வாப்பா,சோமு,நல்லாருக்கியா?
நல்லாத்தான் இருக்கேன்,ராமு.நான் வரும்போது நீ தாமு கிட்டப் பேசிட்டிருந்தே, அதான் ஒரு பக்கமா நின்னுட்டேன்!
வர வேண்டியதுதானே.
இல்லைப்பா.உங்க பேச்சில் நான் ஏன் குறுக்க?ஆமாம்,குங்குமப்பூவெல்லாம் ஜாங்கிரில போடுவாங்க,பாத்திருக்கேன்.போண்டால போடுவாங்களா என்ன?
போண்டால குங்குமப் பூவா?என்னப்பா சொல்றே?
ஆமாப்பா.தாமு உங்கிட்டச் சொன்னானே ’குங்குமப்பூ போண்டா ’நல்லாருக்குன்னு?
அடக் கடவுளே !அது குங்குமப்பூ போண்டா இல்லை.குங் ஃபு பாண்டா!ஒரு சினிமா !
அப்படியா! மகாபாரதம் எப்ப எடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும்.
மகாபாரதமா?!
ஆமா,நீதானே சொன்னே,பாண்டவான்னு!
அது பாண்டவா இல்லை ,பாண்டா;ஒரு மிருகம்.
அப்படியா.சரி,கோகுல் யாரு?
கோகுலா?யாரு?
தாமு எதுவோ தெரியல்லைன்னு சொன்னதும் நீ கோகுலைக் கேளுன்னு சொன்னயே!
கஷ்டகாலம்.அது கோகுல் இல்ல.கூகிள்.ஒரு தேடு இயந்திரம்.எதாவது தெரியணும்னா அதுல பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்!
பரவாயில்லையே.எனக்கு ஒரு உதவி பண்ணேன்.நேற்றிலிருந்து எங்கள் வீட்டில் ஒரு குடத்தைக் காணோம்!அதைக் கோகுலைக் கேட்டுக் கண்டு பிடித்துக் கொடேன்!
அதெல்லாம் முடியாது!
ஏன்,உங்கிட்ட அந்த எந்திரம் இல்லையா?
எந்திரம்னா அது எந்திரம் இல்லை.கம்ப்யூட்டரில் இருக்கும்.
ஓகோ!கம்ப்யூட்டரே எந்திரம் அதற்குள் இன்னோர் எந்திரமா?
ஏதாவது விஷயம் தெரிஞ்சுக்கணும்னா கூகிள் ல தேடினா பதில் கிடைக்கும்.
அதான் கேட்டேன் குடத்தைத் தேடிப்பார் என்று.இதைக்கூடக்கண்டு பிடிக்க முடியாலைன்னா என்ன எந்திரம்?
ராமு சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடுகிறான்.
//குடத்தைத் தேடிப்பார் என்று.இதைக்கூடக்கண்டு பிடிக்க முடியாலைன்னா என்ன எந்திரம்?//
பதிலளிநீக்குயார் கண்டார்? இது நடந்தாலும் நடக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னால் நகைச்சுவை மன்னார் திரு என்.எஸ். கிருஷ்ணன் நல்லதம்பி என்ற படத்தில் ‘விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி’ என்று பாடும்போது திருமதி டி.ஏ.மதுரம் ‘ஒரு பட்டனைத் தட்டிவிட்டால் இரண்டு இட்லி சட்டினியும் நம்ப பக்கத்திலே வரவேணும்’ என்று பாடுவார். அது நடக்குமா என்று பலர் யோசித்ததுண்டு. இன்று அது நடக்கவில்லையா. அதுபோல இதுவும் நடக்கலாம். சிரிப்பை வரவழைத்த பதிவு. வாழ்த்துக்கள்.
அவர் கேட்ட அத்தனை கேள்விகளும் நியாயமானதுதானே?
பதிலளிநீக்குஎப்படி ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...
பதிலளிநீக்குFunny.I enjoyed.thanks
பதிலளிநீக்குவர வர காமெடியில் கலக்குறீங்க ஐயா
பதிலளிநீக்குஹே ஹே ஹே ஹே கலக்கல் காமெடி தல...!!
பதிலளிநீக்குஅந்த கேள்விகளில் நியாயம் இருக்கிறது
பதிலளிநீக்குகுங்குமப்பூ போண்டா.... :) நல்ல நகைச்சுவை. சில நாட்கள் முன் இரு அரசியல் பிரபலங்களை புகைப்படம் வைத்து இதே பின்புலத்தில் ஒரு ஜோக் வெளியாகியிருந்தது.
பதிலளிநீக்குகூகிளில் குடம்.... என்னமா யோச்சிக்கிறீங்க சார்... நாளை நடந்தாலும் நடக்கலாம்.... :)
நல்ல நகைச்சுவைப் பதிவு ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
புலவரப சா இராமாநுசம்
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//அதுபோல இதுவும் நடக்கலாம். சிரிப்பை வரவழைத்த பதிவு. வாழ்த்துக்கள்.//
நடக்கலாம்;நன்றி!
பாலா கூறியது...
பதிலளிநீக்கு//அவர் கேட்ட அத்தனை கேள்விகளும் நியாயமானதுதானே?//
அதானே!
நன்றி பாலா!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//சிரிக்க வைத்த சிந்தனை!//
நன்றி ஐயா!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு// எப்படி ஐயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...//
யாரோ யோசிக்கறாங்க!நம்ம கொஞ்சம் சேர்க்கிறோம்!
நன்றி சௌந்தர்!
குணசேகரன்... கூறியது...
பதிலளிநீக்கு// Funny.I enjoyed.thanks//
நன்றி குணா!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு//வர வர காமெடியில் கலக்குறீங்க ஐயா//
நன்றி ரியாஸ்!
MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிலளிநீக்கு// ஹே ஹே ஹே ஹே கலக்கல் காமெடி தல...!!//
நன்றி மனோ!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//அந்த கேள்விகளில் நியாயம் இருக்கிறது//
இருக்கும்,இருக்கும்!
நன்றி கருன்!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு// கூகிளில் குடம்.... என்னமா யோச்சிக்கிறீங்க சார்... நாளை நடந்தாலும் நடக்கலாம்.... :)//
எதுவும் நடக்கலாம்! :-D
நன்றி வெங்கட்!
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//நல்ல நகைச்சுவைப் பதிவு ஐயா
வாழ்த்துக்கள்//
நன்றி ஐயா!
ஹா..ஹா..நியாயமான கேள்வி. எப்படியாவது குடத்தை கண்டுபிடிச்சுக் கொடுங்க ஐயா.
பதிலளிநீக்குஇப்பிடி மொக்கைய போட்டு மனுசன சாகடிக்கனும்னு கடவுள் கொஞ்ச பேரை பூமிக்கு அனுப்பி இருக்கார்போல!
பதிலளிநீக்குகோகுல் நிறையச் சிரிச்சிட்டேன்.
பதிலளிநீக்குஇயல்பான நகைச்சுவையில் சிரிக்க வைக்கிறீர்கள் !
நல்ல எழுத்து நடை. சென்னை பித்தன் என்ற பேரே ரொம்ப அருமை
பதிலளிநீக்கு.கூகிள்.ஒரு தேடு இயந்திரம்.எதாவது தெரியணும்னா அதுல பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்!
பதிலளிநீக்குபரவாயில்லையே.எனக்கு ஒரு உதவி பண்ணேன்.நேற்றிலிருந்து எங்கள் வீட்டில் ஒரு குடத்தைக் காணோம்!அதைக் கோகுலைக் கேட்டுக் கண்டு பிடித்துக் கொடேன்!//
ஹா...ஹா...ஐயா எப்படியெல்லாம் யோசிக்கிறார்..
சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
புரிந்துணர்வற்ற, சீராக உச்சரிக்க முடியாத விடயங்கள் மூலம் ஏற்படும் சிக்கல்களை குறுங் கதை மூலம் தந்திருக்கிறீங்க. கலக்கல் ஐயா.
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//ஹா..ஹா..நியாயமான கேள்வி. எப்படியாவது குடத்தை கண்டுபிடிச்சுக் கொடுங்க ஐயா.//
தேடிப் பார்க்கலாம்!
நன்றி செங்கோவி!
மைந்தன் சிவா கூறியது...
பதிலளிநீக்கு//இப்பிடி மொக்கைய போட்டு மனுசன சாகடிக்கனும்னு கடவுள் கொஞ்ச பேரை பூமிக்கு அனுப்பி இருக்கார்போல!//
ஹா ஹா ஹா!
நன்றி சிவா!
ஹேமா கூறியது...
பதிலளிநீக்கு//கோகுல் நிறையச் சிரிச்சிட்டேன்.
இயல்பான நகைச்சுவையில் சிரிக்க வைக்கிறீர்கள் !//
நன்றி ஹேமா!
கார்த்தி-ஸ்பார்க் கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல எழுத்து நடை. சென்னை பித்தன் என்ற பேரே ரொம்ப அருமை//
நன்றி கார்த்தி!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// ஹா...ஹா...ஐயா எப்படியெல்லாம் யோசிக்கிறார்..
சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
புரிந்துணர்வற்ற, சீராக உச்சரிக்க முடியாத விடயங்கள் மூலம் ஏற்படும் சிக்கல்களை குறுங் கதை மூலம் தந்திருக்கிறீங்க. கலக்கல் ஐயா.//
நன்றி நிரூபன்!
கோகுல் கூகுள். நல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குஹா ஹா செம
பதிலளிநீக்கு! சிவகுமார் ! கூறியது...
பதிலளிநீக்கு//கோகுல் கூகுள். நல்ல நகைச்சுவை.//
நன்றி சிவகுமார்!
சி.பி.செந்தில்குமார் கூறியது...
பதிலளிநீக்கு// ஹா ஹா செம//
நன்றி சிபி!
குழப்பவாதி ன்னு பெயர் வச்ச்ஹிருக்கலம் சார்
பதிலளிநீக்குகார்த்தி-ஸ்பார்க் கூறியது...
பதிலளிநீக்கு//குழப்பவாதி ன்னு பெயர் வச்ச்ஹிருக்கலம் சார்//
ஹி ஹி! நன்றி!
அருமையான பகிர்வு நன்றி ஐயா.
பதிலளிநீக்குஎன் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள்
பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
ஐயா....
அம்பாளடியாள் கூறியது...
பதிலளிநீக்கு//அருமையான பகிர்வு நன்றி ஐயா.
என் முதற்ப்பாடல் வலைத்தளத்தில்
உங்கள் கருத்தினைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றது வாருங்கள் உங்கள்
பொன்னான கருத்தினைக் கூறுங்கள்
ஐயா....//
நன்றி !அவசியம் படிக்கிறேன்!
ஐயா!
பதிலளிநீக்குதத்துவம் மிகுந்த கவிதை-நல்
கவித்துவம் வாய்ந்த கவிதை
அத்தனை வரிகளும் அருமை-நீர்
அணிந்தீர்அணியாம் பெருமை
சித்தராய் செப்பினீர்உண்மை-உம்
சிந்தனை தருவது நன்மை
பித்தரே வாழ்வினில் செம்மை-நீர்
பெறவே வாழ்த்தினோம் உம்மை
புலவர் சா இராமாநுசம்