படப்பிடிப்பு நடக்கும் அந்த இடத்தை நான் அடைந்து,காம்பவுண்டுக்கு வெளியே என் ஸ்கூட்டரை நிறுத்தினேன்.கேட்டைத்திறந்து கொண்டு உள்ளே நுழையும் போது எதிரில் வந்த உதவி இயக்குனர்”வாங்க சார்.காலை வணக்கம்.இயக்குநர் உள்ளேதான் இருக்கிறார். போங்க” என்று சொல்லி விட்டு ஏதோ வேலையாக வேகமாகப் போய் விட்டார்!
உள்ளே சென்றேன். காட்சியைப் படமாக்க எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தனர்! காமிரா அருகே நின்று கொண்டிருந்த என் நண்பன்,இயக்குநர் ரகு ”ஹாய்.குமார்.வா” என உற்சாகமாக அழைத்தான்.அவன் யுனிட்டில் அநேகமாக எல்லாரும் எனக்கு அறிமுகமான வர்களே.பல தலையசைப்புகள், வணக்கங்கள், புன்னகைகள்!
ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒப்பனையைத் திருத்திக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து,”சுமதி” என்றழைக்க,அவள் எழுந்து வந்தாள்.அவளிடம் என்னைக் காட்டி”என் நண்பன் குமார்.மாநில அரசுப் பணி. சினிமா பற்றிச் சகலமும் தெரிந்தவன்.உலக சினிமா பற்றிய செய்திகள் அவன் விரல் நுனியில்”என அறிமுகப் படுத்தவும்”,போதும்,போதும் ’என அவனை அடக்கினேன்.
பின் அந்தப் பெண்ணைக்காட்டி,”சுமதி;இந்தத் தொடரில் ஒரு நல்ல ரோல் பண்றாங்க. இன்னைக்கு இவங்க மட்டும் நடிக்கும் ஒரு பதினைந்து நிமிடக் காட்சி இப்போது படமாக்கப்பட இருக்கிறது. படப்பிடிப்பைப் பார்.உன் கருத்தைச் சொல்” என்று என்னிடம் சொன்னான்.
சுமதி எனக்கு வணக்கம் சொன்னாள்!நான் அன்றைய காட்சி நன்கு அமைய வாழ்த்தினேன். காமிராவுக்கு வெளியே சென்று அமர்ந்தேன்.
எல்லாம் தயார்.
”ஒரு ஒத்திகை பார்த்துவிடலாமா?”-ரகு.
அந்தக் காட்சி எனக்கு ஏற்கனவே விளக்கப் பட்டிருந்தது..
சுமதி நடிக்க ஆரம்பித்தாள்.
அவள் முதல் வசனம் பேசி முடித்த பின் நண்பன் என்னைப் பார்த்தான்.
நான் அவளருகில் சென்றேன்.
“மிஸ்.சுமதி!எமோஷன் சரியா வரவில்லை!இதைக் கொஞ்சம் வித்தியாசமாகச் செய்ய வேண்டும்”உதவி இயக்குனரைப் பார்த்தேன்.
“அந்த வசனத்தைக் கொஞ்சம் சொல்லுங்க”
அவர் சொன்னார்.அந்தக் காட்சியை நான் நடித்துக் காட்ட ஆரம்பித்தேன்.சுமதி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.முடிந்தது.அனைவரும் கை தட்டினர்.
சுமதி அசந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்படி நடிக்க வேண்டும்.ரகு !இப்பச் சரியாப் பண்ணிடுவாங்க.நேர டேக் போயிடு”நான்.
“ஸ்டார்ட் காமிரா!
”காமிரா ரோலிங்க்!”
”ஆக்சன்”!
தொடங்கியது.அவள் கற்பூரம்தான்.என் நடிப்பை அப்படியே உள்வாங்கி அற்புதமாகச் செய்தாள்.
(தொடரும்)
உள்ளேன் ஐயா..!
பதிலளிநீக்குஅழகிய தொடக்கம்...
பதிலளிநீக்குஅந்த காட்சி வசனம் என்னன்னு அடுத்த பதிவா..
தொடருங்க..
தொடர் கதையா .. ம்.ம்.. அசத்துங்க..
பதிலளிநீக்குகற்பூரமாய் ஆரம்பிதகதை அருமை.
பதிலளிநீக்குநடக்கட்டும்
பதிலளிநீக்கு# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு//உள்ளேன் ஐயா..!//
attendance marked!
# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
பதிலளிநீக்கு// அழகிய தொடக்கம்...
அந்த காட்சி வசனம் என்னன்னு அடுத்த பதிவா..
தொடருங்க..//
தவறாமல் படியுங்கள்.
நன்றி சௌந்தர்!
!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
பதிலளிநீக்கு//தொடர் கதையா .. ம்.ம்.. அசத்துங்க..//
சிறுகதைதான்!அடுத்த பதிவில் முடித்து விடலாம்!
நன்றி கருன்!
இராஜராஜேஸ்வரி கூறியது...
பதிலளிநீக்கு// கற்பூரமாய் ஆரம்பிதகதை அருமை.//
மணக்கிறதா?
நன்றி இராஜராஜேஸ்வரி!
koodal bala கூறியது...
பதிலளிநீக்கு// நடக்கட்டும்//
நடக்கும்!
நன்றி பாலா!
FOOD கூறியது...
பதிலளிநீக்கு//Sirukathai sirappaai pogirathu.//
நன்றி சங்கரலிங்கம்!
சிறுகதை எனச் சொல்லி தொடர்கதை ஆக்கிவிட்டீர்களே! ஆனாலும் நீளும் இந்த சிறுகதை அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டியுள்ளது உண்மை.
பதிலளிநீக்குதொடருங்க தொடருங்க என்ன நடக்குதெண்டு பார்ப்பம்
பதிலளிநீக்குஎன்ன ஐயா தொடரும் போட்டு, எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டீர்கள்..சீக்கிரம் சொல்லுங்கள் ‘நடிகையின் கதையை’!
பதிலளிநீக்குdont mind grand pa ...my net is making troubles ....waiting for second part...
பதிலளிநீக்குநாங்கெல்லாம் நடிகையை பாத்துதான் அசந்து போவோம்
பதிலளிநீக்குநீங்க நடிகையையே அசத்தி இருக்கீங்க
அமர்க்களமான ஆரம்பம் ஐயா
வே.நடனசபாபதி கூறியது...
பதிலளிநீக்கு//சிறுகதை எனச் சொல்லி தொடர்கதை ஆக்கிவிட்டீர்களே! ஆனாலும் நீளும் இந்த சிறுகதை அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டியுள்ளது உண்மை.//
சிறுகதையே!ஆனால் ஒரே பதிவில் தட்டச் சோம்பல்!அடுத்த பதிவில் முடித்துவிடலாம்!
நன்றி நடனசபாபதி அவர்களே!
கந்தசாமி. கூறியது...
பதிலளிநீக்கு//தொடருங்க தொடருங்க என்ன நடக்குதெண்டு பார்ப்பம்//
அவசியம் பாருங்க!
நன்றி கந்தசாமி!
செங்கோவி கூறியது...
பதிலளிநீக்கு//என்ன ஐயா தொடரும் போட்டு, எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டீர்கள்.. சீக்கிரம் சொல்லுங்கள் ‘நடிகையின் கதையை’!//
சொல்லி விடுகிறேன்!
நன்றி செங்கோவி!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// nice//
நன்றி ரியாஸ்!
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// dont mind grand pa ...my net is making troubles ....waiting for second part...//
ஒரு சந்தேகம்.என் மூத்த மகளுக்கே வயது 37 தான்.உங்கள் வயதில் எனக்குப் பேரன் இருக்க முடியுமா!
thank u!
A.R.ராஜகோபாலன் கூறியது...
பதிலளிநீக்கு// நாங்கெல்லாம் நடிகையை பாத்துதான் அசந்து போவோம்
நீங்க நடிகையையே அசத்தி இருக்கீங்க
அமர்க்களமான ஆரம்பம் ஐயா//
நன்றி ராஜகோபாலன்!
ஐயா என் வயது17 தான் HE HE
பதிலளிநீக்குஇரண்டு பகுதிகளில் சிறுகதையா.... அசத்துங்க....
பதிலளிநீக்குமுதல் பகுதி விறுவிறுப்பாய் தொடங்கி விட்டது. இரண்டாம் பகுதிக்காய் காத்திருப்புடன்.....
ரியாஸ் அஹமது கூறியது...
பதிலளிநீக்கு// ஐயா என் வயது17 தான் HE HE//
agreed!
வெங்கட் நாகராஜ் கூறியது...
பதிலளிநீக்கு//இரண்டு பகுதிகளில் சிறுகதையா.... அசத்துங்க....
முதல் பகுதி விறுவிறுப்பாய் தொடங்கி விட்டது. இரண்டாம் பகுதிக்காய் காத்திருப்புடன்.....//
முடிந்தால் நாளை அல்லது திங்கள்!
நன்றி வெங்கட்!
சிறுகதை அடுத்து என்ன... ஆவலாய்...
பதிலளிநீக்குகுடந்தை அன்புமணி கூறியது...
பதிலளிநீக்கு//சிறுகதை அடுத்து என்ன... ஆவலாய்...//
நன்றி அன்புமணி!
கதை நல்லா போகுது. சிறுகதைன்னு சொல்லிட்டு, தொடரும் போட்டுட்டீங்களே? இதுவும் உங்க லொள்ளுதானா?
பதிலளிநீக்குபாலா கூறியது...
பதிலளிநீக்கு//கதை நல்லா போகுது. சிறுகதைன்னு சொல்லிட்டு, தொடரும் போட்டுட்டீங்களே? இதுவும் உங்க லொள்ளுதானா?//
சிறுகதைதான்;ஆனால் ஒரு இடுகையில் அடக்க முடியவில்லை. எனவேதான் ‘தொடரும்’
நன்றி பாலா!
நல்ல தொடராக செல்கிறது.. கொண்டு செல்லும் விதம் அருமை
பதிலளிநீக்குஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
வட்டார மொழி நடையோடு, அடுத்தது என்ன என்று ஏங்க வைக்கும் வகையில் ஒரு தொடரினைத் தொடங்கியிருக்கிறீங்க.
பதிலளிநீக்குஅடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
குணசேகரன்... கூறியது...
பதிலளிநீக்கு// நல்ல தொடராக செல்கிறது.. கொண்டு செல்லும் விதம் அருமை
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க//
நன்றி குணா!
நிச்சயம் தொடர்ந்து வருவேன்!
நிரூபன் கூறியது...
பதிலளிநீக்கு// வட்டார மொழி நடையோடு, அடுத்தது என்ன என்று ஏங்க வைக்கும் வகையில் ஒரு தொடரினைத் தொடங்கியிருக்கிறீங்க.
அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
திங்களன்று நிறைவுப்பகுதி!மிஸ் பண்ணிடாதீங்க!
நன்றி நிரூ!
உண்மைக் கதையா
பதிலளிநீக்குகற்பனைக் கதையா
அவசரம் அவசியம் அறிய
ஆவல்
புலவர் சா இராமாநுசம்
புலவர் சா இராமாநுசம் கூறியது...
பதிலளிநீக்கு//உண்மைக் கதையா
கற்பனைக் கதையா
அவசரம் அவசியம் அறிய
ஆவல்//
கற்பனைக் கதையே இது!
நன்றி!