தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூன் 14, 2012

பக்கத்து இருக்கையில் யார்!

ஒரு முறை,வெளியூர் சென்று திரும்பும்போது,  பேருந்தில் எனக்குப் பக்கத்து இருக்கையில் இளைஞன் ஒருவன்
வந்து  அமர்ந்தான்.பேருந்து புறப்பட்ட அடுத்த நிமிடமே, அவன் தூங்க ஆரம்பித்தான்.ஆழ்ந்த உறக்கத்தில் அவன் சாய்ந்து என் மீது விழ ஆரம்பித்தான்.ஓரிரு முறை அவனைத் தள்ளி விட்டேன்.ஆனால் மீண்டும் மீண்டும் அவன் மீது சாய ஆரம்பித்தான்.
       மீண்டும் அவன் என் மீது சாயும் தருணத்தில் நான் சிறிது முன்னே நகர்ந்து கொள்ள, அவன் எனக்கும் இருக்கையின் சாய்மானப் பலகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்து ,பின் சமாளித்து எழுந்தான்.பின் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் என்னிடம் சொன்னான் ”நேத்து ராத்திரி பூரா ரயிலில் தூக்கமே இல்லை.நிக்க இடம் கிடைத்ததே பெரிய விஷயம். ரயிலி லிருந்து  இறங்கி இப்ப என் ஊருக்குப் போயிட்டிருக்கேன்.  அதனாலதான் தூங்கி உங்க மேல சாஞ்சுட்டேன் ஸார்.” அவனைப் பார்க்கப் பாவமாகத்தான்  இருந்தது.ஆனால் சம்பந்தமே இல்லாத ஒருவன் தூங்குவதற்கு என்  தோளைக் கொடுக்க முடியுமா?
     யோசித்தேன்.இவனுக்கு என் பையன் வயதுதான் இருக்கும். அவனைப் போன்றுதான் இவனும் உடை அணிந்தி ருக்கிறான். இதே இடத்தில் என் பையன் இருந்தால் நான் என்ன செய்தி ருப்பேன். அவன் சாய்ந்து தூங்குவதற்கு வாகாக என் தோளைக்   கொடுத் திருப்பேன். அவன் தூக்கம் கெட்டு          விடாமல் பார்த்துக் கொண்டி ருப்பேன். ஆனால் இப்போதோ? அவனது தூக்கத்தைக் கலைப்பதற்கான வழிகளை நான் முயன்று கொண்டி ருக்கிறேன்.ஏன் இப்படி.?—இவன் எனக்கு சம்பந்தமில் லாதவன்,எவனோ ஒருவன் என்கிற என் மனோ பாவம்.    இவனிலும் நான் என் பையனைக்காண முடிந்தால் என் நடத்தை வேறு விதமாக இருக்கும்..
இது போன்ற நேரங்களில், சொந்தமில்லாதவர், சொந்த மானவர் என்பது மட்டுமே அளவு கோல் அல்ல. 


பெரும்பான்மையோருக்கு பக்கத்து இருக்கையில் ஒரு அழகிய இளம் பெண் அமர்ந்தால் துள்ளும் மனது,ஓர் உடல் தளர்ந்த அழுக்கான  முதியவள் அமர்ந்தால் சுருங்கிக் கொள்கிறது. நன்கு உடையணிந்த நபர் அமர்ந்தால் வரவேற்கும் மனது, அழுக்கான உடையணிந்த எவரேனும் அமர்ந்தால் கூசிப் போகிறது.அந்நபரது வயது மற்றும் தோற்றம் இவையும் நமது மன நிலையைத் தீர்மானிக்கின்றன.. 


ஹரியானாவில் நான் வங்கி ஆய்வுப் பணியில் இருந்த போது பல கிராமங்களுக்குப் பேருந்தில் செல்ல வேண்டி இருந்தது. அழுக்கான உடை அணிந்த கிராம வாசிகள் அருகில் அமரும் போது முதலில் உடல் கூசியது.ஆனால் யாராவது மாணவர்கள், நன்கு உடையணிந் தவர்கள் அமர்ந்தால் பிரச்சினை இருந்ததில்லை. காலப் போக்கில் என் மனம் பக்குவப்பட்டு அருகில் அமர்பவர் பற்றிய கவலை இல்லாத நிலை ஏற்பட்டது.எனவே அடிப்படையில் மனோபாவம் மாற வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம் எளிதில் வராது.ஆனால் ஓரளவுக்குச் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள, நேசிக்கக் கற்றுக்கொள்ள  வேண்டும். இயலாவிடின் குறைந்த பட்சம்  தேவையற்ற வெறுப்பை வளர்ப்பதைத் தவிர்க்க முயல வேண்டும்.

“ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”

36 கருத்துகள்:

 1. அனிபிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. //“ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”//

  பல சமயங்களில் இது ஏனோ முடிவதில்லை எல்லோராலும். ஆனாலும் செய்யத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நீங்க சொல்லியிருப்பது உண்மை. எனினும் செயல் அரிது.

  பதிலளிநீக்கு
 4. //ஓரளவுக்குச் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள, நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இயலாவிடின் குறைந்த பட்சம் தேவையற்ற வெறுப்பை வளர்ப்பதைத் தவிர்க்க முயல வேண்டும்.//

  சரியாய் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. //எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவம் எளிதில் வராது.//

  ஆம் வரவே வராது. இதே விஷயத்தை என் நகைச்சுவைச் சிறுகதையொன்றில் எழுதியுள்ளேன்.

  நேரமிருந்தால் படித்துவிட்டு கருத்துக்கூறுங்கள், ஐயா.

  இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 6. ஓரளவுக்குச் சக மனிதர்களைப் புரிந்து கொள்ள, நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இயலாவிடின் குறைந்த பட்சம் தேவையற்ற வெறுப்பை வளர்ப்பதைத் தவிர்க்க முயல வேண்டும்.//

  அருமையான கருத்து
  சொல்லிச் சென்ற் விதம் மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. இந்த பதிவ படிச்சவுடன் எனக்கு ஞாபகம் வருது..நான் காலேஜ் படிக்கும் போது கோவையில் இருந்து சேலம் சென்று விட்டு அங்கே நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு ரொம்ப அலுப்புடன் நள்ளிரவு வண்டி ஏறி கோவை வந்த போது இப்படிதான் அருகில் இருந்த மனிதரிடம் தூங்கி தூங்கி விழுந்தேன்.அவர் மிக பெருந்தன்மையாக என்னை தோளில் தாங்கி என்னை தூங்க வைத்தார்.கோவை வந்தவுடன் அவருக்கு நன்றி தெரிவித்தேன் கூடவே மன்னிப்பும்

  பதிலளிநீக்கு
 8. அடிப்படையில் மனோபாவம் மாற வேண்டும்...//

  சரியாய் சொன்னீர்கள் பித்தரே...

  பதிலளிநீக்கு
 9. இந்த பக்குவம் எல்லோருக்கும் எளிதில் கிட்டிவிடாது.!

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் சொல்லியிருக்கும் மனோபாவத்தைக் கைக் கொள்ளுதல் மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால் கைக் கொண்டால் நல்லது. (ஆனால் பஸ்ஸில், ரயிலில் இப்படித் தூங்கி அடுத்தவர் தோள் மீது தலை சாய்க்கும் ஆசாமி்களை எனக்கு சற்றும் பிடிப்பதில்லை- உறவாகவே இருந்தாலும்! உடலும் தலையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அசையாமல் தூங்கவும் முடியும் என்பது என் அனுபவம்.)

  பதிலளிநீக்கு
 11. பேருந்து பயணம் சுகமாய் அமைவைதில் பயணச்சீட்டை விட பக்கத்து சீட்டு அமைவதில்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும்”

  முத்தாய்ப்பான வரிகளுக்குப் பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 13. தங்கள் தளத்திற்கு இது தான் என் முதல் வருகை அய்யா.

  பேருந்துப் பயணத்தில் நானும் தூங்கி விழும் ஜாதி தான், தோள் கொடுக்க தோழன் இருந்தால் மட்டுமே தொங்கும் ஜாதி. இல்லையேல் கம்பியில் சாய்ந்து கொள்வேன். பிறர் தோளில் சாய மாட்டேன் காரணம், பிறரால் நாம் பட்ட அவஸ்தை நமக்குத் தானே தெரியும்.


  படித்துப் பாருங்கள்

  வாழ்க்கைக் கொடுத்தவன்

  பதிலளிநீக்கு
 14. சகிப்புத் தன்மை இல்லாததுதான் பல பிரச்சினைகளுக்கும் காரணம். அருகே அமர்ந்த மாணவனோடு உங்கள் மகனை ஒப்பிட்டு பார்த்தமை நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
 15. :) The society always give priority to the physical appearance of a person, then only consider the mental attitudes. This is the nature of every human. No man can act as a GOD by bearing all kind of people. However few are there. You also may be an exception sir! Hats off! :)

  Lali
  http://karadipommai.blogspot.in/

  பதிலளிநீக்கு
 16. நிதர்சனமான உண்மை. நிஜத்தில் நம் மனம் புற அழகையே வெகுவாய் விரும்புகிறது.

  பதிலளிநீக்கு
 17. நன்றி வைகோ சார்.நிச்சயம் படிக்கிறேன்.நன்றி

  பதிலளிநீக்கு
 18. @சீனு
  முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
  கட்டாயம் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. அன்பே கடவுள் என்றால் அன்பிறகு ஈடேது சொல்...
  அன்பே இன்பம் என்றால் அன்பிற்கு விலை ஏது சொல்????

  பதிலளிநீக்கு
 20. கடைப்பிடிப்பது கஷ்டந்தான்,முயன்று பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு