தொடரும் தோழர்கள்

ஞாயிறு, நவம்பர் 21, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?(பாகம்-2)

இத்தலைப்பில் வந்த என் முந்தைய பதிவுக்குப் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டுத் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருந்தனர். அவற்றின் மூலம் எனக்குக் கிடைத்த மிகத் தெளிவான செய்தி! என் பதிவில் பின்னுட்டம் வர வேண்டும் என்றால் நான் அடுத்தவர் பதிவுகளைப் படித்து(படிக்காமலும்!) பின்னூட்டம் இட வேண்டும்!
இந்த அடிப்படையில் நான் ஒரு பின்னூட்ட ஆராய்ச்சி செய்தேன் அதன் கண்டுபிடிப்புகள் கீழே---


1.)உங்கள் நோக்கம் பிரபல பதிவுகளைப் படித்து,ரசித்துப் பின்னூட்டம் இடுவது மட்டும்தான் என்றால்,அவ்வாறே செய்யுங்கள். ஆனால், அதற்குப் பதிலாக,அவர்கள் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுவார்கள் என்று எதிர் பார்த்துச் செய்யாதீர்கள்.கடமையைச் செய்யுங்கள்;பலனை எதிபாராதீர்கள்.பின்னூட்டம் வந்தால் அது ஒரு போனஸ்.


2)சில பதிவர்கள் குழுக்களாகச் செயல் படுகிறார்கள்.குழுவின் உறுப்பினர்கள் பதிவுகளில் மாற்றி,மாற்றி பின்னூட்டம் இடுகிறாரகள்
(உ-ம்) அ வின் பதிவில் ஆ,இ,.ஈ,உ ஆகியோர் பின்னூட்டம் இட்டிருந்தால்,ஆவின் பதிவில் அ,இ,ஈ,உ அவர்கள் பின்னூட்டம் கட்டாயம் இருக்கும்.இவ்வாறு மாற்றி மாற்றி நடக்கும்..


இப்படி ஒரு குழுவில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் .நீங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டால்,அது பல விதங்களில் சௌகரியம்.

அ).நீங்கள் எழுதுவது ஓட்டையாக இருப்பினும், பாராட்டுப் பின்னூட்டங்கள் வந்து சேரும்.

ஆ)கவிதை என்ற பெயரில் என்ன எழுதினாலும் அது கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படும்.ஹைக்கூ இலக்கணத்தில் அடங்காதவையும் ஹைக்கூவாகப் போற்றப்படும்..

இ)படிக்கப் படாமலே கூடச் சில பின்னூட்டங்கள் வரக்கூடும்.அது மிக எளிது—super,nice என்ற ஒரே சொல்லில்.

ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர்வதற்கு ஒரு சாதனமாக பதிவுலகை நாடியிருந்தால், பின்னூட்டங்கள் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எழுதுங்கள்.எழுதிக் கொண்டேயிருங்கள்.நீங்கள் எழுதியவற்றை வேண்டும் போதெல்லாம் நீங்களே படித்து ரசித்துக் கொள்ளலாம்—தன் அழகைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிப்பது போல! !

வாருங்கள்! பதிவுலகை நம் எழுத்துக்களால் நிரப்புவோம்!
(நண்பர்களே!இது முழுக்க முழுக்க ஒரு நகைச் சுவைப் பதிவு.லேபிலில் நானே குறிப்பிட்டிருக்கிறேன்—நகைச்சுவை,மொக்கை என்று)

(குமார்,காயத்ரி,உங்களைக் காக்க வைத்து விட்டேன்.{காதல்-திருக்குறள் கதை} அப்பாராவ் காலரியில்தானே இருக்கிறீர்கள்?இதோ வந்துவிட்டேன்.)

6 கருத்துகள்:

 1. நகைச்சுவையாக இருந்தாலும் அதுதான் யதார்த்தமும் கூட.

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி,இனியவன் அவர்களே

  பதிலளிநீக்கு
 3. எங்களைப்போன்ற 'புதிய' பதிவர்கள் செய்யவேண்டியதை, நீங்களே ஆராய்ந்து சொல்லிவிட்டீர்கள். நன்றி.பல.

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி நடனசபாபதி அவர்களே.

  பதிலளிநீக்கு
 5. பின்னூட்டங்கள் அதிகமாக வரும் வழியை வெற்றிகரமாக உணர்ந்து கொண்டீர் போலும் ! அதிகரித்துவரும் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு சான்று ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 6. @ vasu,

  :-}
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு