தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூன் 08, 2012

நான் எந்தக் கட்சி விசுவாசி?

 
//! சிவகுமார் ! சொன்னது
அ.தி.மு.க.வின் தீவிர விசுவாசியான நீங்கள் இப்படி எழுதுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். அடுத்த தலைப்பு - ஸ்டாலினின் சர்வாதிகாரம் போல!!//

இது நேற்றைய என் பதிவுக்குச் சிவகுமார் அவர்களின் பின்னூட்டம்!

 நான் எந்தக் கட்சி விசுவாசி?

என்னை நானே கேட்டுக்கொள்ளுமாறு செய்து விட்டார் சிவகுமார்!

முதலில்,விசுவாசம் என்பது என்ன?

பொதுவாக இந்தச் சொல் விவிலிய மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல்.

if you have faith as small as a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move. Nothing will be impossible for you.”
”கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” - (மத்தேயு 17: 20).
இதிலிருந்து விசுவாசம் என்பது faith என்பதைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.
நம்பிக்கை என்பது சாதாரணச் சொல்.
விசுவாசம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
’சிக்’எனப் பிடிப்பது.
எனவே ஒரு கட்சியின் விசுவாசி என்றால்,அக்கட்சியின் கொள்கைகளில், செயல்பாடுகளில், தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும்
அது போன்ற நம்பிக்கை எனக்கு எந்தக்கட்சி மீதும் இல்லை!
சிவகுமார் இப்படி ஒரு முடிவுக்குக்கு வரக் காரணமாக இருக்கக்கூடியது நான் முன்பு  தேர்தலுக்கு முன் டாபிகலாக எழுதிய ஓரிரு கவிதைகளோ?

இவையெல்லாம் அந்த நேரத்துக்குப் பொருத்தமாக எழுதப்பட்ட கவிதைகள் அன்றி வேறில்லை.
சிறு வயது முதல் நான் பல கட்சிகளின் அபிமானியாக இருந்திருக்கிறேன்.
ஏழு வயதில் கையில் மெகாஃபோனுடன்  காங்கிரஸ் கட்சியின் இரட்டைக் காளைச் சின்னத்துக்காக சாத்தூரின் தெருக்களில் பிரசாரம் செய்திருக்கிறேன். பாராளுமன்றத்துக்கு காமராசர் அவர்களும் சட்டசபைக்கு எஸ்.ஆர்.நாயுடு அவர்களும் போட்டியிட்டு வென்றனர்.வெற்றி ஊர்வலத்தில் எஸ்.ஆர்.நாயுடு அவர்களின் அருகே காரில் அமர்ந்து மாலை மரியாதைகளுடன் சென்ற காங்கிரஸ்காரன் நான்!
(பாருங்கள் என் பதிவு”வெற்றிஊர்வலம் போகிறது”)
அடுக்கு மொழியால் இந்த அரும்பு உள்ளம் மயங்கிப்போன காலத்தில்,பள்ளிப் பருவத்தில் தி.மு.க.பால் ஈர்க்கப்பட்டேன்.அதற்கு முழுக்காரணம் கலைஞர் கருணநிதியின் வசனங்கள்தான்!
கல்லூரி சென்றபின் பார்வை மாறியது”ஒரு மனிதன் 20 யதில் கம்யூனிஸ்ட்டாக இல்லையெனில் அவனுக்கு இதயமில்லை என்று பொருள்;30 வயதிலும் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவனுக்குத் தலை(மூளை) இல்லை என்று பொருள்”என்று ஒரு சொல் வழக்கு உண்டு. எனக்கு இதயம் இருந்தது.நான் 20 ஆகும் முன்பே கம்யூனிஸ்ட் ஆனேன். காரணம் என் விரிவுரையாளர் திரு.சண்முகசுந்தரம். கட்சிக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வேன்.திரு மோகன் குமாரமங்கலம் ஆங்கிலத்தில் பேசிய ஒரு பொதுக்கூட்டத்துக்குகூட சென்றிருக்கிறேன். பொதுத் தேர்தலில் நான் அளித்த முதல் வாக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான்.
வயது ஏற ஏற பார்வைகள் மாறின,30 வயதில்.வழக்குச் சொல்லின் படி, நான் மூளை உள்ளவனானேன்!பின் இன்று வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அன்றைய நிலவரத்தைப் பொறுத்து என் வாக்கு அமைகிறது.இப்போதெல்லாம் இது நேர்மறையான வாக்காக இல்லாமல் எதிர்மறையான வாக்காகவே இருக்கிறது.
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசி அல்ல!டும்,டும்,டும்!

