தொடரும் தோழர்கள்

திங்கள், நவம்பர் 29, 2010

வரலாறு-அத்தியாயம்-4--ராஜியும் முதுமையும்

இது ஒரு தொடர்.2009 ஆம் ஆண்டில் எழுதத்தொடங்கி,நடுவில் தேக்கமடைந்து விட்ட தொடர்.
இந்தப் பதிவைப் படிக்கும் முன் பழைய இடுகைகளையும் தயவு செய்து படித்து விடுங்கள்அப்போதுதான் தொடர்ச்சி இருக்கும்.
பழைய இடுகைகள்—
http://chennaipithan.blogspot.com/2009/03/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_15.html
http://chennaipithan.blogspot.com/2009/04/blog-post_22.html
http://chennaipithan.blogspot.com/2009/05/3a.html
இனி வரலாற்றைத் தொடர்வோம்.
-*-*-*-*-*
ராஜிக்கு இந்த ஜூலையில் 92 வயது முடிந்துவிட்டது.திடீரென்று உடல் தளர்ந்து விட்டது.முன்பே தளர்ந்து விட்ட உடல்தான்.ஆனால் அவளது அசாத்திய மன உறுதி, தளர்ச்சியை வென்று முன் நின்றது.ஆனால் அந்த மன வலிமை ஒரே நாளில் அகன்று விட்டது.எனவே உடல் வென்று விட்டது.அவள் முன்பெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்”எங்காத்திலேயே என் சித்திதான் 92 வயது வாழ்ந்தாள்.நானும் அதே மாதிரி இருப்பேன் போலிருக்கு”என்று.எனவே அந்த 92 வயது என்பது மனோதத்துவ ரீதியாகவும் அவளைப் பாதித்திருக்கிறது.

இதுவரை,மெல்ல நடந்தாலும்,துணையின்றி நடந்த அவள்,இப்போது கம்பூன்றி நடக்கிறாள்.இரவில் பாத்ரூம் செல்லும்போது அவளது பிள்ளையின் அறிவுரைப்படி வாக்கர் உபயோக்கிறாள்.காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை.ஆனாலும் காலையில் வழக்கம் போல் சீக்கிரம் குளித்து(நாற்காலியில் அமர்ந்துதான்), ஸ்லோகங்கள் சொல்கிறாள்.ராம ஜபம் செய்கிறாள்.அவளது பொழுது போக்கு கச்சேரி கேட்பது, ஓரிரண்டு தொலக்காட்சித்தொடர்கள் பார்ப்பது,பிடித்த் திரைப்படம் ஒளிபரப்பப் பட்டால் பார்ப்பது-(அதுவும் பார்க்கும்போதே உறக்கம் வந்து விடுகிறது.)அடிக்கடி சோர்ந்து படுக்க வேண்டி நேர்கிறது.இப்போதெல்லாம் அவள் இறைவனிடம் வேண்டுவது ஒன்றுதான்”ஆண்டவா,நானும் கஷ்டப்படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு”

இத்தகைய முதியவர்களின் உபாதைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமா?அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் எத்தகைய சோதனை என்பதை உணர்கிறோமா?இந்த வயதில் அவர்களுக்குத் தேவை வெறும் மூன்று வேளை சோறில்லை. அன்பு;சுற்றத்தின் அன்பு;சூழலின் அன்பு.ஆதரவான பேச்சு. இதெல்லாம் எத்தனை வசதிகள் நிறைந்த முதியோர் இல்லமாக இருந்தாலும் அங்கு கிடைக்குமா?

இப்போதெல்லாம் ராஜி அடிக்கடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து விடுகிறாள்.

வாருங்கள்!நாமும் அவற்றில் பங்கு கொள்வோம்.

(தொடரும்)

12 கருத்துகள்:

 1. //காது மந்தமாகி விட்டது.ஏதாவது படிக்க நினத்தாலும் நீண்ட நேரம் படிக்க முடிவதில்லை//

  முதுமையின் கொடுமையை விவரிக்கும் அழகான வரிகள்.உறுப்புக்கள் அனைத்தும் வலிமை இழந்துவிட்டால் என்ன வசதி இருந்தாலும் வாழ்க்கை கொடுமையே.

  பதிலளிநீக்கு
 2. முதுமையின் கொடுமை ரொம்ப கஷ்டம் சார்.

  பதிலளிநீக்கு
 3. இனியவன் அவர்களே,
  முதியவர்கள் படும் கஷ்டங்களை நம்மால் உணர முடியாது.அக்கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளவும் முடியாது.ஆனால் நம்மால் அன்பு செலுத்த முடியும்.ஆதரவாக இருக்க முடியும்.அவர்களுக்குத் துணையாக நாம் இருக்கிறோம் என்று உணர வைக்க முடியும்.இதைத்தான் வீட்டில் உள்ள மற்றோர் செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்குமொரு நாள் வயதாகும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. முதியவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்தவன் நான்.அவர்களுக்கு தேவை வேளைக்கு உணவோ பணமோ அல்ல அன்பும் ஆதரவான நாலு வார்த்தைகளும் தான்.இதை நாம் செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. ”ஆண்டவா,நானும் கஷ்டப்படாமல்,மத்தவாளையும் கஷ்டப் படுத்தாமல் என்னைக் கொண்டு போயிடு”//

  என்னோட அத்தை சொன்னது இதே..


  நாம் எல்லாரும் விரும்புவதும் இதே..

  பதிலளிநீக்கு
 6. @ஹரிஸ்
  //அவர்களுக்கு தேவை வேளைக்கு உணவோ பணமோ அல்ல அன்பும் ஆதரவான நாலு வார்த்தைகளும் தான்.இதை நாம் செய்ய வேண்டும்//
  இதைக் கூடச் செய்ய இயலாத நிலையில் இன்றைய இளைய தலைமுறையின் பெரும்பான்மை யினர் இருப்பதுதான் வேதனை.
  நன்றி ஹரிஸ்.

  பதிலளிநீக்கு
 7. @பயணமும் எண்ணங்களும்
  சரியாகச் சொன்னீர்கள்.வயது ஏற ஏற,முடிவு நெருங்க நெருங்க,எல்லோர் எண்ணங்களும் இதுவாகத்தான் இருக்கும்.
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 8. எங்க அப்பா சொன்னது
  " நான் என் சின்ன வயதில் இனிப்பு வகைகளை சாப்பிட ஆசைப்பட்ட போதெல்லாம் எனக்கு சரியான சாப்பாடு கூட கிடைக்கவில்லை காலையில் கஞ்சி மதியம் சோறு அவ்வளவுதான் ஆனால் இப்ப லட்ச்சகன்னிக்கில் பணம் இருந்தும் என்னால் பிடித்ததை சாப்பிடமுடியவில்லை- சுகர். நான் எதற்கு பிறந்தேன் என்றே தெரியவில்லை" இதை என்னிடம் சொல்லும்போது வேதனையாக இருந்தது தீபாவளி அன்று.

  பதிலளிநீக்கு
 9. @THOPPITHOPPI
  வேதனைதான்.ஆனால்,ஆறுதல் சொல்ல உடன் சுற்றம் இருந்தால் பரவாயில்லை.அதுவும் இல்லாதவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.
  இடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், "இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்." என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. //திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன்//
  காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்.காத்திருந்ததற்கு நன்றி. உங்கள் வாழ்த்துகளுடன், தொடர்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. //திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன்//
  காக்க வைத்தமைக்கு வருந்துகிறேன்.காத்திருந்ததற்கு நன்றி. உங்கள் வாழ்த்துகளுடன், தொடர்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு