தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 18, 2011

பெட்டைக்காய் ஏங்கும் பேதமை!(கவிதை)

முட்டை உடைந்தது குரீஇ பறந்தது

கட்டை கிடந்தது கர்ம வினை அறுந்தது

சட்டை கழன்றது சம்சாரம் அகன்றது

பெட்டைக்காய் ஏங்கும் பேதமை மறைந்தது!


கூட்டமாய்க் கூடி நின்று கூக்குரலிட்டு அழுவர்

காட்டுக்குத் தூக்கிச் சென்று கட்டையிலிட் டெரிப்பர்

வாட்டமாய்த் திரும்பி வந்து வழமைகள் பலவும் செய்வர்

நாட்டம் மாறிய பின் நாளையே மறந்து போவர்!




எரியப்போகும் உடலுக்கு எத்தனை சிங்காரம்

வாசனைத் தைலமென்ன,வாடாத மலர்களென்ன

பூசிடும் பொடிகளென்ன பூணுகின்ற அணிகளென்ன

இதழுக்குச் சாயமென்ன இளமைக்குக் கவசமென்ன!


பவள இதழ்களின் சிவப்பிலே மயக்கம்

பருவ மொட்டுக்களின் வனப்பிலே மயக்கம்!

தெரியாதா உனக்கு இதெல்லாம் சிலகாலம்!



இறுதி வரை இதுவே நம் வாழ்க்கையென்றால்

சுருதியில்லா சங்கீதம் போலாகி விடாதா?

நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருப்போர் நாளையில்லை

நமக்குப்பின் நம் பெயர் நிலைக்க வேண்டுமெனில்

நன்றே செய்,அதை இன்றே செய்!

வான் புகழ் வள்ளுவன் சொன்னான்

“தக்கார் தகவிலர் என்பத வரவர்
எச்சத்தாற் காண ப்படும்”

நமக்குப் பின் எஞ்சுவது நல்லதாய் இருக்கட்டும்

நான்கு பேராவது நம் புகழ் சொல்லட்டும்!

45 கருத்துகள்:

  1. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’ என்ற கவிஞர் வாலியின் கருத்தும் இதுதான்.

    ஆடி அடங்கும் வாழ்க்கையைப்பற்றி தத்துவ ரீதியாக சொல்லிவிட்டீர்கள். நல்ல கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா, முடிக்கும் சொற்கள் கலக்கலாகப் பொருந்தி வரும் வண்ணம் ஓர் தத்துவக் கவிதையினை உணர்த்தியிருக்கிறீங்க. எதுவும் அனுபவித்த பின்னர் தான் தெளிவடைய வைக்குமாம். மெய்யாலுமே;-))

    பதிலளிநீக்கு
  3. வாழ்வே மாயம்!

    பட்டினத்தார் பாடல் படித்த ஃபீலிங்.

    பதிலளிநீக்கு
  4. //பவள இதழ்களின் சிவப்பிலே மயக்கம்

    பருவ மொட்டுக்களின் வனப்பிலே மயக்கம்!

    தெரியாதா உனக்கு இதெல்லாம் சிலகாலம்!


    சில நேரம் காமெடியில பிண்றீங்க... சில நேரம் பட்டினத்தார் மாதிரி தத்துவம் சொல்றீங்க. உங்கள புரிஞ்சுக்கவே முடியல. மேல இருக்கும் வரிகளை எல்லோரும் புரிந்து கொண்டாலே, பெரிய தப்பு எதுவும் நடக்காது.

    பதிலளிநீக்கு
  5. என்ன ஐயா வாழ்க்கையின் தத்துவமா ...

    கவிதை யதார்த்தம் .

    பதிலளிநீக்கு
  6. கண்ணதாசன் ஸ்டைல்ல இருக்கு. ‘வீடு வரை உறவு’.....

    பதிலளிநீக்கு
  7. அமர்க்களமான நடையில்
    அருமையான கருத்தில்
    அழகான கவிதை சார்

    பதிலளிநீக்கு
  8. கவிதை அருமை..
    கீழே போட்டிருக்கும் லேபல் மாத்திரம் பல கதை சொல்லும்!!

    பதிலளிநீக்கு
  9. koodal bala கூறியது...

    //அருமை ...அருமையான அறிவுரை ...//
    நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  10. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    //தங்கள் எண்ணப்படியே நடக்கட்டும்...//
    நன்றி சௌந்தர்!

    பதிலளிநீக்கு
  11. வே.நடனசபாபதி கூறியது...

    //இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்’ என்ற கவிஞர் வாலியின் கருத்தும் இதுதான்.

    ஆடி அடங்கும் வாழ்க்கையைப்பற்றி தத்துவ ரீதியாக சொல்லிவிட்டீர்கள். நல்ல கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.//

    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  12. நிரூபன் கூறியது...

    //வணக்கம் ஐயா, முடிக்கும் சொற்கள் கலக்கலாகப் பொருந்தி வரும் வண்ணம் ஓர் தத்துவக் கவிதையினை உணர்த்தியிருக்கிறீங்க. //

    நன்றி நிரூ!
    //எதுவும் அனுபவித்த பின்னர் தான் தெளிவடைய வைக்குமாம். மெய்யாலுமே;-))//
    agreed!:)

    பதிலளிநீக்கு
  13. செங்கோவி கூறியது...

    //வாழ்வே மாயம்!

    பட்டினத்தார் பாடல் படித்த ஃபீலிங்.//

    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு
  14. பாலா கூறியது...

    // சில நேரம் காமெடியில பிண்றீங்க... சில நேரம் பட்டினத்தார் மாதிரி தத்துவம் சொல்றீங்க. உங்கள புரிஞ்சுக்கவே முடியல. மேல இருக்கும் வரிகளை எல்லோரும் புரிந்து கொண்டாலே, பெரிய தப்பு எதுவும் நடக்காது.//

    :-) நன்றி பாலா!

    பதிலளிநீக்கு
  15. கந்தசாமி. கூறியது...

    //என்ன ஐயா வாழ்க்கையின் தத்துவமா ...

    கவிதை யதார்த்தம் .//

    நன்றி கந்தசாமி!

    பதிலளிநீக்கு
  16. ! சிவகுமார் ! கூறியது...

    //கண்ணதாசன் ஸ்டைல்ல இருக்கு. ‘வீடு வரை உறவு’.....//

    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  17. FOOD கூறியது...

    //கவிதை அருமை.வாழ்க்கைத் தத்துவம் வகையாத்தான் சொல்லிருக்கீங்க.//
    நன்றி சங்கரலிங்கம்!

    பதிலளிநீக்கு
  18. A.R.ராஜகோபாலன் கூறியது...

    //அமர்க்களமான நடையில்
    அருமையான கருத்தில்
    அழகான கவிதை சார்//

    நன்றி ராஜகோபாலன்!

    பதிலளிநீக்கு
  19. அப்பாதுரை கூறியது...

    // புதுப் பட்டினத்தார் வருக.//

    நுனிக் கரும்பு என்று இனிக்குமோ?

    நன்றி அப்பாதுரை!

    பதிலளிநீக்கு
  20. மைந்தன் சிவா கூறியது...

    //கவிதை அருமை..
    கீழே போட்டிருக்கும் லேபல் மாத்திரம் பல கதை சொல்லும்!!//

    நன்றி சிவா!

    பதிலளிநீக்கு
  21. பட்டினத்தார் கூறியது போல் உள்ளது .... அவர் கூறியதின் கருத்து .." பருத்த தொந்தி நம்மதென்று நாம் நினைத்து இருக்க , இடுகாட்டில் உள்ள நாய், நரி, பேய் இவை எல்லாம் அதனை தன்னதேன்று நினைத்து இருக்குமாம் " .
    சில நேரம் கண்ணதாசன்/வாலி போல் கலக்குகிறீர்கள் சில நேரம் பட்டினத்தார் போல் தத்துவ மழை பொழிகிறீர்கள் ...
    சில நேரம் போகி போல் எழுதுகிறீர்கள் சில நேரம் யோகி போல் எழுதுகிறீர்கள் ..
    பட்டினத்தார் கருத்தினை கண்ணதாசன் பாணியில் கூறியது அமர்க்களம் .

    வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  22. வெங்கட் நாகராஜ் கூறியது...

    // நல்ல, கருத்துள்ள கவிதை//

    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  23. Vasu கூறியது...

    // பட்டினத்தார் கூறியது போல் உள்ளது .... அவர் கூறியதின் கருத்து .." பருத்த தொந்தி நம்மதென்று நாம் நினைத்து இருக்க , இடுகாட்டில் உள்ள நாய், நரி, பேய் இவை எல்லாம் அதனை தன்னதேன்று நினைத்து இருக்குமாம் " .
    சில நேரம் கண்ணதாசன்/வாலி போல் கலக்குகிறீர்கள் சில நேரம் பட்டினத்தார் போல் தத்துவ மழை பொழிகிறீர்கள் ...
    சில நேரம் போகி போல் எழுதுகிறீர்கள் சில நேரம் யோகி போல் எழுதுகிறீர்கள் ..
    பட்டினத்தார் கருத்தினை கண்ணதாசன் பாணியில் கூறியது அமர்க்களம் .//

    போகி,யோகி என்று கலக்கி யிருக்கிறீர்கள்!(நல்ல வேளை ரோகியில்லை!)
    கருத்துக்கு நன்றி வாசு!

    பதிலளிநீக்கு
  24. நமக்குப் பின் எஞ்சுவது நல்லதாய் இருக்கட்டும்

    நான்கு பேராவது நம் புகழ் சொல்லட்டும்!

    அருமையான கருத்து நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  25. அருமை - அழகு நன்றி ஐய்யா பகிர்ந்தமைக்கு

    பதிலளிநீக்கு
  26. M.R கூறியது...

    நமக்குப் பின் எஞ்சுவது நல்லதாய் இருக்கட்டும்

    நான்கு பேராவது நம் புகழ் சொல்லட்டும்!

    //அருமையான கருத்து நண்பரே நன்றி//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி M.R

    பதிலளிநீக்கு
  27. மனசாட்சி கூறியது...

    //அருமை - அழகு நன்றி ஐய்யா பகிர்ந்தமைக்கு//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  28. கருத்துரை முன்னும் பின்னும்
    இடம் மாறி வந்து விட்டன
    மன்னிக்க!



    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  29. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    ஐயா!

    தத்துவம் மிகுந்த கவிதை-நல்
    கவித்துவம் வாய்ந்த கவிதை
    அத்தனை வரிகளும் அருமை-நீர்
    அணிந்தீர்அணியாம் பெருமை
    சித்தராய் செப்பினீர்உண்மை-உம்
    சிந்தனை தருவது நன்மை
    பித்தரே வாழ்வினில் செம்மை-நீர்
    பெறவே வாழ்த்தினோம் உம்மை

    புலவர் சா இராமாநுசம்

    19 ஜூலை, 2011 7:19 pm

    பதிலளிநீக்கு
  30. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

    //கலக்கல்..//

    நன்றி கருன்!

    பதிலளிநீக்கு
  31. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    //கருத்துரை முன்னும் பின்னும்
    இடம் மாறி வந்து விட்டன
    மன்னிக்க!//
    அங்கிருந்து இங்கு கொண்டு வந்து விட்டேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  32. புலவர் சா இராமாநுசம் கூறியது...

    ஐயா!

    //தத்துவம் மிகுந்த கவிதை-நல்
    கவித்துவம் வாய்ந்த கவிதை
    அத்தனை வரிகளும் அருமை-நீர்
    அணிந்தீர்அணியாம் பெருமை
    சித்தராய் செப்பினீர்உண்மை-உம்
    சிந்தனை தருவது நன்மை
    பித்தரே வாழ்வினில் செம்மை-நீர்
    பெறவே வாழ்த்தினோம் உம்மை//
    புலவர் சா இராமாநுசம்

    ஐயா உங்கள் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன்!மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  33. பட்டினத்தார் பாடல்களை ஒருசேரப் படித்த திருப்தி.
    அருமை செ.பி, சார்

    பதிலளிநீக்கு
  34. அருமை அருமை!..கவிதையிலே கலந்த நல் அறிவுரை அருமை வாழ்த்துக்கள் ஐயா..........

    பதிலளிநீக்கு
  35. சிவகுமாரன் கூறியது...

    //பட்டினத்தார் பாடல்களை ஒருசேரப் படித்த திருப்தி.
    அருமை செ.பி, சார்//
    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  36. அம்பாளடியாள் கூறியது...

    //அருமை அருமை!..கவிதையிலே கலந்த நல் அறிவுரை அருமை வாழ்த்துக்கள் ஐயா..........//

    நன்றி அம்பாளடியாள்!

    பதிலளிநீக்கு
  37. அருமை ...அருமையான அறிவுரை ...

    பதிலளிநீக்கு
  38. மாலதி கூறியது...

    //அருமை ...அருமையான அறிவுரை ...//

    நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  39. !! அய்யம்மாள் !! கூறியது...

    //அரும்மையாக உள்ளது.//

    நன்றி அய்யம்மாள்.

    பதிலளிநீக்கு