டிஸ்கி .:ஒரு பதிவு தேத்த உதவிய சிவாவுக்கு நன்றி!


23 கருத்துகள்:

 1. விசுவாசம் என்பதற்கு என்ன பொருள் என அழகாய் ஒரு விளக்கம்....

  மற்றபடி எல்லாக் கட்சியும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... :(

  பதிலளிநீக்கு
 2. வெங்கட் நாகராஜ் சொன்னது…

  // விசுவாசம் என்பதற்கு என்ன பொருள் என அழகாய் ஒரு விளக்கம்....

  மற்றபடி எல்லாக் கட்சியும் - ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... :(//
  100% சரியாகச் சொன்னீர்கள் வெங்கட்!
  பதிவு போட்டு முடித்தவுடன் மின்னல் வேகத்தில் பின்னூட்டம்!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. விசுவாசம் என்பதற்கு பொருள் விளக்கம் அருமை


  மற்றபடி கட்சிகளை பற்றி எனக்கு தெரியாது அங்கிள்....

  பதிலளிநீக்கு
 4. பின்னூட்டத்திற்கான பதிலையே
  விஷய முந்திரி தூவி ருசியான பதிவாக்கித் தந்தது
  மகிழ்வூட்டியது.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. கோடு போட்டால் ரோடு போடுவது இதுதானா? :))

  பதிலளிநீக்கு
 6. // இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசி அல்ல!டும்,டும்,டும்!//

  அடியேனும் தங்கள் கட்சியே டும்,டும்,டும்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 7. கம்யுனிஸ்ட் சொல்வழக்கு-
  எனக்கு புதிது-
  சொன்னதுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 8. உங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறியச் செய்தமைக்கு உங்களுக்கும் இதற்கு காரணமான சிவகுமாருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. 30 வயதில்.வழக்குச் சொல்லின் படி, நான் மூளை உள்ளவனானேன்!பின் இன்று வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அன்றைய நிலவரத்தைப் பொறுத்து என் வாக்கு அமைகிறது.இப்போதெல்லாம் இது நேர்மறையான வாக்காக இல்லாமல் எதிர்மறையான வாக்காகவே இருக்கிறது.// நிறைய செய்திகளை விளக்குகிறது ஐயா .
  Tha.ma.7

  பதிலளிநீக்கு
 10. எஸ்தர் சபி சொன்னது…

  //விசுவாசம் என்பதற்கு பொருள் விளக்கம் அருமை


  மற்றபடி கட்சிகளை பற்றி எனக்கு தெரியாது அங்கிள்....//

  தெரியாவிட்டால் தப்பில்லை!
  நன்றி எஸ்தர் சபி.

  பதிலளிநீக்கு
 11. Ramani சொன்னது…

  // பின்னூட்டத்திற்கான பதிலையே
  விஷய முந்திரி தூவி ருசியான பதிவாக்கித் தந்தது
  மகிழ்வூட்டியது.வாழ்த்துக்கள்//

  //விஷய முந்திரி தூவி//
  ஆகா என்ன ஒரு சொல்திறம்!
  நன்றி ரமணி.

  பதிலளிநீக்கு
 12. ! சிவகுமார் ! சொன்னது…

  //கோடு போட்டால் ரோடு போடுவது இதுதானா? :))//

  மேம்பாலமே கட்டலாம்!
  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 13. புலவர் சா இராமாநுசம் சொன்னது…

  // இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நான் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசி அல்ல!டும்,டும்,டும்!//

  //அடியேனும் தங்கள் கட்சியே டும்,டும்,டும்!

  சா இராமாநுசம்//

  நாமெல்லாம் அப்படித்தான் இருக்க முடியும் ஐயா!
  நன்றி

  பதிலளிநீக்கு
 14. Seeni சொன்னது…

  //கம்யுனிஸ்ட் சொல்வழக்கு-
  எனக்கு புதிது-
  சொன்னதுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!//
  நன்றி சீனி

  பதிலளிநீக்கு
 15. தி.தமிழ் இளங்கோ சொன்னது…

  // உங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறியச் செய்தமைக்கு உங்களுக்கும் இதற்கு காரணமான சிவகுமாருக்கும் நன்றி!//
  நன்றி தமிழ் இளங்கோ.
  சிவாவுக்கு நானும் நன்றி தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. Sasi Kala சொன்னது…

  // 30 வயதில்.வழக்குச் சொல்லின் படி, நான் மூளை உள்ளவனானேன்!பின் இன்று வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் அன்றைய நிலவரத்தைப் பொறுத்து என் வாக்கு அமைகிறது.இப்போதெல்லாம் இது நேர்மறையான வாக்காக இல்லாமல் எதிர்மறையான வாக்காகவே இருக்கிறது.// நிறைய செய்திகளை விளக்குகிறது ஐயா .//
  Tha.ma.7
  நன்றி சசிகலா.

  பதிலளிநீக்கு
 17. தி.மு.க , அ.தி.மு.க ஆகிய கட்சியில் இருப்பவர்கள் கூட விசுவாசம் இல்லாமல் கட்சி தாவும் போது , சாதாரண மக்களுக்கு குறிப்பிட்ட எந்த கட்சியிடத்திலும் குறைந்த பட்ச நம்பிக்கை கூட இருக்க முடியாது .

  இணையத் தமிழன்
  http://www.inaya-tamilan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 18. விசுவாசம்னா நம்ம விசு சென்ட் அடிச்சுக்கறதுதான்னுல்ல நினைச்சுட்டிருந்தேன். அருமையான உங்க விளக்கத்துக்கு அப்புறம்தான் உண்மையை உணர்ந்தேனுங்க!

  பதிலளிநீக்கு
 19. திரு சிவகுமார் அவர்கள் சொன்னார் என்பதற்காக நான் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசி அல்ல! என டாம் டாம் அடித்துள்ளீர்கள். 2011 சனவரி திங்கள் 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தாங்கள்
  அனைத்திந்திய அண்ணா, பெரியார்,காமராஜ்,
  ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் என்ற புதுமை நிறைந்த கட்சி.சார்பாக மயிலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்தீர்கள். ஓராண்டிற்குள் கட்சியிலிருந்து விலகிவிட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 20. வே.நடனசபாபதி சொன்னது…

  //திரு சிவகுமார் அவர்கள் சொன்னார் என்பதற்காக நான் எந்த அரசியல் கட்சிக்கும் விசுவாசி அல்ல! என டாம் டாம் அடித்துள்ளீர்கள். 2011 சனவரி திங்கள் 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தாங்கள்
  அனைத்திந்திய அண்ணா, பெரியார்,காமராஜ்,
  ராஜாஜி, நேரு,ஆரிய,திராவிட முன்னேற்ற முற்போக்கு மறுமலர்ச்சி மக்கள் கழகம் என்ற புதுமை நிறைந்த கட்சி.சார்பாக மயிலை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியிட்டிருந்தீர்கள். ஓராண்டிற்குள் கட்சியிலிருந்து விலகிவிட்டீர்களா?//

  நான் தொடங்கிய கட்சியை நானே கலைத்து விட்டேன்!ஹி,ஹி!
  நன்றி

  பதிலளிநீக்கு