தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூன் 25, 2012

புரிந்து கொள்ளலும்,புரிய வைத்தலும்!


ஒருவரது எண்ணத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது எப்படி?

நமது கருத்துக்களைத் தெரிவிக்க மொழி உதவுகிறது.

ஆனால் நான் சொல்வதை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நான் பேசும் மொழியை அவரும் அறிந்திருக்க வேண்டும்.இல்லையெனில் நான் சொல்வதெல்லாம் அவருக்கு வெறும் ஓசைதான்.

மொழி தெரிந்தவராகவே இருப்பினும் ,நான் சொல்வதை அவர் புரிந்து கொள்ளுமாறு சொல்லுதல் அவசியம்.

’பூடகமாக’ச் சொல்லுதல் என்பார்கள்.அதாவது சொல்ல நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல்,வேறு விதமாக மறைத்துச் சொல்லுதல். அப்படிச் சொல்கையில் அக்கருத்தை மற்றவர் அதே பொருளில் புரிந்து கொள்ளலாம்;என்னவென்று புரிந்து கொள்ளாமல் குழம்பலாம்;அல்லது அதற்கு நேர்மாறான பொருளையும் கொள்ளலாம்.அதுதான் ஆபத்தே!

சரியான புரிதல் இல்லாதபோது மன வருத்தம் ஏற்படுகிறது.அவ்வாறு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதைச், சொன்னவர் உடனே தெரிந்து கொண்டால் தன் உண்மையான கருத்தைச் சொல்லி அதை மாற்ற முயலலாம்.ஆனால் மற்றவர் காயப்பட்டிருக்கிறார் எனத் தெரியாமலே போகும் போது, அறியாமலே விரிசல் ஏற்பட்டு விடுகிறது.

எனவே எப்போதுமே கருத்தை எந்த விதமான ஐயத்துக்கும் இடமின்றித் தெளிவான மொழியில் வெளிப்படுத்த வேண்டும். நான் சொல்வது இதுதான் என ஐயமின்றி மற்றவர் உணர வேண்டும். இல்லையேல் குழப்பம்தான்

பிறிது மொழிதல் அணி,வேற்றுப் பொருள்வைப்பணி எல்லாம் இலக்கியத்தில் நயமாக இருக்கலாம்;ஆனால் அன்றாட வாழ்வில், குழப்பத்தையும், வருத்தத்தையுமே ஏற்படுத்தும். சொல்வதை நேரடியாகச் சொல்லி விட்டால் குழப்பமில்லை,வருத்தமில்லை!எனவே பேச்சில் அணிகளே வேண்டாம்!

சொல்வதைச் சுருக்கமாக ஆனால் நன்கு புரியம்படிச் சொல்வது என்பது ஒரு கலை.இக்கலையில் தேர்ந்தவன் அனுமன்.

சீதையைத்தேடிச் சென்று திரும்பியவுடன்,இராமனும்,மற்றவரும் எத்தனை ஆவலுடன் செய்திக்காகக் காத்திருப்பர் என்பதை அவன் அறிவான். ”சீதையை” எனத் தொடங்கினால், பார்த்தானா,பார்க்கவில்லையா என்ற பதட்டம் மிகும்.எனவே சொல்கிறான் பாருங்கள்
   
கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்;
 தெண்டிரை யலைகடல் இலங்கைத் தென்னகர்
 அண்டர் நாயக! இனித் துறத்தி; ஐயமும்
  பண்டுள துயரும் என்று அநுமன் பன்னுவான்.”

எனவே முதலில் ’கண்டனன்’ என்று சொல்லி விடுகிறான்.பின் அவள் இலங்கையில் எப்படியிருக்கிறாள் ,இராவணனின் அந்தப்புரத்தில் சுகமாக வாழ்கிறாளோ என்ற ஐயம் இராமனுக்கில்லாவிடினும் பிறர்க்கு எழலாம்.  எனவே சொல்கிறான்”கற்பினுக்கு அணியை” . ஒரு வேளை இவன் கனவில் கண்டிருக்கலாம், அல்லது பிரமையாக இருக்கும் என்ற ஐயத்தைத் தவிர்ப்பதற்காகச் சொல்கிறான்”கண்களால்

எனவேதான் அவன் சொல்லின் செல்வன்.

நான் சொல்லின் மற்றவர் செல்வர்!

ஆனால் இதே அனுமன் அதிகம்பேசிப் புலம்புவும் செய்யும் ஒரு நேரம் வருகிறது,மாயா சீதைப் படலத்தில்-இந்திரசித்து,ஒரு மாய சீதையை அனுமன் முன் கொல்ல அதைக்கண்டு அனுமன் பலவாறு புலம்புகிறான்.அதில் ஒரு பாடல்  

”கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதனாகிச்
சொல்விக்க வந்துபோனேன் நோவுறு துயர்செய்தாரை
வெல்விக்க வந்துநின்னை மீட்பிக்க அன்றுவெய்தின்
கொல்விக்க வந்தேன் உன்னைக் கொடும்பழி கூட்டிக் கொண்டேன்”

அதிகமான சோகம் ஏற்படும்போது   பேச்சு,புலம்பல் அதிகமாகிறது.(அக்கால ஒப்பாரிப் பாடல்கள் எல்லாம் இந்த ரகம்தான்)

சோகம் மட்டுமல்ல,குழப்பம் ஏற்படும்போதும் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல் அதிகமாகிறது.

செகப்பிரியரின் ஒத்தெல்லோவில் இயாகோவின் தனிப்பேச்சுகள் அத்தன்மையவை. கோல்ரிட்ஜ் அழகாகச் சொல்வார்”காரணம் இல்லாத   கெட்ட எண்ணத்தின் காரணம் தேடுதல் ”—motive hunting of  motiveless malignity-என்று .

