நேற்று போய் விட்டது;நாளையை நினையுங்கள்
சரிதான்.
ஆனால் மனசு என்று ஒன்று இருக்கிறதே
ஆகவேதான் பழசையெல்லாம் நினைத்துப்
பார்க்கிறேன்
தளிர்விட்ட காதலை மறக்க முடியுமா?
ஆனால் அவளோ பறந்து போனாளே!
என்னைத் தனிமரம் ஆக்கி விட்டு.
சிட்டுக்குருவியாய் சிறகடிக்கும்
நினைவுகள்.
என் மன ஊஞ்சல் தனில் என்றும் ஆடும் அவள் உருவம்
நெஞ்சோடு கலந்த அவள் நினைவு
மின்னல் வரிகள் போல் தோன்றி மறைவதில்லை.
நிரந்தரமானது
திடங்கொண்டு போராடும் வலிமையின்றி
அவள் பிரிந்து போனாள்
அவள் மூச்சுக்காற்று எனக்கு மூங்கில்காற்றாகவே
ஒலித்தது
அவள் நினைவுகள் என் நெஞ்சை
மகிழ்நிறை நெஞ்சாக்கி விட்டன.
மறக்க முடியுமா அவளை!
பிற்சேர்க்கை: இது வலைப்பூக்களால் தொடுக்கப்பட்ட,காதலைப் பற்றிப் பேசும் ஒரு சரம்!அவ்வளவே..இதற்கும் வலைச்சரத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;நான் இந்த வார வலைச்சர ஆசிரியரும் இல்லை!இரு முறை அம்முட்கிரீடத்தைச் சுமந்து விட்டேன்! இச்சிட்டுக்குருவிக்கு இப்போது அப்பனங்காயைத் தாங்கும் வலிமையில்லை.
திங்களன்று இப்பதிவு வெளியானது சிறு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதோ என அஞ்சுகிறேன்.மன்னித்தருள்க!