தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 06, 2010

உதயசூரியனும்,இரட்டை இலையும்!

அம்மா அழைத்தார்
”உடனே வா தோட்டத்துக்கு” என்று
சிறிது தாமதித்தேன்
”வந்து பார்” என்று மீண்டும் அழைப்பு.
கை வேலையெல்லாம் காக்கப் போட்டு விரைந்தேன்.
தோட்டம் சென்றேன்.
ஆஹா! என்ன காட்சி!.
கம்பளம் விரித்தது போல்
தரையெங்கும் இலை மூடல்.
தரையெங்கும் கொட்டிக் கிடந்தது இலை!
நிமிர்ந்து பார்த்தேன்
மொட்டையாய் இலயுதிர்த்து நின்றது மரம்!
ஆயினும் சில நாட்களில்
மீண்டும் இலைகள் துளிர்க்கும்
இதுவன்றோ இயற்கை நியதி?
இருள் பிரிந்தும் பிரியா அக்காலையில்
மீண்டும் மரத்தைப் பார்த்தேன்.
அதோ ஒரிரு இலைகள் அசைகிறதோ?
அவை விழக்காத்திருக்கும் இலைகளா?
அன்றி விழுந்த பின் முளைக்கும் துளிர்களா?
உதித்தான் சூரியன்
மெள்ளப் பரவியது வெளிச்சம்
உதய சூரியனின் ஒளியிலே
பளிச்சென்று தெரிந்தது அந்தத்
துளிர்த்து வந்த இரட்டை இலை!

11 கருத்துகள்:

  1. அழகான அங்கதக் கவிதைகள்! அதிலும் திரு.பட்டாபிராமனின் ‘கணிணிக் கவசம்’ மிக அருமை!

    பதிலளிநீக்கு
  2. Subtle imagination. Amazing. Wondering why this kind of talent was in hibernation all these days.Let your talent bloom in all grandeur and let others enjoy your poetic talents. Vasudevan

    பதிலளிநீக்கு
  3. @R.S.Krishnamurthy
    வாருங்கள் ஐயா.நீண்ட நாள் ஒய்வுக்குப் பின் வந்திருக்கிறீகள்!எப்படி இருக்கிறது அல்லுர் வாழ்க்கை?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  4. @vasu
    மிக அதிகமாகவே பாராட்டுகிறீர்கள்.உங்கள் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு முழுமையாக்க முடியும் என்று தெரியவில்லை.நீங்கள் அளித்திருக்கும் ஊக்கம் என்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள உதவும் .
    நன்றி.

    பதிலளிநீக்கு
  5. 'உதய சூரியனின் ஒளியிலே பளிச்சென்று தெரிந்தது அந்தத் துளிர்த்து வந்த இரட்டை இலை'

    கவிதை அற்புதம். தோட்டம், கை, இலை & உதய சூரியன் எல்லாம் இருந்தாலும், மையக்கருத்து ஒரு சிலருக்கு மட்டுமே புரியும்.

    பதிலளிநீக்கு
  6. @வே.நடனசபாபதி
    பாராட்டுக்கு நன்றி.தொடர்ந்து எழுத எனக்கு ஊக்கம் தரும் வார்த்தைகள்.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. @அஹமது இர்ஷாத்,
    வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. உள்ளர்த்தம் புரிகிறது.அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. //உள்ளர்த்தம் புரிகிறது//
    கவிதை ஒரு இலையுதிர் காலத்து மரத்தைப் பற்றியது.நான் கண்ட காட்சி.இதில் ஏதாவது ’உள்ளர்த்தம்’ தெரிந்தால் நான் பொறுப்பல்ல!!
    உங்கள் புரிதலுக்கும்,புரிந்ததை எடுத்துச் சொன்னதற்கும் நன்றி இனியவன் அவர்களே!

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்கள் அதிகமாக வரும் வழியை வெற்றிகரமாக உணர்ந்து கொண்டீர் போலும் ! அதிகரித்துவரும் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை ஒரு சான்று ! வாசுதேவன்

    பதிலளிநீக்கு