இதுவும் ஒரு பொன் மாலைப் பொழுது நிகழ்வே!
பொன் மாலைப் பொழுது எனச் சொல்வதை விடப் பின் மாலைப் பொழுது என்று சொல்லலாம்.
மாலை கோவிலுக்குச் சென்று வழிபாடு முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.
அன்று பேண்ட்,டீ சர்ட் இல்லை;வேட்டி சட்டைதான்.கோவிலுக்குச் சென்று திரும்புவதால் நெற்றியில் திருநீறு,குங்குமம்!
மெள்ள இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம்.ஒரு தெருவில் வந்து கொண்டிருந்த போது,ஓரிடத்தில் சாலையோரத்தில் ஒருவர் படுத்துக் கிடக்கக் கண்டேன்.அருகில் சென்று பார்த்தேன்.குடி மகன்தான் .அளவுக்கு மீறிக் குடித்து விட்டு நினைவின்றி விழுந்து கிடந்தார்.அவர் கிடந்த இடத்தில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. இன்னும் இருட்டி விட்டால் உற்றுப் பார்க்கவில்லையெனில் அவர் அங்கு கிடப்பதே தெரியாமல் போய் விடும்.
அந்தத்தெருவில் அவ்வளவாகப் போக்குவரத்துக் கிடையாது.எனவே அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் வேகமாகவே செல்லும். அவ்வாறு செல்லும் ஏதாவது வாகனம் கவனிக்காமல் அவர் மீது ஏறி விட வாய்ப்பு மிக அதிகம்.என் மனதில் கவலை சூழ்ந்தது.இவரது அந்தத் தவறுக்கு விலை அவரது உயிரோ, கை கால்களோ என்றால் அது மிக அதிகம்.அது நிகழக் கூடாது.அவரை சாலை யிலிருந்து நடை மேடை மேல் தூக்கிப் படுக்க வைப்பது நல்லது எனத் தீர்மானித்தேன்.
ஸ்கூட்டரில் வந்த ஒரு நபரை கைகாட்டி நிறுத்தி,விஷயத்தைச் சொன்னேன்.அவர் சொன்னார்”உங்களுக்கு ஏன் சார் வேண்டாத வேலை?ஏதாவது பிரச்சினை வந்து சேரும்.பேசாமல் போங்க”சென்று விட்டார்.
அடுத்து நடந்து வந்து கொண்டிருந்த ஒருவரை அணுகிப் பேசினேன்.அவர் என்னையும்,விழுந்து கிடக்கும் நபரையும் பார்த்து விட்டு.எதுவுமே பேசாமல் கையை ஆட்டி விட்டு வேகமாகச்(முதலில் வந்துகொண்டிருந்ததை விட வேகமாக) சென்று விட்டார்.
இனி சரியான நபரிடம் உதவி கேட்க வேண்டும் எனக் காத்திருந்தேன்-ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும்.வந்தார்.சைக்கிளில் வந்த அவரை நிறுத்தினேன். சொன்னேன்.என்னுடன் வந்தார்.இருவரும் சேர்ந்து குடிமகனை நடை மேடையில் தூக்கிப் படுக்க வைத்தோம்.அவர் புறப்படத் தயாரானார்.
நான் சொன்னேன்”யாருமே உதவிக்கு வராதபோது உதவியதற்கு நன்றி”
கண்கள் பனிக்க அவர் சொன்னார்”எனக்கெதுக்கு சார் நன்றி.முன் பின் தெரியாத ஒருவருக்காகக் கவலைப் பட்டுக் காத்திருந்து உதவி செய்த உங்களுக்கு உதவினேன். அவ்வளவே. உங்க நல்ல மனசுக்கு ஆண்டவன் உங்களை ரொம்ப நல்லா வைத்திருப்பான்” சைக்கிளில் ஏறிச் சென்று விட்டார்.
என் மனம் நிறைந்திருந்தது.செய்த செயலால் மட்டுமல்ல.ஒரு நல்ல உள்ளத்திலிருந்து வந்த அந்த வாழ்த்தாலும்தான்.
ஆனால் அது போன்ற ஒரு சிறிய செயலுக்குக் கூட தயங்குபவர் பலர் இருக்கிறார்களே, ஏன்?என்ன பயம்?பயம் மனித நேயத்தை வென்று விடுகிறதா? ஏன்?ஏன்?
வட வட வடேய்......
பதிலளிநீக்குநீங்க ரொம்ப நல்லவுங்களா இருக்கீங்க அண்ணாச்சி ......
பதிலளிநீக்கு//பயம் மனித நேயத்தை வென்று விடுகிறதா? // நிச்சயமாக இல்லை!
பதிலளிநீக்குமனித நேயம் இருந்தால் அல்லவா அதை பயம் வெல்வதற்கு!!! இன்றைய எந்திர வாழ்க்கையில் நம் வேலையைப்பார்த்து கொண்டு இருந்தால் போதும் என்ற தன்னலம் தான் மேலோங்கியுள்ளது.
உள்ளத்தை தொட்டநல்ல பதிவு. உங்கள் பணி தொடர நல் வாழ்த்துக்கள்.
//பயம் மனித நேயத்தை வென்று விடுகிறதா?// உண்மை தான் சார்..அதுவும் குடிமகன்களுக்கு உதவுவது ரொம்பவே ரிஸ்க். நீ என்ன் என்னைத் தூக்குனேன்னு நம்மையே கேட்பாங்க, கேட்டிருக்காங்க.
பதிலளிநீக்குஆஹா. நல்லவ்ரே
பதிலளிநீக்குமனித நேயம் சுயநல சகதியில் சிக்கி சின்ணாபின்னமாகிவிட்டது ஐயா
பதிலளிநீக்குஉங்களின் மனித நேயத்தை நினைத்து மெய்சிலிர்த்து போனேன்
நீங்க ரொம்ப நல்லவுங்களா இருக்கீங்க அண்ணாச்சி ...... // ரிப்பீட்டு..
பதிலளிநீக்குநல்ல செயல் தான் ஐயா...
பதிலளிநீக்குkoodal bala கூறியது...
பதிலளிநீக்கு// வட வட வடேய்......//
மசால் வட,மிளகு வட,மெது வடேய்!
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு// நீங்க ரொம்ப நல்லவுங்களா இருக்கீங்க அண்ணாச்சி ......//
நன்றி பாலா!
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//மனித நேயம் இருந்தால் அல்லவா அதை பயம் வெல்வதற்கு!!! இன்றைய எந்திர வாழ்க்கையில் நம் வேலையைப்பார்த்து கொண்டு இருந்தால் போதும் என்ற தன்னலம் தான் மேலோங்கியுள்ளது.//
உண்மைதான்!
//உள்ளத்தை தொட்டநல்ல பதிவு. உங்கள் பணி தொடர நல் வாழ்த்துக்கள்.//
நன்றி ஐயா!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு// உண்மை தான் சார்..அதுவும் குடிமகன்களுக்கு உதவுவது ரொம்பவே ரிஸ்க். நீ என்ன் என்னைத் தூக்குனேன்னு நம்மையே கேட்பாங்க, கேட்டிருக்காங்க.//
நடந்திருக்கும்,நடக்கும்.ஆனால் அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா!
நன்றி செங்கோவி!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு//ஆஹா. நல்லவ்ரே//
”எல்லோரும் நல்லவரே”!
நன்றி சிபி!
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு// மனித நேயம் சுயநல சகதியில் சிக்கி சின்ணாபின்னமாகிவிட்டது ஐயா//
சரியே!
// உங்களின் மனித நேயத்தை நினைத்து மெய்சிலிர்த்து போனேன்//
நன்றி ராஜகோபாலன்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு// நீங்க ரொம்ப நல்லவுங்களா இருக்கீங்க அண்ணாச்சி ...... // ரிப்பீட்டு..//
நன்றி கருன்!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல செயல் தான் ஐயா...//
நன்றி கந்தசாமி!
சார், மனிதநேயம் என்பது இல்லாமல் அல்ல. சிலருக்கு குடிகாரர்கள் என்றாலே ஒரு விட அருவருப்பு ஏற்படும். ஆகவே நெருங்க பயப்படுவார்கள். ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தால் உதவி இருப்பார்கள். கொழுப்பெடுத்து போயி தண்ணிய போட்டு ரோட்டில் விழுந்ததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று நினைத்திருக்கலாம்.
பதிலளிநீக்குஎனிவே உங்கள் செயலுக்கு ஒரு சல்யூட்.
உங்க மனசாட்சிக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க. குடிகாரன் அவனைப்பற்றி கவலைப்படுவதில்லை ஆனால் அவனை நம்பியும் சில ஜீவன்கள் இருக்கத்தான் செய்யும். எல்லாம் நன்மைக்கே
பதிலளிநீக்கு”நல்ல மனம் வாழ்க!”...
பதிலளிநீக்குமனிதம் என்பது செத்துப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.... குடித்து விட்டு கிடப்பவர்களோ, விபத்தில் சிக்கிக் கிடப்பவர்களோ அவர்களுக்கு உதவுபவர்களை விடுங்கள், உதவ நினைப்பவர்களே குறைந்துவிட்டனர்....
நல்ல பகிர்வு.
பாலா கூறியது...
பதிலளிநீக்கு//சார், மனிதநேயம் என்பது இல்லாமல் அல்ல. சிலருக்கு குடிகாரர்கள் என்றாலே ஒரு விட அருவருப்பு ஏற்படும். ஆகவே நெருங்க பயப்படுவார்கள். ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தால் உதவி இருப்பார்கள். கொழுப்பெடுத்து போயி தண்ணிய போட்டு ரோட்டில் விழுந்ததற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று நினைத்திருக்கலாம்.
எனிவே உங்கள் செயலுக்கு ஒரு சல்யூட்.//
அந்த நபரின் செயல் தவறே!ஆனால் அதற்காக மோசமாக தண்டிக்கப்பட்டு விடக்கூடாது.நம்மால்’இயன்றதை’ச்
செய்ய வேண்டும் என்பதே அன்று என் எண்ணம்.
நன்றி பாலா!
கே. ஆர்.விஜயன் கூறியது...
பதிலளிநீக்கு//உங்க மனசாட்சிக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க. குடிகாரன் அவனைப்பற்றி கவலைப்படுவதில்லை ஆனால் அவனை நம்பியும் சில ஜீவன்கள் இருக்கத்தான் செய்யும். எல்லாம் நன்மைக்கே//
மிகச்சரி!
நன்றி விஜயன்!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//”நல்ல மனம் வாழ்க!”...
மனிதம் என்பது செத்துப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது.... குடித்து விட்டு கிடப்பவர்களோ, விபத்தில் சிக்கிக் கிடப்பவர்களோ அவர்களுக்கு உதவுபவர்களை விடுங்கள், உதவ நினைப்பவர்களே குறைந்துவிட்டனர்....
நல்ல பகிர்வு.//
உதவ நினைப்பவர்களும்,ஏனோ ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்!
நன்றி வெங்கட்!
//மனித நேயம் இருந்தால் அல்லவா அதை பயம் வெல்வதற்கு!!! இன்றைய எந்திர வாழ்க்கையில் நம் வேலையைப்பார்த்து கொண்டு இருந்தால் போதும் என்ற தன்னலம்
பதிலளிநீக்குதான் மேலோங்கியுள்ளது.//
உண்மைதான் நல்ல பகிர்வு.
Reasons are not to seek. There have been numerous cases when in their attempt to help fellow citizens, people have had to face undesirable consequences. we have read instances of even Police turning a blind eye to the sufferings of unconscious persons right in front of Rajiv Gandhi general Hospital. While the desire to help is always present, it is the fear of consequences that deters people ignore such incidents. Vasudevan
பதிலளிநீக்குFOOD கூறியது...
பதிலளிநீக்கு// மனிதம் மறந்த மனிதர்கள்!//
உண்மை.
நன்றி சார்!
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//மனித நேயம் இருந்தால் அல்லவா அதை பயம் வெல்வதற்கு!!! இன்றைய எந்திர வாழ்க்கையில் நம் வேலையைப்பார்த்து கொண்டு இருந்தால் போதும் என்ற தன்னலம்
தான் மேலோங்கியுள்ளது.//
// உண்மைதான் நல்ல பகிர்வு.//
நன்றி!
@Vasu,
பதிலளிநீக்குyou are civing the reasons.why have we come to such a stage?
thank U vasu!
ஐயா
பதிலளிநீக்குதங்களின் தொண்டு உள்ளத்திற்கு
நன்றி நன்றி நன்றி
மனித நேயம் இன்னும்
வாழ்கிறது என்பதற்கு தாங்கள்
ஒர் எடுத்துக்காட்டு
புலவர் சா இராமாநுசம்
@புலவர் சா இராமாநுசம்
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பொன் மாலைப் பொழுது எனச் சொல்வதை விடப் பின் மாலைப் பொழுது என்று சொல்லலாம்.//
பதிலளிநீக்குஅவ்....ஐயா, அந்தி சாயும் நேரம்,
மம்மல், கருக்கல், மாலைக் கருக்கல் பற்றித் தானே சொல்ல வாரார்.
ஐயா, நான் நினைக்கிறேன் பயம் தான், ஒரு சில நல்ல செயல்களையும் செய்ய முடியாதபடி எம்மைத் தடுத்து விடுகிறது என்று.
பதிலளிநீக்குநிரூபன் கூறியது...
பதிலளிநீக்குபொன் மாலைப் பொழுது எனச் சொல்வதை விடப் பின் மாலைப் பொழுது என்று சொல்லலாம்.//
// அவ்....ஐயா, அந்தி சாயும் நேரம்,
மம்மல், கருக்கல், மாலைக் கருக்கல் பற்றித் தானே சொல்ல வாரார்.//
அதேதான்.மம்மல் எனக்குப் புதிது!
நன்றி!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// ஐயா, நான் நினைக்கிறேன் பயம் தான், ஒரு சில நல்ல செயல்களையும் செய்ய முடியாதபடி எம்மைத் தடுத்து விடுகிறது என்று.//
இதில் இரண்டாவது கருத்தே கிடையாது!எனக்கே ஒரு முறை பிரச்சினை ஏதாவது வந்திருந்தால் பின்னர் உதுவுவேனா என்பது சந்தேகமே!
நடன சபாபதி அவர்கள் சொன்னது போல மனித நேயம் என்ற ஒன்று இருந்தால்தானே? நிலைமை இன்னும் மோசமாகதான் ஆகும். சீராவதற்கு வாய்ப்புகளே இல்லை.
பதிலளிநீக்கு