தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--

ராமசாமி இறந்து போய் விட்டார்!

பெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.

அவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.

எனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.

வந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.

(ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகிறவர்கள் நம்பலாம்!)

அப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்”என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்?அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்! ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்!”

அந்த ஆன்மா கத்தியது”பாவி !நீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா? நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்?உன் பங்களா எப்படிக் கட்டினாய்? உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்?”

வேலாயுதம் சொன்னார்”ஆமாங்க!நானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு!”

ஆன்மா அலறியது”டேய்,பொம்பளைப் பொறுக்கி!நீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ!”

பொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது!

உடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.

அங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்”யார் இவன்? ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ? அவள் மகனோ?”

அவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்”.யாரப்பா நீ?” அவன் சொன்னான்.

“ஐயா!நான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்.”

அனைவரும் திகைத்து நின்றனர்.

அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.

அவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது!

”அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி நாயிர நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி!
61 கருத்துகள்:

 1. பாரதியின் வாக்கு சத்தியம்!
  எழுத்தறிவித்தவன் இறைவன்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் பித்தன் அவர்களே ! உண்மை உண்மை - அன்ன யாவினும் புண்ணியங் கோடி
  ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் எனக் கூறிய பாரதியின் கூற்று இன்றைக்கு பலராலும் நிறைவேற்றப் படுகிறது. ஆத்மா - சுவர்க்கத்திற்குச் செல்ல கால் வலைமை பெற்றதெனில் அதனை விட வேற் என்ன வேண்டும் மனிதனுக்கு..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. மீனைக்கொடுக்காதே மீனைப்பிடிக்க தூண்டிலைக்கொடு... அது தான் உண்மையான உதவி என்பதை அருமையன நீதி கதையில் உணர்த்தி விட்டீர்கள்.. நன்றி

  பதிலளிநீக்கு
 4. நல்ல நீதி சொல்லும் கதை... எழுத்தறிவித்தவன் இறைவன்... எத்தனை உண்மை...

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணம் 7

  சான்றோர் சபையிலே
  இன்று வியாக்கியானம் செய்யும்
  தெளிவுறச் செய்த ஆசான் கடவுளே....
  எண்ணும் எழுத்தும் கற்றதெல்லாம் அவராலன்றோ.....

  நல்ல பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
 6. அருமையான சிறுகதை. நேற்றைய பதிவை ஒட்டியே இந்தக் கதையின் கருவும் உள்ளது.
  இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்தால் இறைவனும் அருளுவான். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. படிப்புக்கு செய்யும் உதவி குறித்து அருமையான கதை. மற்றதெல்லாம் தூசுதான்.

  பதிலளிநீக்கு
 8. இவைகளை சொல்லவும் ஒருவர் வேண்டுமே நமக்கு.
  சின்ன வயதில் அப்பா சொல்ல கேட்ட பாரதியின் வரிகள்.
  சிறந்த படைப்பு .தொடருங்கள் சென்னை காதலரே !

  பதிலளிநீக்கு
 9. //அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை. //

  இது சொல்லும் விளக்கம் அருமை.

  பழைய கண்ணோட்டத்தில் புதிய கருத்து..அருமை.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கருத்தை சொல்ல வரும் சிறுகதை ,ஆனால் சொர்க்கம் நரகம் என்பதில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இல்லை !

  பதிலளிநீக்கு
 11. தமிழ் மணம் 14

  அருமையான கருத்து ஐயா
  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. கோகுல் கூறியது...

  //பாரதியின் வாக்கு சத்தியம்!
  எழுத்தறிவித்தவன் இறைவன்!//
  நன்றி கோகுல்.

  பதிலளிநீக்கு
 13. cheena (சீனா) கூறியது...

  //அன்பின் பித்தன் அவர்களே ! உண்மை உண்மை - அன்ன யாவினும் புண்ணியங் கோடி
  ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் எனக் கூறிய பாரதியின் கூற்று இன்றைக்கு பலராலும் நிறைவேற்றப் படுகிறது. ஆத்மா - சுவர்க்கத்திற்குச் செல்ல கால் வலைமை பெற்றதெனில் அதனை விட வேற் என்ன வேண்டும் மனிதனுக்கு..... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
  நன்றி சீனா அவர்களே!

  பதிலளிநீக்கு
 14. மாய உலகம் கூறியது...

  //மீனைக்கொடுக்காதே மீனைப்பிடிக்க தூண்டிலைக்கொடு... அது தான் உண்மையான உதவி என்பதை அருமையன நீதி கதையில் உணர்த்தி விட்டீர்கள்.. நன்றி//
  நன்றி ராஜேஷ்!

