தொடரும் தோழர்கள்

புதன், ஜூன் 27, 2012

மனிதனும் மிருகமும்!


                        
                    அரிமாக்களை அடைத்து வைத்து
                   ஆனந்தமாய் நாம் பார்த்ததுண்டு
                   ஆனால்,
                   அடைபட்டு நாம் நிற்பதை
                   அரிமாக்கள் ரசிக்கின்றனவோ!

இன்றைய முக்கிய செய்தி:
           
//வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்த  ரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப் பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்ப முள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை)  இடம் : மாணவர் மன்றம், சென்னை.//

நன்றி: கணேஷ்

22 கருத்துகள்:

  1. பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்துக்கள்

    த.ம.ஓ 2

    பதிலளிநீக்கு
  2. அடைபட்டு நாம் நிற்பதை
    அரிமாக்கள் ரசிக்கின்றனவோ

    மனிதக் காட்சி சாலை!
    படம் அருமை
    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  3. கேவலம் கொசுவுக்கு பயந்துபோய் மனிதன் தன்னை கொசுவலையிட்டுக் கொள்கிறானே!

    இவையெல்லாம் சிங்கமல்லவா?

    கூண்டுக்குள் இருப்பினும் மனிதர்கள் அவற்றைக்கண்டு நடுநடுங்கித்தான் போவார்கள்.

    கூண்டில் அடைப்பட்ட மனிதர்களைத்தான் அரிமாக்கள் வேடிக்கை பார்க்கின்றன. அது தான் உண்மை. கொஞ்சம் விட்டால் GAP கிடைத்தால் விருந்தாக்கிக் கொ[ல்லு]ள்ளுமோ !

    சென்னை பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. பாவம் அரிமாக்கள்
    கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தும்
    வாய்க்கு எட்டவில்லையே என்கிற ஏக்கத்தில்
    திரிவது அழகாகத் தெரிகிறது
    சுவாரஸ்யமான ப்திவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்//
    ஐயா
    தொலைப்பேசி எண்ணை கொடுத்தால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. படத்துக்கு ஏற்ற கவிதை

    பதிலளிநீக்கு
  7. மனிதக் காட்சி சாலை...அருமை...
    பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க வாழ்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. இப்படியான புகைப்படங்கள் முக நூலில் நிறையவே உலாவுகின்றன........

    அவற்றிலே ஒரு பதிவினை இட்ட உங்கள் சிந்தனை மிகவும் வித்தியாசமான ஐயா...

    பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. @கோவை நேரம்
    சென்னையில் நடக்கும் உலகத்தமிழ்ப் பதிவர் சந்திப்பு!உங்க்ள் பங்களிப்பு அவசியம்!
    நன்றி ஜீவா!

    பதிலளிநீக்கு
  10. @சைதை அஜீஸ்
    முதல் அறிவிப்பிலேயே தொலைபேசி எண்கள் கொடுக்கப் பட்டதால் மீண்டும் வெளியிடவில்லை.வெளியிட்டிருக்க வேண்டும்.எண்கள்--
    98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்)
    நன்றி அஜீஸ்

    பதிலளிநீக்கு
  11. ஆறு அறிவு படைத்தவன் அடைந்த கிடைக்க அரிமாக்கள் ரசிக்கும் காட்சி/கவிதை அருமை .. ஒரு காலத்தில் நடந்தாலும் நடக்கலாம் .வாசு

    பதிலளிநீக்கு
  12. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  13. அய்யா, அடுத்த சந்திப்பா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாஸ்
    அப்பறம் படம் சூப்பர்

    பதிலளிநீக்கு
  15. பாவம் பசியோடு இருக்கும் . கொஞ்சம் திறந்து விடலாமே...

    பதிலளிநீக்கு
  16. சந்திக்கப்போகும் பதிவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.....!

    பதிலளிநீக்கு