தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஜூன் 19, 2012

வெவகாரம் வேலுச்சாமியும்,சிபியும்!


நாந்தானுங்க,வெவகாரம் வேலுச்சாமி பேசுறேன்!

எனக்கு ஒரு விசயம் காமெடியா இருக்குங்க.

நேத்து என் அய்யனோட  நாயம் பேசிட்டு இருந்தங்க.

அப்போ வள்ளல்கள் பத்தியெல்லாம் பேச்சு வந்துச்சுங்க.
ரொம்ப இரக்க சுபாவம் உள்ள மனுசங்க பத்திப் பேசினோமுங்க.
அப்பத்தாங்க எனக்கு இது தோணிச்சு.

உங்க எல்லாருக்கும் சிபி தெரியுமில்லீங்க?

ஏனுங்க முளிக்கிறீங்க?

ஓ!வெறுமனே சிபின்னு சொன்னாத் தெரியலீங்களாக்கு!

அதாங்க,சக்கரவர்த்தி!

நான் சொல்றது நாட்டுக்குச் சக்கர வர்த்திங்கோ.

தமிழ்ப் பதிவுலகத்துக்கு இல்லீங்கோ!
அவரு வேற!இவரு வேற!

கழுகு புறாவைத் தொரத்திட்டு வந்துச்சாமா!இவரு புறாவைக் காப்பாத்த அதனோடு எடைக்கு ஈடா தன் தொடைச் சதையை அறுத்துக் கொடுத்தாராமா!
கேனத்தனமா இல்லீங்க?

கையைத்தட்டினா சேவகன் வருவான்.அரண்மனையில் இல்லாத கறியா? ஆடு,மாடு,கோழி இப்படி ஏதாவது நூறு மடங்கு எடைக்குக் கூடக் குடுத்திருக் கலாமில்ல!அத்தை விட்டுப் போட்டு தொடைக்கறி குடுத்தாராமா!

இப்படித்தாங்க பாரி.பெரிய வள்ளலுங்க!

காட்டில தேரில வரும்போது பிடிப்பில்லாம் வாடற கொடியப் பத்தாராமா! உடனே தேரில அதைப் படர விட்டுப் போட்டு நடந்தே அரண்மனை திரும்பினாராமா!

ஏனுங்க!இதை என்னன்னு சொல்ல?

கூடவே வந்த சேவகங்க கிட்டச் சொல்லி பக்கத்தில இருக்கற நாலு குச்சியை எடுத்து சப்போர்ட் குடுக்கச் சொல்லிப் போட்டு அப்புறமா வந்து பக்காவா பந்தல் போட ச் சொல்லிருக்காமில்ல?

இப்படித்தாங்க ஒரு பதிவரு. ஒரு பொன் மாலைப் பொழுதில்,ரோட்டில குடிகாரன் விழுந்து கிடந்தானாமா!இவரு எரக்கப்பட்டு ஓரமாத் தூக்கிப் போட்டுட்டுப்போனாராமா! ஏனுங்க,இந்த வேண்டாத வேலை!அவன் முழிச்சிக்கிட்டு என் செயினை காணும்,பர்ஸைக் காணும்னு சொல்லி இவரைகண்டு பிடுச்சுக் கேட்டா பிரச்சினைதானே? மத்தவங்கல்லாம் பேசாம போகலே?அது மாதிரி போக வேண்டியதுதானே?

 என்னவோ சொல்லணும்னு தோணிச்சுங்க.சொல்லிட்டேன்.

அப்பப்ப வருவேன்!

டிஸ்கி:கருத்துகள் வெவகாரம் வேலுச்சாமி யுடையவை!அவற்றுக்கும்,வலைப்பூ உரிமையாளருக்கும்  எந்த  சம்பந்தமுமில்லை!

45 கருத்துகள்:

 1. வேலியில் போவதை.....அப்படீங்கிறீங்க...... ம்

  பதிலளிநீக்கு
 2. ஆஹா... வெவகாரம் வேலுச்சாமி ஒரு மார்க்கமா கௌம்பிட்டாருய்யா... எனக்குக் கூட இவரை மாதிரி சிலவிஷயங்கள்ல வெவகாரமான கேள்விகள் தோணறதுண்டே...

  பதிலளிநீக்கு
 3. வள்ளல்கள் பற்றிய அலசல் நன்றாக இருந்தது ஐயா.

  பதிலளிநீக்கு
 4. Sibi iduppai killiyda nadigai...viraivil. chennai pithan padhivil.

  பதிலளிநீக்கு
 5. பயங்கர போர்

  பதிலளிநீக்கு
 6. கருத்துக்கள் வெவகாரம் வேலுச்சாமியுடைதாய் இருக்கலாம். ஆனால் அதை வெளியிட்ட தங்களுக்கு சம்பந்தமில்லை என்று எப்படி சொல்லலாம்????

  பதிலளிநீக்கு
 7. வெவகாரம் வேலுச்சாமி,அடிகடி வாங்க!
  கருத்து நல்லாயிருக்கு!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. நான் கூட உள்குத்தோன்னு நெனைச்சிட்டேன்...!

  பதிலளிநீக்கு
 9. வெவகாரமான கேள்விகள் என்றாலும் சிந்திக்க தூண்டு கின்றது இவ்வளவு காலமும் இந்த கதைகளை கேட்டபோது அட இப்படி யோசிக்கலையேனு யோசிக்க தோனுது பாஸ்

  பதிலளிநீக்கு
 10. விவகாரம் வேலுச்சாமி விவரமான
  ஆசாமிதான்.அவர் எடக்கு மடக்கா பேசுவது போல
  இருந்தாலும் எல்லாம் சரியாகத்தானே இருக்கு
  அவருக்கு அனேகமா கூடிய விரைவில் ரசிகர் மன்றம்
  துவங்கலாம் என நினைக்கிறேன்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. யோவ்! வெவகாரம் வேலுச்சாமி.அந்த மாதிரியெல்லாம் யோசிக்காம செஞ்சதாலே தான் அவுகளையெல்லாம் வள்ளல் ன்னு சொல்றோம்.யோசனை செஞ்சா மனசு செய்ய வேண்டாம்னு சொல்லிரும்வே.சிபி ரொம்ப நல்லவரு.நான் பதிவரெ சொன்னேன்.அவர வம்புக்கு இழுக்காதீங்க.அப்புறம் பதிவுலகம் ரென்டாயிரும்.

  பதிலளிநீக்கு
 12. டிஸ்கி:கருத்துகள் வெவகாரம் வேலுச்சாமி யுடையவை!அவற்றுக்கும்,வலைப்பூ உரிமையாளருக்கும் எந்த சம்பந்தமுமில்லை!/////


  ஐயா...... நீங்களுமா?

  பதிலளிநீக்கு
 13. ஐயோ எனக்கு வடிவேல் பட ஜோக்குத்தான் ஞாபகத்துக்கு வருகுது...:)

  பதிலளிநீக்கு
 14. இப்படித்தாங்க ஒரு பதிவரு. ஒரு பொன் மாலைப் பொழுதில்,ரோட்டில குடிகாரன் விழுந்து கிடந்தானாமா!இவரு எரக்கப்பட்டு ஓரமாத் தூக்கிப் போட்டுட்டுப்போனாராமா! ஏனுங்க,இந்த வேண்டாத வேலை!அவன் முழிச்சிக்கிட்டு என் செயினை காணும்//


  அந்த ஜோக்குல ஹெரோயின இல்ல கேட்டான்.....:)

  பதிலளிநீக்கு
 15. நீங்க கூட றொம்ப விவகாரமான கருத்தத்தான் சொல்லீட்டு போயிருக்கீங்க..

  அருமை அங்கிள்....

  பதிலளிநீக்கு
 16. விவகாரம் வேலுச்சாமி விவரமாத்தான் கேட்டு இருக்காரு!

  கருத்து அவரோடதா இருந்தாலும், பதில் நீங்க தானே சொல்லணும்... :)

  பதிலளிநீக்கு
 17. பின்னூட்டங்களுக்கான பதிலையும் வெவகாரம் வேலுச்சாமியே சொல்கிறார்!

  பதிலளிநீக்கு
 18. மனசாட்சி™ சொன்னது…

  //வேலியில் போவதை.....அப்படீங்கிறீங்க...... ம்//

  சரிதாங்கோ!---
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 19. பா.கணேஷ் சொன்னது…

  //ஆஹா... வெவகாரம் வேலுச்சாமி ஒரு மார்க்கமா கௌம்பிட்டாருய்யா... எனக்குக் கூட இவரை மாதிரி சிலவிஷயங்கள்ல வெவகாரமான கேள்விகள் தோணறதுண்டே...//

  கேள்வி கேட்டாத்தானுங்களே பதில் கெடைக்கும்
  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 20. அவிங்க அப்பிடி செய்ததுனாலதானே அதெல்லாம் பாட புஸ்தகத்துல வந்துருக்கு ஹி ஹி வரலாறு முக்கியம் அமைச்சரே ஹி ஹி...

  பதிலளிநீக்கு
 21. Sasi Kala சொன்னது…

  //வள்ளல்கள் பற்றிய அலசல் நன்றாக இருந்தது ஐயா.//

  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 22. ! சிவகுமார் ! சொன்னது…

  // Sibi iduppai killiyda nadigai...viraivil. chennai pithan padhivil./

  ஏனுங்க!நீங்க சொறது புரியலீங்க!
  ஆனலும் நன்றிங்க!

  பதிலளிநீக்கு
 23. பெயரில்லா சொன்னது…

  // பயங்கர போர்//
  ஆமாங்க!பேரே இல்லன்னா பயங்கர போருதாங்க!
  நன்றி

  பதிலளிநீக்கு
 24. அட நம்ம சிபி இல்லையா?

  பதிலளிநீக்கு
 25. விவகாரமான பதிவோடு வேலுச்சாமி என்டர்...
  தொடரட்டும் வேலுச்சாமியின் விலலங்க விஸ்தரிப்புக்கள்.

  பதிலளிநீக்கு
 26. வெவகாரம் வேலுச்சாமி என்ற புதிய பாத்திரப் படைப்பு. கலக்கட்டும்

  பதிலளிநீக்கு
 27. புதிய பாதை. பதிந்த கருத்து நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 28. @வே.நடனசபாபதி
  டிஸ்கி என்றாலே disclaimer thaan

  பதிலளிநீக்கு