  பதிலளிநீக்கு
 15. மாய உலகம் கூறியது...

  // தமிழ் மணம் 3//
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //நீட்//
  தேங்க்ஸ்!

  பதிலளிநீக்கு
 17. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //பகிர்வுக்கு நன்றி அய்யா,,//
  நன்றி கருன்.

  பதிலளிநீக்கு
 18. வெங்கட் நாகராஜ் கூறியது...

  // நல்ல நீதி சொல்லும் கதை... எழுத்தறிவித்தவன் இறைவன்... எத்தனை உண்மை...//
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 19. மகேந்திரன் கூறியது...

  // தமிழ்மணம் 7

  சான்றோர் சபையிலே
  இன்று வியாக்கியானம் செய்யும்
  தெளிவுறச் செய்த ஆசான் கடவுளே....
  எண்ணும் எழுத்தும் கற்றதெல்லாம் அவராலன்றோ.....

  நல்ல பதிவு ஐயா//

  நன்றி மகேந்திரன்!

  பதிலளிநீக்கு
 20. வே.நடனசபாபதி கூறியது...

  //அருமையான சிறுகதை. நேற்றைய பதிவை ஒட்டியே இந்தக் கதையின் கருவும் உள்ளது.
  இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்தால் இறைவனும் அருளுவான். வாழ்த்துக்கள்!//

  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 21. Prabu Krishna (பலே பிரபு) கூறியது...

  //படிப்புக்கு செய்யும் உதவி குறித்து அருமையான கதை. மற்றதெல்லாம் தூசுதான்.//
  நன்றி பிரபு!

  பதிலளிநீக்கு
 22. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //இவைகளை சொல்லவும் ஒருவர் வேண்டுமே நமக்கு.
  சின்ன வயதில் அப்பா சொல்ல கேட்ட பாரதியின் வரிகள்.
  சிறந்த படைப்பு .தொடருங்கள் சென்னை காதலரே !//
  நன்றி கக்கு!உங்கள் வாழ்த்துடன் தொடர்கிறேன்.
  “கடவுள் கேட்கும் வரம்”படிக்க வில்லையா,பிடிக்கவில்லையா?!

  பதிலளிநீக்கு
 23. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  //Really super story//
  நன்றி ராஜா!

  பதிலளிநீக்கு
 24. செங்கோவி கூறியது...

  //அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை. //

  //
  //இது சொல்லும் விளக்கம் அருமை.

  பழைய கண்ணோட்டத்தில் புதிய கருத்து..அருமை.//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 25. கந்தசாமி. கூறியது...

  //நல்ல கருத்தை சொல்ல வரும் சிறுகதை ,ஆனால் சொர்க்கம் நரகம் என்பதில் இன்னமும் எனக்கு நம்பிக்கை இல்லை !//
  அது முக்கியமில்லை.முத்லில் சொன்ன கருத்தே முக்கியம்.
  நன்றி கந்தசாமி!

  பதிலளிநீக்கு
 26. M.R கூறியது...

  // தமிழ் மணம் 14

  அருமையான கருத்து ஐயா
  பகிர்வுக்கு நன்றி//
  நன்றி ரமேஷ்!

  பதிலளிநீக்கு
 27. பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது இதுதானோ...

  பதிலளிநீக்கு
 28. அருமையான கதை அய்யா... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கதை அருமையாக உள்ளது .
  நன்றி பகிர்வுக்கு .......

  பதிலளிநீக்கு
 30. ஜீ... கூறியது...

  //அருமை பாஸ்!//
  நன்றி ஜீ!

  பதிலளிநீக்கு
 31. ஜீ... கூறியது...

  // தமிழ் மணம் 15//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 32. குடந்தை அன்புமணி கூறியது...

  // பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது இதுதானோ...//
  இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 33. @குடந்தை அன்புமணி
  நன்றி அன்புமணி!

  பதிலளிநீக்கு
 34. பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

  //அருமையான கதை அய்யா... தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்!//
  நன்றி ப.கு ராம்சாமி!

  பதிலளிநீக்கு
 35. அம்பாளடியாள் கூறியது...

  //வாழ்த்துக்கள் ஐயா உங்கள் கதை அருமையாக உள்ளது .
  நன்றி பகிர்வுக்கு .......//
  நன்றி அம்பாளடியாள்!

  பதிலளிநீக்கு
 36. அம்பாளடியாள் கூறியது...

  //தமிழ்மணம் 17//
  நன்றி!
  அதுக்கு மேல போக மாட்டேங்குதே!:)

  பதிலளிநீக்கு
 37. அருமையான கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

  அருமை அன்பரே.

  பதிலளிநீக்கு
 38. தாங்கள் தமிழ்மணம் நட்சத்திர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தகுதிவாய்ந்த இடுகைகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது அன்பரே.

  தொடர்க.

  பதிலளிநீக்கு
 39. சார்! கதை ரொம்ப நல்லா இருக்கு! பெரிய பெரிய பணக்காரங்க கோயிலுக்கும், ஆச்சிரமங்களுக்கும் கொடுத்து வீணாப் போவதைவிட, ஏழைங்களோட படிப்புக்கு உதவுறதுதான் பெட்டர்!

  ரொம்ப நல்ல கதை சார்!

  பதிலளிநீக்கு
 40. அருமையான கதை! உலகத்தில் இருக்கும் பணம் படைத்தவர் அனைவரும் இதை புரிந்து கொண்டு விட்டால் , எத்தனை ஏழைகளின் வாழ்க்கை முறை மாறும் !
  -இந்து

  பதிலளிநீக்கு
 41. அன்ன யாவினும் புண்ணியங் கோடி
  ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி!

  மனதில் தங்கிய நீதிக்கதைக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 42. பிறருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதன் மூலம் ஒரு மனிதன் நிம்மதியடைகின்றான், அவன் பூரணத்துவம் அடைகின்றான் என்பதனை ராமசாமி எனும் கேரக்டருக்கூடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.

  பதிலளிநீக்கு
 43. வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைக்கும் நல்ல கதை சார்.

  பதிலளிநீக்கு
 44. ஆடிப்பாவை கூறியது...

  //அருமையான கருத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க..

  அருமை அன்பரே.//
  நன்றி ஆடிப்பாவை!

  பதிலளிநீக்கு
 45. ஆடிப்பாவை கூறியது...

  //தாங்கள் தமிழ்மணம் நட்சத்திர வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி தகுதிவாய்ந்த இடுகைகளை வெளியிட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது அன்பரே.

  தொடர்க.//
  நன்றி!

  பதிலளிநீக்கு
 46. ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr கூறியது...

  //சார்! கதை ரொம்ப நல்லா இருக்கு! பெரிய பெரிய பணக்காரங்க கோயிலுக்கும், ஆச்சிரமங்களுக்கும் கொடுத்து வீணாப் போவதைவிட, ஏழைங்களோட படிப்புக்கு உதவுறதுதான் பெட்டர்!

  ரொம்ப நல்ல கதை சார்!//
  நன்றி ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr,ArasS@Pvpv!

  பதிலளிநீக்கு
 47. Indu கூறியது...

  //அருமையான கதை! உலகத்தில் இருக்கும் பணம் படைத்தவர் அனைவரும் இதை புரிந்து கொண்டு விட்டால் , எத்தனை ஏழைகளின் வாழ்க்கை முறை மாறும் !//
  உண்மை!நன்றி இந்து!!

  பதிலளிநீக்கு
 48. இராஜராஜேஸ்வரி சொன்னது…

  அன்ன யாவினும் புண்ணியங் கோடி
  ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி!

  //மனதில் தங்கிய நீதிக்கதைக்குப் பாராட்டுக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி!

  பதிலளிநீக்கு
 49. நிரூபன் கூறியது...

  //பிறருக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதன் மூலம் ஒரு மனிதன் நிம்மதியடைகின்றான், அவன் பூரணத்துவம் அடைகின்றான் என்பதனை ராமசாமி எனும் கேரக்டருக்கூடாக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க ஐயா.//
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 50. அம்பலத்தார் கூறியது...

  // வாழ்வின் அர்த்தங்களைப் புரியவைக்கும் நல்ல கதை சார்.//
  நன்றி அம்பலத்தார்!

  பதிலளிநீக்கு
 51. பாத்திரமறிந்து பிச்சை இடு என்பது இது தானோ ? வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 52. Vasu கூறியது...

  //பாத்திரமறிந்து பிச்சை இடு என்பது இது தானோ ? //

  இருக்கலாமோ!
  முனைவர் குணசீலன் சொல்கிறார் புலவருக்குப் ’பாத் திறம் அறிந்து பிச்சை இடு’ என்பதே சரி என்று!
  நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 53. do have a successful for giving money who is studing good and who is not eating food

  பதிலளிநீக்கு
 54. அற்புதமான மனதை கரையவைத்த கதை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு