தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 18, 2010

உங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய வேண்டும்?

”உன் பதிவுக்கு அதிகமான பின்னூட்டங்கள் வரணுமா?”என் நண்பன் கேட்டான்.அவர் பதிவர் அல்ல.ஆனால் பல பதிவுகளையும் படிப்பவர்.

”நானும் ’மாங்கு மாங்கு’ன்னு எழுதித்தான் பார்க்கிறேன்.சமீபத்துல நான் எழுதின பல பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் குவியும்னு நினைத்தேன்.ஒண்ணும் இல்லை.வருகையெல்லாம் சுமாரா இருக்கு;ஆனா பின்னூட்டம் வருவதில்லை.சொல்லுப்பா உன் யோசனையை.” நான் சொன்னேன்.

“கண்ணா,யோசனையெல்லாம் ஓசியில் கிடைக்காது. ரெண்டு பெக் வாங்கிக் குடு.சொல்றேன்.”

”மகா பாவி!எனக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு உனக்குத்தெரியுமில்லே ”

”உன்னை யாருப்பா குடிக்கச் சொன்னது?எனக்கு வாங்கி ஊத்து!”

“சரி,தொலைக்கிறேன்.ஆனால் நட்சத்திர ஓட்டல் எல்லாம் கிடையாது.நமக்கு அந்த பெரிய எழுத்தாளர் அளவுக்கு வசதியோ,வாய்ப்போ கிடையாது”

”தோ பாரு, தி.நகரில் ஓட்டல் அருணா போகலாம்.அங்கதான் பல பெரிய பதிவர்கள் உக்காந்து யோசிக்கிறாங்களாம்.”

“சரி வா, போய்த்தொலைவோம்”

போனோம்.நண்பன் ஆரம்பித்தான்.நான் ஒரு ஸ்ப்ரைட். ”உம் .உன் யோசனையைச் சொல்லு”

“இரப்பா.சுருதி சேரட்டும்.”

ஒரு பெக் முடிந்தது.அடுத்தது வந்தது.

“இப்ப, சொல்லு.”

“இதோ பாரு.நீ நல்லா சுவாரஸ்யமா எழுது.பின்னூட்டம் தன்னால வரும்.”

எனக்கு சுர் ரென்று கோபம் வந்தது.முடியாத விஷயத்தைப் பற்றி இவன் சொல்வதற்கா செலவு?

“நடக்கக் கூடியதா சொல்லு.என்னால முடிஞ்ச அளவுக்குத்தான் எழுத முடியும்.”

”அப்ப ஒண்ணு செய்யேன்.உன் நண்பர்களுக்கெல்லாம் உன் பதிவு பத்திச் சொல்லி அவர்களையெல்லாம் பின்னூட்டச் சொல்லேன்.”

”ஏண்டா,எனக்கு நண்பர்களே இல்லாமப் போகணும்னு நினைக்கறியா?ஒரு ரெண்டு பேரு கிட்ட என் பதிவு பற்றிச் சொல்லிப் படிக்கச் சொன்னேன்.அதக்கப்புறம் அவங்க என்னைப் பார்த்தாலே வேற பக்கமாப் போயிடறாங்க.”

”அப்ப நீயே பல பெயரிலே பின்னூட்டம் போடேன்.”

”போடா.அப்படி எத்தனை பெயரிலே போட முடியும்?”

“முக்கியமான பதிவர்கள் பதிவுக்கெல்லாம் போய்,உன் சுட்டியைக் கொடுத்துப் படித்துப் பின்னூட்டம் போடச் சொல்லிப் பணிவாக் கேட்டுக்கோயேன்.”

“டேய். என் கொலைவெறியைக் கிளப்பாதே”

கிளாசில மிச்சமிருந்ததை வாயில் ஊற்றிக் கொண்டு சொன்னான்.
“கடைசியா பெஸ்ட் யோசனை.”
“என்ன?”

”இந்த சம்பவத்தையே ஒரு பதிவாகப் போட்டு, பிரபல பதிவர்கள் கிட்டயே கேளு,என்ன பண்ணலாம்னு”

இதுதான் நடந்தது..
அவன் சொன்னபடி எழுதி விட்டேன்.

பதிவர்களே.பதிவர்களே,நீங்கள் என்னை எழுத வேண்டாம் என்று சொன்னாலும்,நான் நிறுத்த மாட்டேன். பதிவுக்கடலில் படகாக மிதப்பேன்.கவிழ்ந்து விட மாட்டேன்.நீங்கள் என் படகில் ஏறிப் பயணம் செய்யும் வரை விடமாட்டேன்.

தயவு செய்து சொல்லுங்கள்.

நிறைய பின்னூட்டங்கள் வருவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

20 கருத்துகள்:

 1. பின்னூட்டம் ஒரு அளவுகோல் அல்ல... ஆனால் பின்னூட்டம் எழுதுபவருக்கு ஊக்கம் அளிக்கும் என்பது உண்மை... நலல் தலைப்புகளில் நன்றாக எழுதுங்கள். சக பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுங்கள்.(பதிவு லிங்க் அல்ல ) புதிதாய் ஒருவர் வந்து பின்னூட்டம் அளித்தால் கண்டிப்பாக வந்து பார்ப்பார்கள் பின்னூட்டமும் அளிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 2. LK அவர்களே!
  நிச்சயமாக எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய பதிவுலக நடைமுறைகளை விளக்கியிருக்கிறீர்கள்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. இதுக்குக்கூட பின்னூட்டம் வரல போல...நண்பர் LK சொன்னதை முயற்சி செய்து பாருங்கள்

  பதிலளிநீக்கு
 4. //”தோ பாரு, தி.நகரில் ஓட்டல் அருணா போகலாம்.அங்கதான் பல பெரிய பதிவர்கள் உக்காந்து யோசிக்கிறாங்களாம்.”//

  இது என்ன புதுப்புரளியா இருக்குது? மெய்யாலுமா? :-))

  பதிலளிநீக்கு
 5. ரஹீம் கஸாலி அவர்களே,
  முயற்சியை ஆரம்பித்துவிட்டேன்!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 6. மொய் வெச்சுத்தான் மொய் எடுக்கனும்

  பதிலளிநீக்கு
 7. ILA(@)இளா அவர்களே,
  மொய் வெச்சாச்சில்லே!
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 8. சேட்டைக்காரன் அவர்களே,
  எங்கேயோ,எப்போதோ,ஏதோ படித்த ஞாபகம்.மெய்யா,பொய்யா தெரியாது.
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. பிரவின்குமார் அவர்களே.
  ஹி..ஹி..
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 10. அருணா ஹோட்டல் செல்லலாமா வழி கூறுகிறேன் எவ்வாறு அதிக பயணிகளை கவருவது என்று !( செலவு உங்களுடையது ) படகில் பயணம் செய்யும் ஒரு பயணி. வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 11. "இதோ பாரு நீ நல்லா சுவாரஸ்யமா எழுது!பின்னூட்டம் தன்னால வரும்"

  பதிலளிநீக்கு
 12. //இது என்ன புதுப்புரளியா இருக்குது? மெய்யாலுமா? :-))/

  உங்களைக் கூட அங்க பார்த்து இருக்கேன் சேட்டை...

  பதிலளிநீக்கு
 13. @Vasu,
  போவோம்.உங்க கச்சேரி முடிந்தபின் ஏதாவது பஞ்சாபி உணவகம் போய் ’மக்கீ கீ ரோட்டியும்,சர்ஸோன்க் கா சாக்’ கும் சாப்பிடுவோம்.சரிதானே?

  பதிலளிநீக்கு
 14. @LK,
  //உங்களைக் கூட அங்க பார்த்து இருக்கேன் சேட்டை...//
  அவரை விடப் பெரிய சேட்டைக்காரராக இருப்பீர்கள் போல்!இப்படி மாட்டி விட்டு விட்டீர்களே?
  இனி உங்க இரண்டு பேர் பாடு!

  பதிலளிநீக்கு
 15. @yogarasa
  என் நண்பர் சொன்னதையே திருப்பிச் சொல்றீங்க?
  பார்க்கலாம்!
  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை. நீங்கள் வழக்கம்போல் சுவாரஸ்யமாய் எழுதிக்கொண்டிருங்கள். பின்னூட்டங்களும் பாராட்டுக்களும் தானே வரும்.

  பதிலளிநீக்கு
 17. @வே.நடனசபாபதி,
  //நீங்கள் ’வழக்கம்போல்’ சுவாரஸ்யமாய் எழுதிக்கொண்டிருங்கள்.//
  இதற்கு மேல் எனக்கு வேறுஎன்ன வேண்டும்?
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @பயணமும் எண்ணங்களும்
  நல்ல்..ல நண்பர்தான் போங்க!
  :-D
  வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு