தொடரும் தோழர்கள்

சனி, மே 14, 2011

ஜெய பேரிகை கொட்டடா!கொட்டடா!

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
பலர் கவலை ஏதுமின்றி இருப்பார்!
- - - -
இந்நாளில் என் பழைய கவிதைகள் இரண்டை மீள் பதிவாக அளிப்பது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்!
- - - - - - - - - - - -

இதோ அவை!

உதயசூரியனும்,இரட்டை இலையும்! (06-11-2010 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - - - -
அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!




சூரியாஸ்தமனம்!(கவிதை) (01-03-2011 தேதியிட்ட பதிவு)
- - - - - - - - - - - - -
”அடிவானத் தேயங்கு பரிதிக் கோளம்
…………..
………….
பார்சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
என்னடீயிந்த வன்னத்தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
----------------------(பாஞ்சாலி சபதம்)

ஆம் அய்யா பாரதி அத்தனையும் சரி
மலை வாயில் சூரியன் விழும் நேரம் வந்தாச்சு!

மெல்ல மறைகின்றான் கதிரவன் அங்கே!!

படர் முகில் வடிவங்கள் என்ன என்ன அவற்றின்
சுடர் விடும் வண்ணங்கள் என்ன என்ன!
சிவந்த வானத்தில் கரு நிற முகில்கள்!

சிவப்பும் கருப்பும் என்னவொரு கலவை!

மஞ்சள் வண்ணத்தில் துண்டு துண்டாய்
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்

அதோ ஒரு மேகம்!மாம்பழம் போல் தோற்றம்!
சிறுத்தை பாய்வது போல் மற்றுமொரு மேகம்!

மறைகின்ற சூரியனை தடுக்கவா முடியும்
வெறும் கை கொண்டு நிலைமையை மாற்றவா முடியும்!

சுட்டெரிக்கும் சூரியன் மறைந்திடுவான்

கொட்டு முரசே! குளிர்ந்த நிலவொளியில்

பாலகர்கள் பம்பரம் விளையாட தீப்பந்த ஒளியினிலே

அம்மா பரிமாற

இரட்டை இலை போட்டு நிலாச் சோறு நடக்குதென்று!

- - - - - - - - -
எனது 12-05-2011 தேதியிட்ட பதிவில் நான் சொன்னது-
//முடிவுகள் அறிவிக்கும் தினத்தன்று கோசார நிலைமை----ராசி நாதன் சூரியன் ராசிக்கு 9 இல் உச்சம்;ராசிக்கு யோகன் செவ்வாய்,ராசிக்கு 9 ஆம் வீடாகிய சொந்த மேஷத்தில்,ராசிக்குத் தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன்,ராசிக்கு 9 இல்,(தர்ம கர்மாதிபதி யோகம்),ராசிக்குத் தன லாபாதிபதியாகிய புதன்,ராசிக்கு 9 இல்,அனைத்துக்கும் மேலாக,ராசிக்குப் பஞ்சமன் குரு 9 இல்.;வேறென்ன வேண்டும்,வெற்றியை அளிக்க!//

//.எனவே ஆட்சி அமைப்பது நிச்சயம் //

கேப்டனுடன் கூட்டு சேர்ந்ததனால் இந்த இமாலய வெற்றி சாத்தியமாயிற்று!

எனவே கருப்பு ராகுவின் பலம் நிச்சயம் துணை செய்திருக்கிறது!




அம்மாவுக்கு வாழ்த்துகள்!

மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள்-உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து!

அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!

மீண்டும் வாழ்த்துகள்!

19 கருத்துகள்:

  1. என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை? சூரியன் மறையும் அந்த வேலையில் தெரியும் மாயத்தோற்றங்கள் எல்லாம் மெல்ல மறைந்துதான் போகும். நீங்கள் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடந்தன. நல்ல ரசிப்புதன்மைதான் சென்னைகாதலருக்கு. கை, மாம்பழம் , சிறுத்தை, மஞ்சள் துண்டு என வெளுத்து கட்டிவிட்டீர்கள்.
    எப்படியோ இந்த ஆட்சியாவது ஒரு நல்ல ஆட்சியாக அமைந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொன்ன சோதிடம் பலித்துவிட்டது!
    “மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள்-உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து!
    அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!”என்ற உங்கள் நம்பிக்கையும் பலிக்கட்டும்!!

    பதிலளிநீக்கு
  3. கக்கு - மாணிக்கம் சொன்னது…

    // என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை? சூரியன் மறையும் அந்த வேலையில் தெரியும் மாயத்தோற்றங்கள் எல்லாம் மெல்ல மறைந்துதான் போகும். நீங்கள் மேற்கோள் காட்டிய அனைத்தும் நடந்தன. நல்ல ரசிப்புதன்மைதான் சென்னைகாதலருக்கு. கை, மாம்பழம் , சிறுத்தை, மஞ்சள் துண்டு என வெளுத்து கட்டிவிட்டீர்கள்.
    நன்றி கக்கு!
    எப்படியோ இந்த ஆட்சியாவது ஒரு நல்ல ஆட்சியாக அமைந்தால் சரிதான்.//
    அதுவே என் எதிர்பார்ப்பும்!

    பதிலளிநீக்கு
  4. வே.நடனசபாபதி கூறியது...

    நீங்கள் சொன்ன சோதிடம் பலித்துவிட்டது!
    “மக்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறார்கள்-உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து!
    அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்!”என்ற உங்கள் நம்பிக்கையும் பலிக்கட்டும்!!
    இதுவும் பலித்தால்தான் நாட்டுக்கு நல்லது!
    நன்றி சபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு
  5. Congratulations... your prophesies have come true. What a foresight. I refer to the series of earlier blogs reproduced now. Choice of words amazing.
    It is the fond hope of one and all that the present rule would be different . In case it is possible, would it be possible to foresee the type of governance the new regime would offer during the next five years. Vasudevan

    பதிலளிநீக்கு
  6. Vasu கூறியது...

    // Congratulations... your prophesies have come true. What a foresight. I refer to the series of earlier blogs reproduced now. Choice of words amazing.
    It is the fond hope of one and all that the present rule would be different . In case it is possible, would it be possible to foresee the type of governance the new regime would offer during the next five years. //

    the prediction has to be made as per mundane astrology,for which we have to wait till she takes charge.i may be able to make a study based on the time of assuming office!
    thank you for your appreciative words.

    பதிலளிநீக்கு
  7. மாற்றம் இல்லையேல் மாறி விடும் இந்த ஆட்சியும்

    பதிலளிநீக்கு
  8. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    //மாற்றம் இல்லையேல் மாறி விடும் இந்த ஆட்சியும்//
    இதில் சந்தேகம் இல்லை;நல்லதே நடக்கும் என நம்புவோம்!
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா15 மே, 2011 அன்று PM 12:01

    கலக்கல் அய்யா

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா15 மே, 2011 அன்று PM 12:01

    அருமையான அரசியல் கவிதை

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா15 மே, 2011 அன்று PM 12:02

    ஜெயபேரிகை நல்ல தலைப்பு!அம்மா ஆட்சி வந்தால்தான் மக்களுக்கு மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  12. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    // கலக்கல் அய்யா//
    நன்றி சதீஷ்!

    பதிலளிநீக்கு
  13. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    //அருமையான அரசியல் கவிதை//
    நன்றி!
    // ஜெயபேரிகை நல்ல தலைப்பு!அம்மா ஆட்சி வந்தால்தான் மக்களுக்கு மகிழ்ச்சி!//
    மகிழ்ச்சிதான்.ஆனால் அது நீடிப்பது அம்மாவின் கையில்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  14. அம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..

    1. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

    2. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு

    3. செம்மொழி நூலகம் அகற்றம்

    இன்னும் எவ்வளோ வரப்போகுதோ

    பதிலளிநீக்கு
  15. அருமை..அருமை..அருமை..என்னை ஆச்சிரியபட வைக்கிறது...நல்லா யோசிக்கறீங்க..


    http://zenguna.blogspot.com/

    பதிலளிநீக்கு
  16. ராஜேஷ், திருச்சி கூறியது...

    அம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..

    1. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

    2. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு

    3. செம்மொழி நூலகம் அகற்றம்

    இன்னும் எவ்வளோ வரப்போகுதோ

    செயலகம் கோட்டைக்கு மாறுவதைப் பல historians, conservationists,former bureaucrats
    வரவேற்றிருக்கிறார்கள்.செயலகம் மாறுவதால் நூலக மாற்றம் தவிர்க்க முடியாதது.ஒஅவசரப்படாமல் பொறுத்திருங்கள்.
    நன்றி!

    பதிலளிநீக்கு
  17. குணசேகரன்... கூறியது...

    //அருமை..அருமை..அருமை..என்னை ஆச்சிரியபட வைக்கிறது...நல்லா யோசிக்கறீங்க..//
    நன்றி குணசேகரன்.

    பதிலளிநீக்கு
  18. ஐயாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. செங்கோவி சொன்னது…

    //ஐயாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்.//
    நன்றி செங்கோவி!

    பதிலளிநீக்கு