தொடரும் தோழர்கள்

வியாழன், ஜூலை 12, 2012

நம்பிக்கையும் வெவகாரம் வேலுச்சாமியும்!


//விசுவாசம் என்பது என்ன?

பொதுவாக இந்தச் சொல் விவிலிய மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல்.

if you have faith as small as a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move. Nothing will be impossible for you.”
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” - (மத்தேயு 17: 20).

இதிலிருந்து விசுவாசம் என்பது faith என்பதைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.
நம்பிக்கை என்பது சாதாரணச் சொல்.

விசுவாசம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

சிக்எனப் பிடிப்பது.//

மேலே உள்ளது எனது முந்தைய பதிவொன்றில் நம்பிக்கை பற்றி நான் எழுதியது.

என் நம்பிக்கை எந்த அளவுக்கு உறுதியானது என்று சோதிக்கும் நேரம் நேற்று வந்தது.

1 ஆம் தேதி காலில் அடிபட்டது.2 ஆம் தேதி மருத்துவரிடம் சென்றேன். அன்று கால் அப்பமாக வீங்கியிருந்தது.கிரேப் பேண்டேஜ் கட்டுப் போட்ட மருத்துவர், ஒரு வாரம் கழித்தும் வீக்கம் குறையவில்லையெனில்  பிளாஸ்டர் (மாக்கட்டு) போட வேண்டியதுதான் எனச் சொல்லி விட்டார்.

தினமும் நான் என் காலைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். காலையில் குறைவாக இருக்கும் வீக்கம் இரவுக்குள் அதிகமாகி விடும். ஆயினும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டுதானிருந்தது.நேற்று மருத்துவரிடம் போகத் தீர்மானித்தேன்.வீக்கம் முழுவதும் வற்றாததால், மாக்கட்டுப் போட வேண்டும் எனச் சொல்லி விடுவாரோ எனப் பயம்!

எங்க்ள் காலனியில் இருந்து அருள் பாலிக்கும் எங்கள் காவல் தெய்வமான விநாயகரை (லக்ஷ்மி கணபதி) வணங்கி வேண்டினேன்,மாக்கட்டுப் போடாமல் காப்பாற்றுங்கள் என்று.

என் வேண்டுதல் நிறைவேறும் என்உறுதியான நம்பிக்கையில்----

ஆட்டோக்காரரிடம் மருத்துவனை போய் வர வேண்டும் .ஒரு 15 நிமிடம் தான்  காத்திருக்க  வேண்டும் எனக் கூறினேன்.
மிகக் குறைவான அளவு பணமே எடுத்துச் சென்றேன்.

சென்றேன் ,கண்டேன் ,வந்தேன்.

என் நம்பிக்கை வீண்போகவில்லை.

எல்லாம் ஓகே.30 ஆம் தேதி வாருங்கள் x ரே எடுத்துப் பார்த்து  விடலாம் என மருத்துவர் சொல்லி விட்டார்.அதுவரை கிரேப் பேண்டேஜ்தான்.  
சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இது நம்பிக்கைக்கு ஒரு மிகச் சிறிய உதாரணம்.

டிஸ்கி:வெவகாரம் வேலுச்சாமி சொல்கிறார்”இது என்ன சார் பெரிய விஷயம்?உங்களுக்குத் தெரியும்.கையில் பணமில்லை,நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு வரலாம்;அல்லது ’பரவாயில்ல நாளைக்கு கொடுங்கள் இப்போதே பிளாஸ்டர் போடுகிறோம்’ எனச் சொன்னால் ஆட்டோக் காரரைக் கைபேசியில் அழைத்துச் சொல்லி விடலாம் என்பது போன்ற மாற்று வழிகள் இருப்பது.என்ன பெரிய நம்பிக்கை!ஹே,ஹே!

23 கருத்துகள்:

 1. ஆஹா... வேலுச்சாமி ரொம்பவே வெவகாரம் புடிச்ச ஆளாயிருக்காரே... உங்கள் கால்நிலை தேறியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி. 30ம் தேதியும் முழுக்க குணமாகிட்டீங்கன்னு டாக்டர் சொல்லிடுவார்ன்றது என்னோட அழுத்தமான நம்பிக்கை.

  பதிலளிநீக்கு
 2. அருள் கூர்ந்து காலுக்கு அதிக வேலை கொடுக்காமல் இருக்க வேண்டுகிறேன்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 3. தங்களுது உடல் நிலை இதன் மேலும் தொல்லை தராமல் விரைவில் மீள இறைவனை வேண்டுகிறேன்.!

  பதிலளிநீக்கு
 4. விசுவாசம் .... தளராத நம்பிக்கை...

  சரியானது தான்

  30 ஆம் திகதி வரை கவனமாக இருங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 5. உங்கள் நம்பிக்கை என்றுமே வீண் போகாது.

  தைர்யமாக இருங்கோ. எல்லாம் சரியாகிவிடும்.

  ஆஸ்பத்தரிக்குச் சென்று வரும்போதெல்லாம் நம்பிக்கையுடனும் அதே சமயம் பொறுமையுடன் இருங்கள், ஐயா.

  இதுபோலத்தான் ஒருவன் ரோட்டில் கடந்த கல் ஒன்றில் தன் கால் நகத்தை இடித்துக்கொண்டு, அந்த நகம் சற்றே பெயர்ந்துபோய் ரத்தம் பீறிட்டது.

  அவன் ஆஸ்பத்தரிக்குச்சென்ற கதையையும் சற்றே படியுங்களேன்.

  தங்களுக்கு பொறுமை தானாகவே வந்து விடும்.

  இணைப்பு இதோ:

  தலைப்பு: ”வாய் விட்டுச்சிரித்தால்”

  http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 6. வேலுச் சாமி ஒருமாதிரியான ஆள்தான் அங்கிள்.

  கவனமாக கால பாத்துக்கோங்க.
  ஒழுங்காக மருந்துகளை எடுத்து கொள்ளுங்க..

  இறைவன் துணை இருப்பார்...

  பதிலளிநீக்கு
 7. வெவகாரம் வேலுச்சாமி என்ன வேணுமாலும் சொல்லட்டும். காலை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை. அது என்றும் வீண் போகாது.

  பதிலளிநீக்கு
 8. நம்பிக்கையே என்றும் வெல்லும்
  விவகாரம் வேலுச்சாமி அவ நம்பிக்கையின்
  நண்பனாயிருப்பான் என நினைக்கிறேன்
  அவன் விதண்டாவாதம் பேசுவது அப்படித்தான்
  நினைக்கவைக்கிறது.அவனை எப்போதும்போல
  அடக்கியே வைக்கவும்
  விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. விரைவில் பூரண நலம் பெற வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ஹா ஹா ஹா நம்பிக்கையின் விசுவாசம் உங்களை காப்ற்றும்

  பதிலளிநீக்கு
 11. வேலுச்சாமிய நம்பாதிங்க கால் குணமாகும் வரை.

  பதிலளிநீக்கு
 12. விசுவாசம் வைத்து விநாயகரை கும்பிட்டபின் வைத்தியர் போடுவாரா மாவு கட்டு.

  கால் விரைவில் குணமாக வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு