தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 26, 2014

மரண வாடை-பகுதி-2



அந்தச் சிறுவனின் மரணம் சங்குவைப் பெரிதும் பாதித்தது.

ஆனால் தான் எந்த வகையிலும் அம்மரணத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது என்பதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.

மரணத்தின் வாடை,அது எப்படிப்பட்ட மரணமாயினும் ,தன்னால் உணர முடிவதை ஒரு திறமையாகக் கொள்ள அவனால் முடியவில்லை.

அந்நிகழ்வுக்குப் பின் பல மாதங்களுக்கு அந்த வாடை இல்லை;அதாவது அவனுக்குத் தெரிந்தவர் எவரும் இறக்கவில்லை.

அந்நாட்களில்தான் அவனது முறைப்பெண் கவிதாவுக்குத் திருமணம் முடிவானது.

அவன் கவிதாவை நேசித்தவன்

ஆனால் அவர்கள் வசதி கூடியவர்கள் என்பதால் அவன் நேசம் அவ்வளவில் நின்று போயிற்று.

அதன் பின்னும் அவன் நேசம் மனத்துக்குள் அழுந்திக் கிடந்தது.

அவள் திருமணம் நன்கு நடந்து  அவள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே அவன் மனமாற விரும்பினான்.

திருமண ஏற்பாடுகளில் இயன்ற வரை உதவி செய்தான்

மாப்பிள்ளையை அவன் முன்பே பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை.

திருமணத்துக்கு முதல் நாள் பையன் வீட்டார் வந்து சேர்ந்தனர்.

அவர்களை வரவேற்கும் கும்பலில் அவனும்.

மாப்பிள்ளை  வண்டியிலிருந்து இறங்கி நடந்து அவனை நெருங்கினார்.

குப்பென்ற அந்த வாடை,

மறக்க முடியாத அதே வாடை.

மாப்பிள்ளை அவனைக்கடந்து அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளின் பக்கம் செல்லலானார்,அந்த வாடையையும் அழைத்துக் கொண்டு.

அவனுக்கு நெஞ்சு அடைப்பது போலிருந்தது..அவசரமாகப் போய்த் தண்ணீர் எடுத்துக் குடித்தான்.

கடவுளே! இது என்ன சோதனை.?மாப்பிள்ளை இறக்கப் போகிறார்.நாளை கிருமணம்.அதன் பின் அவர் இறந்தால் கவிதாவின் வாழ்க்கை என்னாகும்?

கல்யாணத்தை நிச்சயமாகத் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தக் காரணத்தைச் சொன்னால் யாருமே ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

மாறாக இவனது நோக்கத்தின் மீதே சந்தேகம் ஏற்படும்.

என்ன செய்யலாம்?

யோசித்தான்…..

(இறுதிப் பகுதி இனி வரும்)

22 கருத்துகள்:

  1. சாகும் காலம் தெரிந்தால் வாழும் காலம் நரகமாயிடும். பாவம் அவன். காத்திருக்கிறேன் இறுதி பகுதிக்கு.

    பதிலளிநீக்கு
  2. அடடா! சங்கு யோசித்து முடிக்கும் வரை காத்திருக்கவேண்டுமா? சரி. காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு இயக்குனரை நீங்கள் சந்திக்கலாம் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. அடடா! சுவாரசியமான இடத்தில் கட் பண்ணி விட்டீர்களே.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு மரண வாடை எதுவும் வரவில்லை. ஆனால் உங்கள் கதை படிக்கும்போது மரண பயம் கொடுக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. சங்கு என்ன செய்தான் என்ற ஆவலோடு அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இரண்டும், மூன்றாம் முடிவும் படித்தேன் த்ரிலாக இருந்தது ஐயா....
    எனது பதிவு (என் நூல் அகம் 2) படிக்க அழைக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு