தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 03, 2010

ஊழிக்கூத்து

பிரம்மாண்டப் பிரபஞ்ச மௌனத்தின் பேரொலி
அண்ட பேரண்ட ஆதாரப் பெருஞ்சூட்டின் நடுக்கும் குளிர்
விரிந்து நிற்கும் மயானப் பிண வாடையின் சுகந்தம்
எல்லையற்ற ஆகாசக் கும்மிருட்டின் கூசும் ஒளி
நடக்கட்டும் நாடகம்
அடிக்கட்டும் தாரை தப்பட்டை
வெடிக்கட்டும் தரை பிளந்து
துடிக்கட்டும் பிறவா உயிர்
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


ஒற்றைக் குருசைக் கையில் ஏந்திவா!
நெற்றி நிறையத் திருநீரு பூசி வா!
திருக் கபால மேட்டிலே திருமண் இட்டு வா!
தொப்பி அணிந்து திசை நோக்கித் தொழுது வா!
மனித நேயம் தொலை!
மதம் பிடித்து அலை!
துணிந்து செய் கொலை!
இதுவே இன்றுன் நிலை!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!


நாடகமே உலகம்
நாமெல்லாம் நடிகர்கள்
எழுதியவன் யார்?
இயக்குபவன் யார்?
யாருக்கும் விடை தெரியாக் கேள்விகள்
நாடகமே கொஞ்ச நேரம்
வேடம் கலைத்த பின் போகுமிடம் ஒன்றன்றோ
பிரிவினையின் உஷ்ணத்தில்
குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
இல்லாமல் போகட்டும்.
தொடங்கட்டும் ஊழிக் கூத்து!
தீம் தரிகிட!தீம் தரிகிட!தீம் தரிகிட!
அமைதி!அமைதி!அமைதி!

17 கருத்துகள்:

 1. பாதி புரிந்தது;பாதி புரியவில்லை. நீங்கள் சொல்ல வந்த செய்தி புரிகிறது.படிக்க நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. செய்தி புரிந்ததல்லவா?நீங்கள் அறிந்தவர் தான்;’அறியாதவன்’ அல்ல!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான கவிதை.
  'புயலுக்குப்பின் அமைதி' என்பதுதானே இயற்கை. இருட்டுக்குபின் ஓளி வரும்.
  அது வரை காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 4. @வே.நடனசபாபதி

  பாராட்டுக்கு நன்றி.உங்கள் கூற்று உண்மையே.குளிர்காலத்தின் வருகையே பின் வரும் வசந்த காலத்தின் முன்னறிவிப்புதானே!
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எழுத்துக்களை நடனமாடவைக்க இயலும் என உணர்ந்தேன் . ருத்திர தாண்டவம் கண்ட ஒரு

  அனுபவம். தொடரட்டும் தாண்டவம் வாசு

  பதிலளிநீக்கு
 6. நன்றி வாசு அவர்களே,
  உங்கள் வாழ்த்துகளுடன் மேலும் சிறப்பாக எழுத முயல்வேன்.

  பதிலளிநீக்கு
 7. பிரியமுடன் பிரபு said...
  //அருமையான கவிதை.//
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அருமை.. இதை எப்படி நான் தவற விட்டேன் ?

  பதிலளிநீக்கு
 9. சிந்திக்கத் துடிக்கும் இதை வாசிக்கும் ஒவ்வொரு உள்ளமும் அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 10. LK, இது நானே ரசித்து எழுதிய கவிதை.(கவிதையா எனக் கேட்காதீர்கள்!)எனவேதான் இண்ட்லியிலும்,தமிழ் 10 லும் இணைப்புக் கொடுத்தேன்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. //சிந்திக்கத் துடிக்கும் இதை வாசிக்கும் ஒவ்வொரு உள்ளமும் //
  அதுவே இக்கவிதையின் வெற்றி!
  வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி,!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்,அவர்களே.

  பதிலளிநீக்கு
 12. நாடகமே உலகம்
  நாமெல்லாம் நடிகர்கள்
  எழுதியவன் யார்?
  இயக்குபவன் யார்?//

  நிஜ வரிகள். எல்லாம் அவன் செயல்.

  பதிலளிநீக்கு
 13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன் அவர்களே.

  பதிலளிநீக்கு
 14. எழுத்தாடும் ஊழிக்கூத்து படிக்கவே மனம் கிடுகிடுக்கிறது.

  \\பிரிவினையின் உஷ்ணத்தில்
  குளிர் காய எண்ணும் குறுமதியாளர்கள்
  இல்லாமல் போகட்டும்.\\

  அதர்மம் அழிக்கப் பிறப்பெடுத்த எழுத்துக்களின் ஆவேசம் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 15. அன்பின் பித்தன் - ஊழிக்கூத்து அருமை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு