தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜூலை 03, 2015

பாபநாசம்



இன்று வெளியாகியுள்ள படம் பாபநாசம்.

முதலில் உலகநாயகனுக்கு வாழ்த்துகள்,இந்தப் படம் வெற்றியடைய.

சிவாஜியை விடக் கமல் சிறந்த நடிகர் எனச் சிலர் சொல்கிறார்கள்

இருக்கத்தானே வேண்டும்?

ஒரு தந்தை தன் மகனைத் திருவிழாவுக்கு அழைத்துப் போகிறார்.வேடிக்கைகளை மகன் பார்ப்பதற்காகத் தன் தோளின் மீது அமர்த்திக் கொள்கிறார்.

இப்போது தந்தை பார்க்க முடியாத சில காட்சிகளை கூட மகனால் காண முடிகிறது.காரணம் அவன் தந்தையின் தோளில் அமர்ந்திருக்கிறான்.

அது போலத்தான் சிவாஜி என்னும் இமயத்தின் தோளில் ஏறி நடிப்பதால் கமலின் நடிப்பு மேலும் சிறப்புடையதாக ஆகிறது.

என்றும் சிவாஜி,சிவாஜிதான்!

இப்போது பாபநாசத்துக்கு வருவோம்.

பாபம் என்றால் என்ன?

மனிதர்கள் செய்யக்கூடாது, செய்தால் அதனால் பிறர்க்குத் தீமை விளையும் என்று விலக்கப்பட்டவை எல்லாம் பாபம்தான்-மலம் மறம்,பழி,துரோகம், பொல்லாங்கு,புலை, துன்மார்க்கம்,என்று பல பொருள்கள் சொல்லப்பட்டிருக்கின்றன

பாவம் என்பது என்ன?பாபம்தான் பாவம்

பாவம் செய்பவன் பாவி ஆகிறான்.

பாவத்தை எப்படி நாசம் செய்வது?

கங்கையில் குளித்தால் பாவம் போகுமென்பர்.

அவ்வளவு எளிதா என்ன?

செய்த பாவத்திற்கு மனம் வருந்தி அதற்கான நிவர்த்தி தேடினால் ஒரு வேளை நாசமாகலாம்.

என்னதான் முடிவு என்று ஒரு படம்.அதில் பாவம் செய்த பாலையா,பின்னர் அனைவருக்கும் உதவிகள் செய்து நல்ல பெயர் பெற்றிடுவார்.

கடைசியில் பழிவாங்க எண்ணியிருந்த கதாநாயகனே அவர் காலில் விழுவான்.

அங்கே பாபம் நாசமடைகிறது!

பாவம் என்றால் அது உடலால் செய்வது மட்டுமல்ல.

மனோ,வாக்கு,காயம் என்பார்கள்

அதாவது எண்ணம், சொல் ,செயல்

தீமையை எண்ணுவது பாவம்

தீமையைப் பேசுவது பாவம்

தீமையைச் செய்வது பாவம் 

ஒரு குட்டிக்கதை .உங்களுக்கு அனைவருக்கும் தெரிந்ததே

இரு நண்பர்கள்

ஒருவன் விலைமகள் வீட்டுக்கும் மற்றவன் கோவிலுக்கும் சென்றான்

விலைமகளிடம் கூடும்போது கூட அவன் மனம் நண்பன் சென்ற கோவிலின் மீது இருந்தது.
கோவிலுக்குச் சென்றவன் எண்ணமோ,விலைமகளிடம் நண்பன் பெறும் இன்பம் பற்றியே இருந்தது

முதல்வன் உடலால் பாவம் செய்யும்போதே எண்ணத்தால் புண்ணியம் செய்தான்

இரண்டாமவன்,உடலால் கோவிலில் இருந்தாலும் அதன் பயனைப் பெற விழையாமல் ,எண்ணத்தால் பாவம் செய்தான்.

இதில் யார் பாவம் செய்தவர்?

 அடிப்படையானது மனக்கட்டுப்பாடு.

அது இருந்தால் சொல்லும் செயலும் சரியாகவே இருக்கும்.

கடைசியில் ஒரு  பழைய நகைச்சுவை

இலங்கையில் ஒரு கடையில் போர்டு மாட்டியிருந்ததாம்”நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று.அதென்ன பாவிக்கும் என்று விசேடமாய்.?மற்றவர்கள் எல்லாம் புண்ணியம் செய்தவருக்கு மட்டுமே விற்பார்களா?

அல்ல பாவிக்கும் என்றால் உபயோகிக்கும்,பயன்படுத்தும் என்று பொருள்!


24 கருத்துகள்:

  1. என்ன இது இன்னும் பாநாசம் பற்றி பதிவு எழுதவில்லையே என்று. எழுதிவிட்டீர்கள். நீங்கள் பாபநாசம் என்ற ஊர் பற்றி எழுதுவீர்கள் என நினைத்தேன். அப்படி எழுதினால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பற்றி எழுதுவதோடு தஞ்சை அருகே உள்ள ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் பிறந்த ஊரான பாபநாசம் பற்றியும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குத் தெரியாத தகவல்!
      ஆனால் பாபநாசம் பக்கத்தில் உள்ள குத்தாலத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு
      நன்றி

      நீக்கு
  2. உலக நாயகனில் தொடங்கி உயர்ந்த தத்துவத்தில் பதிவு..

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு.

    உங்கள் எழுத்துக்களில் ஒரு ஒரிஜினாலிடி இருக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை பகிர்ந்து கொள்கிறீர்கள்.
    நன்று.

    God Bless You

    பதிலளிநீக்கு
  4. அப்படின்னா ,பாபநாசம் அருவியில் குளித்தால் பாவம் தொலையாதா :)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா

    வெற்றியடைய பிராத்திப்போம் சொல்லிய கதை நன்று ஐயா த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. உலகநாயகன் பேசுவது போலவே உங்கள் பதிவும்...அவர் காத்துத் தொத்திக்கொண்டது போலும்..ஹஹஹ் பதிவு அருமை தத்துவக் கதையுடன்...அறிந்த கதைதான் ஆனால் உங்கள் நடையில் அது இன்னும் அழகாக உள்ளது...

    பதிலளிநீக்கு
  7. "அடிப்படையானது மனக்கட்டுப்பாடு.
    அது இருந்தால்
    சொல்லும் செயலும் சரியாகவே இருக்கும்."
    அதுவே உண்மை!
    ”நாங்கள் பாவிக்கும் புடவை விற்கிறோம்” என்று
    நம்ம இலங்கைக் கடை போர்டு இருந்ததா?
    அதுவா, பாவிக்கும் என்றால்
    உபயோகிக்கும்,பயன்படுத்தும் என்று பொருள்!
    என்று நன்றே உணர்த்தினீர்கள்!

    பதிலளிநீக்கு
  8. பாபநாசம் தொடங்கி ஒரு சுற்று சுற்றி வந்து பல செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு
    இலங்கையில்.....SuPer

    நானும் இலங்கைதான்

    பதிலளிநீக்கு