தொடரும் தோழர்கள்

கவிஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிஞன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 11, 2014

இன்றும்,என்றும் வாழ்வான் பாரதி!






//நோயாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்

அதற்கடுத்த விராமா நுஜனும் போனான்


சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர்புகழு மிராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!--// ( பாரதி)


 ஆம்!

பாரதிக்குச் சாவில்லை!

இன்னும் வாழ்கிறான் நம்முடன்.

காலனைச் சிறுபுல்லென மதித்துக்

காலருகே வந்தால் அவனை மிதிக்கவும்

எண்ணிய வீரனுக்குச் சாவேது?

காலத்தைக் கடந்து அவன் கவிதை வாழும்

உடன் அவனும் வாழ்வான்.