தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 22, 2012

தலையிருக்க ஆடலாமோ வால்?


கனியிருப்பக் காய் கவர்தல் நன்றோ-வெள்ளிக்

காசிருக்கப் பித்தளைக்கு  மதிப்போ?-சுவைச்

சோறிருக்க நெல்   உண்பார் எவரோ-தங்கத்

தேரிருக்க   உலா வர  வண்டியோ-ஆடற்

கலையிருக்க ரசிப்பரோ  குத்தாட்டம்-பலாச்

சுளையிருக்கத் தோல் தின்பார் உண்டோ -வாழ்வில்

தலையிருக்க  ஆடலாமோ  வால்?


ஒரு சிறு விளக்கம்: இக்கவிதை பலர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதாக அறிகிறேன்.மன்னிக்கவும். இங்கு ”வால் ”என என்னைப் பற்றியே குறிப்பிட்டிருக்கிறேன் .நிச்சயமாக எந்த உள்குத்தும் இல்லை



20 கருத்துகள்:

  1. கவிதை அருமை. தலை இருக்க வால் ஆடக் கூடாதுதான். ஆனால் ஒவ்வொரு விதிக்கும், விதி விலக்கு உண்டே! எனினும் உங்கள் கருத்தோடு/கவிதையோடு உடன்படுகின்றேன்!

    பதிலளிநீக்கு
  2. வே.நடனசபாபதி சொன்னது…

    //கவிதை அருமை. தலை இருக்க வால் ஆடக் கூடாதுதான். ஆனால் ஒவ்வொரு விதிக்கும், விதி விலக்கு உண்டே! எனினும் உங்கள் கருத்தோடு/கவிதையோடு உடன்படுகின்றேன்!//

    புயல் வேக வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  3. aada thaan koodaathu!

    ethu thalai -
    ethu vaalu-
    athuthaane ayya-
    namma naattu-
    "arasiyalu"

    பதிலளிநீக்கு
  4. ஐயா சிறு சந்தேகம் சரி வேண்டாம் பதிவர் சந்திப்பில் பார்த்து தெரிந்து கொள்கிறேன் .

    பதிலளிநீக்கு
  5. Sasi Kala சொன்னது…

    //ஐயா சிறு சந்தேகம் சரி வேண்டாம் பதிவர் சந்திப்பில் பார்த்து தெரிந்து கொள்கிறேன் .//
    புரிந்து விட்டதா?!:)
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கனியிருப்ப காய்,தலையிருக்க வால்,,,,ஒன்றற்று ஒன்று இல்லையே சார்?

    பதிலளிநீக்கு
  7. விமலன் சொன்னது…

    // கனியிருப்ப காய்,தலையிருக்க வால்,,,,ஒன்றற்று ஒன்று இல்லையே சார்?//
    கனி ஒரு நாள் காயாகலாம்;வால் என்றும் தலையாகாதே!
    நன்றி விமலன்

    பதிலளிநீக்கு
  8. கார்த்திய உள்குத்து போடுறீங்களா வாலுனு பில்லாக்கு முன்னாடி சகுனி ன்னு

    பதிலளிநீக்கு
  9. PREM.S சொன்னது…

    // கார்த்திய உள்குத்து போடுறீங்களா வாலுனு பில்லாக்கு முன்னாடி சகுனி ன்னு//
    அரசியல்,சினிமா,உள்குத்து ,வெளிக்குத்து இதெல்லாம் நமக்கு ரொம்ப தூரம்!இது விஷயமே வேறே!

    பதிலளிநீக்கு
  10. எங்கயோ எப்பவோ இதுமாதிரி ஒன்ன கேட்ட ஞாபகம்....நீண்ட நாளைக்கப்புறமா இப்ப உங்க ப்ளாக்ல பார்க்கிறேன்...:)

    பதிலளிநீக்கு
  11. தல இருக்க வால் ஆடலாமா?

    அருமையான கவிதை...

    பதிலளிநீக்கு
  12. சிட்டுக்குருவி சொன்னது…

    // எங்கயோ எப்பவோ இதுமாதிரி ஒன்ன கேட்ட ஞாபகம்....நீண்ட நாளைக்கப்புறமா இப்ப உங்க ப்ளாக்ல பார்க்கிறேன்...:)//
    இது மாதிரி ஏதாவது இருக்கலாம்.நிச்சயமாக இதுவல்ல.இது இன்று காலை நடந்த ஒரு நிகழ்வின் பாதிப்பில் பொங்கி வந்த கவிதை.சிலருக்கு மட்டுமே புரியலாம்!
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. அத்தனையும் உண்மைதான். உணர்ச்சி பிழம்பாய் உதித்து வந்துள்ள வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. தலையிருக்க ஆடலாமோ வால்?

    இளைய தளபதியின் பிறந்த நாள் கொண்டடதிர்க்கான வாழ்த்துப் பா வா அய்யா

    டௌப்டு

    படித்துப் பாருங்கள்

    வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்

    பதிலளிநீக்கு
  15. நிச்சயம் ஆட கூடாதுதான்....

    பதிலளிநீக்கு