ஹேம்லெட்டின் பிரபலமான தனிப்பேச்சும் –இருப்பதா,இறப்பதா,அதுதான் கேள்வி(to be or not to be ,that is the question) இத்தன்மையதுதான்.

என் பேச்சு இன்று சிறிது அதிமாகி விட்து;

எனக்குச் சோகமும் இல்லை;குழப்பமும் இல்லை!

பின் ஏன்?

வேறு வேலை இல்லை!!

35 கருத்துகள்:

 1. உண்மை., சொல்வதை சுருக்கமாகவும் தெளிவாகவும், நேரடியாகவும் கூறிவிட வேண்டும்.!

  பதிலளிநீக்கு
 2. புரியவைத்து புரிந்துகொள்ளச் செய்தீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. புரிந்து கொள்ளலும்,புரிய வைத்தலும்!

  தாங்கள் [ரத்தின சுருக்கமாக] முடிவாகச் சொல்லியுள்ள மூன்றே மூன்று வார்த்தைகளில், எல்லாவற்றையுமே புரிய வைத்து விட்டீர்கள், நாங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஒரு பொருளைச் சொல்லி, பல பொருளைப் படிப்பவருக்கு உணர்த்தும் தாங்களும் ஒரு சொல்லின் செல்வர் என்பதில் ஐயமே இல்லை நண்பரே...

  பதிலளிநீக்கு
 5. பூடகமாக பேசுபவர்களை புரியாமல் நான் பல நண்பர்களை இழந்திருக்கிறேன்...!

  பதிலளிநீக்கு
 6. புரிந்து கொள்ளலும்,புரிய வைத்தலும்!//

  அம்பைப்போல...

  பதிலளிநீக்கு
 7. சொன்னதெல்லாம் நல்லாருக்கு. கடைசி பன்ச் நயமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 8. நாம் சொல்லும் சொல் மற்றவர்களுக்கு புரிய வேண்டும் இது இலக்கியங்கள் கூறும் உண்மை..

  இருமையா சொன்னீங்க அங்கிள்.....

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பேச்சு இன்று அதிகமானாலும் அழகாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. பிறிது மொழிதல் அணி,வேற்றுப் பொருள்வைப்பணி எல்லாம் இலக்கியத்தில் நயமாக இருக்கலாம்;ஆனால் அன்றாட வாழ்வில், குழப்பத்தையும், வருத்தத்தையுமே ஏற்படுத்தும்.

  பதிலளிநீக்கு
 11. Brievity is the soul of wit என்று சொல்வார்கள் . திருக்குறளை உதாரணமாக கொள்ளலாம் . சாண்டில்யன் பாணியில் விரிவாக குழப்பவும் வேண்டாம் / மறைந்த திரு GK மூப்பனார் பாணியில் சுருங்க பேசியும் குழப்ப வேண்டாம் .. தெளிவாக அதே சமயம் சுருங்கவும் சொல்லுவது ஒரு கலையே . எல்லோரும் அனுமன் அல்ல திருவள்ளுவர் ஆக முடியாது .. எவ்வாறெல்லாம் பேசலாம் எவ்வாறெல்லாம் பேசக்கூடாது மற்றும் தனியே புலம்புவது (soliloquy ) என்று எல்லாவற்றையும் சுருங்க கூறி (!) விட்டர்கள் ... எனக்கே நான் என்ன கூற வருகிறேன் என்று புரியவில்லை ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 12. அருமை ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட கட்டுரை போல ....வாழ்த்துக்கள் ..........ஆனாலும் மொழியை கையாள்வதில் கூட காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்கள் நிகழ்நதுகொண்டுதான் இருக்கிறது

  தனிமனிதனின் எண்ணத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுதல்கள் வரவேற்க படுகின்றன அவசர காலத்தில் வார்த்தைகளை எப்படி பிரயோகிக்க வேண்டும் ? அதிக நேரம் இருக்கும் போது எப்படி வார்த்தைகளை இழுக்க வேண்டும் என்றெல்லாம் ஒவொருவருக்கு ஒரு ரசனை இருக்கிறது ......எது எப்படினாலும் நேரடி பொருள் தரும் வாக்கியங்களை விட மறை பொருளுக்கு மனித மனம் எப்போதும் ஆசையும் தேடலும் கொள்கிறது என்பதை மறுக்க முடியாது ...,அதனால் தான் உள்ளுறை உவமைகளும் உவமானங்களும் ,இறைச்சிகளும் அன்றே பிரபலமாக இருந்தது அதன் நீட்சிதான் இன்றும் கவிதைகளுக்கு கிடைக்கும் ஆதரவு .....

  பதிலளிநீக்கு
 13. இன்றுதான் தங்கள் வலைக்கு என் முதல் வருகை.முதல் வருகையிலேயே ஐயா மனதைக் கவர்ந்துவிட்டது தங்களது வலைத்தளம்.இனியும் தொடர்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்வரவு.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்தாரா மகேஷ்

   நீக்கு
 14. //சொல்ல நினைப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல்,வேறு விதமாக மறைத்துச் சொல்லுதல். அப்படிச் சொல்கையில் அக்கருத்தை மற்றவர் அதே பொருளில் புரிந்து கொள்ளலாம்;என்னவென்று புரிந்து கொள்ளாமல் குழம்பலாம்;அல்லது அதற்கு நேர்மாறான பொருளையும் கொள்ளலாம்.//

  உண்மைதான் ஐயா.அனுபவ ரீதியாக உணர்ந்ததுண்டு.பயனுள்ளதொரு பதிவு.பகிர்வுக்கு நன்றி ஐயா.
  Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு