநீக்கு
  5. //நானும் கேட்டதில்லை
    நீயும் சொன்னதில்லை
    அப்படியே போகட்டும்
    அதுவும் ஒரு சுகமே!//

    அதுதான் ஸ்வாமீ சுகமே!

    சும்மாயிருப்பதே சுகம்!!

    எதையாவது கிளறினால் போச்சு!

    இப்போது இருக்கும் சுகமே போச்சு ;)))))

    பதிலளிநீக்கு
  6. ஏனென்று தெரியாமல் நேசிப்பது தானே காதல் கவிதை அருமைவால்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இளம் வயதில் எழுதியது போல் உள்ளது. கலக்கிட்டீங்க சார்!

    பதிலளிநீக்கு
  8. அழகு...யதார்த்தம் பித்தரே...

    பதிலளிநீக்கு
  9. ஐயா மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலா....உங்களுக்கு இல்லை ஓய்வு என்பதால் பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறதா..

    அருமையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நேரங்களில் காதலர்கள் சிலரைப் பார்க்கையில் எனக்குள் எழும் கேள்வியே கவிதை!
      நன்றி இம்ரான் மூசா!

      நீக்கு
  10. மலரும் அன்பின் நினைவுகள் சுகமாக மனதில்........புரிகிறது தல....!

    பதிலளிநீக்கு
  11. ஹா..ஹா..ஹா.. அப்படியே இருக்கட்டும் விடுங்கள்..அதுவும் ஒரு சுகம் தான்..

    பதிலளிநீக்கு
  12. தூய்மையான காதலுக்கு
    மனமும் அன்பும் இருந்தால் போதும்
    கண்ணும் அழகும்
    கொஞ்சம் கூடுதல் தகுதி அவ்வளவுதான்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தூய்மையான காதலுக்கு
      மனமும் அன்பும் இருந்தால் போதும்//
      உண்மைதான்

      நீக்கு
  13. எளிமையான வார்த்தைகளுக்குள் ஒளிந்திர்க்கும் அழகான காதல் ஏக்கம்

    பதிலளிநீக்கு
  14. அழகான வரிகளில் காதல் ததும்பி நிற்கிறது. நன்று.

    பதிலளிநீக்கு
  15. வரிக்கு வரி யதார்த்தம் அற்புதம் ஐயா.

    பதிலளிநீக்கு
  16. நல்ல கவிதை. காதலித்தது எதனால் என்ற கேள்வி எதற்கு காதல் இருக்கும் வரை!

    பதிலளிநீக்கு
  17. இதை படிக்கும் போது அங்காடி தெரு திரைப்பட பாடல் ஒன்று ஞாபகம் வருது.....

    பதிலளிநீக்கு
  18. common cold / cancer ஆகியவற்றிற்கு கூட மருந்து கண்டு பிடித்துவிடுவார்கள் ...ஆனால் காலம் காலமாக பலர் விடை தேடும் கேள்வி இது . GOD PARTICLE கூட கண்டுவிட்டார்கள் ...பெண்ணின் மனதில் உள்ளவற்றை கண்டு பிடிக்கும் வித்தை என்று கண்டு பிடிப்பார்களோ ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  19. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு