தொடரும் தோழர்கள்

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

சிரிக்கலாம் வாங்க!

இரண்டு நாட்களாக வலைப்பதிவுகள் பக்கமே வர முடியவில்லை.சொல்லப் போனால் கணினிப் பக்கமே. என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை. நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடக் கூட இயலவில்லை.அதனால் கோபமடைந்திருக்ககூடிய பதிவுலக நண்பர்களே!உங்களைச் சிரிக்கச் செய்ய ஒரு பதிவு.சிரியுங்களேன்!
------------------------

ஒரு இளம் மருத்துவர் ஒரு சிறிய கிராமத்து மருத்துவ மனையின் பொறுப்பேற்கச் சென்றார்.அங்கு அது வரை பணி புரிந்து வந்த வயதான மருத்துவர்,தான் அன்று சில நோயாளிகளைப் பார்க்கப் போகும்போது,புதிய மருத்துவரும் உடன் வந்தால் அறிமுக மாகிவிடும் என்று கூறி அவரையும் உடன் அழைத்துச் சென்றார்.

முதல் வீட்டில் இருந்த பெண், தனக்குக் காலை முதல் வயிற்றை வலிக்கிறது என்று கூற, பழைய மருத்துவர்,அவள் பழம் அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால் இருக்கும், எனவே பழைத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அவரது நோய் அறுதியீட்டைக் கண்டு வியந்த புதியவர் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பெண்ணைப் பரிசோதிக்காமலே எவ்வாறு முடிவு செய்தார் என வினவினார்.

பழையவர் சொன்னார்”அவசியமேயில்லை.நான் அங்கு என் இதயத்துடிப்பு மானியைக் கிழே போட்டேன் அல்லவா.அதை எடுக்கக் குனிந்தபோது கட்டிலுக்கடியில் ஏழெட்டு வாழைப்பழத் தோல்களைக் கண்டேன். எனவே அந்த முடிவுக்கு வந்தேன்.”

புதியவர் சொன்னார்”மிக அருமை.அடுத்த வீட்டில் நான் இந்த முறையைக் கடைப் பிடித்துப் பார்க்கிறேன்”

அடுத்த வீட்டுக்குச் சென்றனர்.அங்கிருந்த சிறிது இளம் பெண் அவளுக்கு மிகச் சோர்வாக இருப்பதாகக் கூறினாள்.

புதியவர் சொன்னார்”நீங்கள் கோவிலுக்காக மிக உழைக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.சரியாகி விடும் “என்று.

வெளியே வந்த பின் பழையவர் சொன்னார்”அந்தப் பெண்ணுக்குக் கோவில் வேலைகளில் மிக ஈடுபாடு உண்டு.நீங்கள் சொன்னது சரியே.ஆனால் எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?”

புதியவர் பதிலுரைத்தார்”உங்களைப் போலவே நானும் இதய ஒலி மானியைக் கீழே போட்டேன் . அதை எடுக்கக் குனியும்போது கட்டிலுக்கடியில் கோவில் பூசாரி இருப்பதைப் பார்த்தேன்!!”

----------------------

கேள்வியும் பதிலும்
-------------------------
1) கேள்வி:ஒரு பச்சை முட்டையை கான்க்ரீட் தரை மீது உடையாமல் போடுவது எப்படி?
பதில்: கான்க்ரீட் தரை எளிதில் உடையாது!

2) கேள்வி:ஒரு சுவரைக் கட்டுவதற்கு எட்டு ஆட்களுக்குப் பத்து மணி நேரம் ஆனதென்றால், நான்கு ஆட்களுக்கு அதைக் கட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
பதில்: கொஞ்ச நேரம் கூட இல்லை.சுவர் ஏற்கனவே கட்டப்பட்டு விட்டது!

3) கேள்வி: உன் ஒரு கையில் மூன்று ஆப்பிள்களும்,நான்கு ஆரஞ்சுகளும்,மறு கையில் நான்கு ஆப்பிள்களும்,மூன்று ஆரஞ்சுகளும் இருந்தால் உன்னிடம் என்ன இருக்கும்?
பதில்; மிகப் பெரிய கைகள்!

4)கேள்வி: ஒரு பாதி ஆப்பிள் மாதிரி இருப்பது எது?
பதில்: மற்றொரு பாதி!

68 கருத்துகள்:

 1. முதல் ஒன்று "ஏ"1.ஹா ஹா ஹா அருமை

  பதிலளிநீக்கு
 2. எல்லாமே சூப்பர் ....அதிலும் டாக்டர் ஜோக் செம மேட்டர்ம்மா !

  பதிலளிநீக்கு
 3. ஐயா நல்ல நகைசுவைகள் ...
  சிரித்தேன் வாக்களித்தேன்

  பதிலளிநீக்கு
 4. ஐயா கோபம் இல்லை வருத்தம் தான்
  என் கடைசி நான்கு பதிவுகள் உங்கள் கண்ணில் பட்டு
  எனக்கு ஹிட்டும் குட்டும் கிடைத்தால் மகிழ்வேன்

  பதிலளிநீக்கு
 5. //நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடக் கூட இயலவில்லை.//

  இதுக்கு ஏதாவது ஆட்டோமெடிக் மெசின் கண்டுபிடிக்கணும் சார்...

  பதிலளிநீக்கு
 6. கோகுல் கூறியது...

  //முதல் ஒன்று "ஏ"1.ஹா ஹா ஹா அருமை//
  நன்றி கோகுல்!

  பதிலளிநீக்கு
 7. koodal bala கூறியது...

  // எல்லாமே சூப்பர் ....அதிலும் டாக்டர் ஜோக் செம மேட்டர்ம்மா !//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 8. ரியாஸ் அஹமது கூறியது...

  //ஐயா நல்ல நகைசுவைகள் ...
  சிரித்தேன் வாக்களித்தேன்//
  நன்றி ரியாஸ்.

  பதிலளிநீக்கு
 9. ரியாஸ் அஹமது கூறியது...

  //ஐயா கோபம் இல்லை வருத்தம் தான்
  என் கடைசி நான்கு பதிவுகள் உங்கள் கண்ணில் பட்டு
  எனக்கு ஹிட்டும் குட்டும் கிடைத்தால் மகிழ்வேன்//
  என்ன செய்ய ரியாஸ்?ரொம்ப பிசி!
  கொஞ்சம் டைம் கொடுங்க.மேக்கப் பண்ணி விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 10. FOOD கூறியது...

  //டாக்டர் ஜோக்-டக்கர்.//
  நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 11. .ஹா ஹா ஹா அருமை....
  nallaayirukku aiyaa joke..
  supper doctor joke...

  பதிலளிநீக்கு
 12. செங்கோவி கூறியது...

  //நண்பர்களின் பதிவுகளைப் படித்துப் பின்னூட்டமிடக் கூட இயலவில்லை.//

  //இதுக்கு ஏதாவது ஆட்டோமெடிக் மெசின் கண்டுபிடிக்கணும் சார்...//
  கண்டுபிடிச்சா நல்லாத்தான் இருக்கும்!
  நன்றி செங்கோவி.

  பதிலளிநீக்கு
 13. vidivelli கூறியது...

  //.ஹா ஹா ஹா அருமை....
  nallaayirukku aiyaa joke..
  supper doctor joke...//
  நன்றி விடிவெள்ளி.

  பதிலளிநீக்கு
 14. நன்கு சிரிக்க வைத்தீர் பித்தரே!


  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 15. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //சூப்பர் தல...//
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 16. புலவர் சா இராமாநுசம் கூறியது...

  // நன்கு சிரிக்க வைத்தீர் பித்தரே!//
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 17. சிரித்து சிரித்து விலாவில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அதைப்போக்க இன்னொரு சிரிக்க வைக்கும் பதிவை எதிபார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. ஐயய்யோ ஐயய்யோ எனக்கு வயிறு வலிக்குது, வயிறு வலிக்குது...டாக்டரை கூப்பிடுங்க....

  பதிலளிநீக்கு
 19. எனக்கும் பூஜான்னா ரொம்ப பிடிக்கும் [[பூஜா]]

  பதிலளிநீக்கு
 20. ஏ யப்பா தல, இதையெல்லாம் எங்கே இருந்து எடுக்குறீங்க ஹி ஹி பொறாமையா இருக்கு...!!!

  பதிலளிநீக்கு
 21. பேரன் பேத்தியை கொஞ்சுங்க அப்புறம் எழுதிக்கலாம்

  பதிலளிநீக்கு
 22. Sorryங்க இதெல்லாம் எங்களால சோக்கு நினைச்சுக்கூட பார்க்கத்தோனல,
  அதுவும் doctor சோக்கு மஹாக்கேவலத்திலும் கேவலம்.

  பதிலளிநீக்கு
 23. Sorryங்க இதெல்லாம் எங்களால சோக்கு நினைச்சுக்கூட பார்க்கத்தோனல,
  அதுவும் doctor சோக்கு மஹாக்கேவலத்திலும் கேவலம்.

  பதிலளிநீக்கு
 24. வே.நடனசபாபதி கூறியது...

  சிரித்து சிரித்து விலாவில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அதைப்போக்க இன்னொரு சிரிக்க வைக்கும் பதிவை எதிபார்க்கிறேன்.
  ஹா,ஹா!நன்றி!
  வரலாம்!

  பதிலளிநீக்கு
 25. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..//
  சிரிப்பு ஆரோக்கியத்துக்கு நல்லது!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 26. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஐயய்யோ ஐயய்யோ எனக்கு வயிறு வலிக்குது, வயிறு வலிக்குது...டாக்டரை கூப்பிடுங்க....//
  அதே டாக்டரையா?!

  பதிலளிநீக்கு
 27. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //எனக்கும் பூஜான்னா ரொம்ப பிடிக்கும் [[பூஜா]]//
  தப்பேயில்லயே!

  பதிலளிநீக்கு
 28. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  // ஏ யப்பா தல, இதையெல்லாம் எங்கே இருந்து எடுக்குறீங்க ஹி ஹி பொறாமையா இருக்கு...!!!//
  நான் எங்கே தேடுகிறேன்.யாராவது மின்னஞ்டலில் அனுப்புகிறார்கள்;நான் CP பண்ணுகிறேன்!
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 29. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  //பேரன் பேத்தியை கொஞ்சுங்க அப்புறம் எழுதிக்கலாம்//
  பேத்தி மட்டுமே!
  அப்படியாவது கொஞ்ச நாள் நான் எழுதுவதை நிறுத்தப் பாக்கிறீங்களா?!
  நன்றி சிபி!

  பதிலளிநீக்கு
 30. Nathimoolam கூறியது...

  //Sorryங்க இதெல்லாம் எங்களால சோக்கு நினைச்சுக்கூட பார்க்கத்தோனல,
  அதுவும் doctor சோக்கு மஹாக்கேவலத்திலும் கேவலம்.//
  ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொரு மாதிரி!--11/1!
  நாகரிகமாக உங்கள் கருத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 31. @சதீஷ்குமார்
  மன்னிக்கவும்.என் பதிலில் சிபி என்று போட்டு விட்டேன்,இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்த பிரபல பதிவர்களாயிற்றே!confusion!

  பதிலளிநீக்கு
 32. ரொம்பவும் அருமை..

  (எனது தொலைபேசி எண்- 98409 92769 அல்லது மெயிலில் thambaramanbu@gmail.com தொடர்பு கொள்ளவும். அவசரம்- அவசியம்)

  பதிலளிநீக்கு
 33. பூசாரி ஜோக் அருமை அமைதியாக படித்துகொண்டிருந்த நான், வாய் விட்டு சிரித்தே விட்டேன்,,,,,, ஹா ஹா ஹா.............

  பதிலளிநீக்கு
 34. சார் நகைச்சுவையில் பின்னுகிறீர்கள். பூசாரி ஜோக் - ரொம்பத்தான் குசும்பு,

  பதிலளிநீக்கு
 35. குடந்தை அன்புமணி கூறியது...

  //ரொம்பவும் அருமை..//
  நன்றி அன்புமணி!

  பதிலளிநீக்கு
 36. ! ஸ்பார்க் கார்த்தி @ கூறியது...

  //பூசாரி ஜோக் அருமை அமைதியாக படித்துகொண்டிருந்த நான், வாய் விட்டு சிரித்தே விட்டேன்,,,,,, ஹா ஹா ஹா.............//
  நன்றி கார்த்தி.

  பதிலளிநீக்கு
 37. பாலா கூறியது...

  //சார் நகைச்சுவையில் பின்னுகிறீர்கள். பூசாரி ஜோக் - ரொம்பத்தான் குசும்பு,//
  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 38. கேள்வியும் பதிலும் ...குசும்பு ஐயா உமக்கு.... அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது

  பதிலளிநீக்கு
 39. மாய உலகம் கூறியது...

  //கேள்வியும் பதிலும் ...குசும்பு ஐயா உமக்கு.... அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது//
  நன்றி மாய உலகம்!

  பதிலளிநீக்கு
 40. ''என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை.''

  பேத்தியை கொஞ்ச நேரம் வேண்டுமே!

  எல்லா விஷயத்திலும் சீனியர் டாக்டரை பின்பற்ற கூடாதென்பார்கள். உண்மைதான்.
  நல்ல ஜோக்

  பதிலளிநீக்கு
 41. நல்ல நகைச்சுவை ஐய்யா ,ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 42. இரண்டு நாட்களாக வலைப்பதிவுகள் பக்கமே வர முடியவில்லை.சொல்லப் போனால் கணினிப் பக்கமே. என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை.//

  பரவாயில்லை ஐயா, நல்லா Enjoy பண்ணுங்க. பேரப் பிள்ளைகளுக்கு கதை சொல்லிப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து மகிழ்ச்சியடையுங்கோ.

  பதிலளிநீக்கு
 43. அதனால் கோபமடைந்திருக்ககூடிய பதிவுலக நண்பர்களே!உங்களைச் சிரிக்கச் செய்ய ஒரு பதிவு.சிரியுங்களேன்//

  இது ரொம்ப ஓவர் ஐயா, இதுக்கெல்லாம் போயி நாம கோபப்படுவோமா;-))))

  பதிலளிநீக்கு
 44. மருத்துவர் பதில்,
  பூசாரி பற்றிய கண்டு பிடிப்பு,
  கேள்வி பதில் எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு
 45. சிரிப்பை அடக்க முடியலை.

  ஹா...ஹா....

  பதிலளிநீக்கு
 46. DRபாலா கூறியது...

  ''என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை.''

  //பேத்தியை கொஞ்ச நேரம் வேண்டுமே!//
  சரிதான்.

  எல்லா விஷயத்திலும் சீனியர் டாக்டரை பின்பற்ற கூடாதென்பார்கள். உண்மைதான்.
  நல்ல ஜோக்
  நன்றி DRபாலா!

  பதிலளிநீக்கு
 47. மைந்தன் சிவா கூறியது...

  //அய்யய்யோ அய்யய்யோ!!//
  அபசகுனம்!!
  நன்றி சிவா!

  பதிலளிநீக்கு
 48. M.R கூறியது...

  //நல்ல நகைச்சுவை ஐய்யா ,ரசித்தேன்//
  நன்றி M.R.

  பதிலளிநீக்கு
 49. நிரூபன் கூறியது...

  இரண்டு நாட்களாக வலைப்பதிவுகள் பக்கமே வர முடியவில்லை.சொல்லப் போனால் கணினிப் பக்கமே. என் மகளும், மருமகனும்,பேத்தியும் துபாயிலிருந்து வந்திருக்கிறார்கள்.எனவே கொஞ்சம் நேரமின்மை.//

  //பரவாயில்லை ஐயா, நல்லா Enjoy பண்ணுங்க. பேரப் பிள்ளைகளுக்கு கதை சொல்லிப் பாட்டுச் சொல்லிக் கொடுத்து மகிழ்ச்சியடையுங்கோ.//

  அப்படியே ஆகட்டும்!

  பதிலளிநீக்கு
 50. நிரூபன் கூறியது...

  அதனால் கோபமடைந்திருக்ககூடிய பதிவுலக நண்பர்களே!உங்களைச் சிரிக்கச் செய்ய ஒரு பதிவு.சிரியுங்களேன்//

  //இது ரொம்ப ஓவர் ஐயா, இதுக்கெல்லாம் போயி நாம கோபப்படுவோமா;-))))//
  எனக்குத் தெரியாதா?இருப்பினும் என் கடமை!

  பதிலளிநீக்கு
 51. நிரூபன் கூறியது...

  //மருத்துவர் பதில்,
  பூசாரி பற்றிய கண்டு பிடிப்பு,
  கேள்வி பதில் எல்லாமே அருமை//
  நன்றி நிரூபன்!

  பதிலளிநீக்கு
 52. நிரூபன் கூறியது...

  //சிரிப்பை அடக்க முடியலை.

  ஹா...ஹா....//

  :-D! மீண்டும் நன்றி!

  பதிலளிநீக்கு
 53. "சிரிக்கலாம் வாங்க!"//

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 54. இராஜராஜேஸ்வரி கூறியது...

  "சிரிக்கலாம் வாங்க!"//

  //பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 55. ஐயா நல்ல நகைசுவைகள் ...
  சிரித்தேன் ......

  பதிலளிநீக்கு
 56. மாலதி கூறியது...

  //ஐயா நல்ல நகைசுவைகள் ...
  சிரித்தேன் ......//
  நன்றி மாலதி.

  பதிலளிநீக்கு
 57. பூசாரி மேட்டர் சூப்பர்.
  ஐயா உங்களுடைய மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே.அவர் சுகத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 58. கே. ஆர்.விஜயன் கூறியது...

  //பூசாரி மேட்டர் சூப்பர்.
  ஐயா உங்களுடைய மகள்,மருமகன்,பேரப்பிள்ளைகள் எல்லோரும் நலம் தானே.அவர் சுகத்தோடும் வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள்.//
  அனைவரும் நலமே!நன்றி விஜயன்!

  பதிலளிநீக்கு
 59. நல்ல சிரித்தேன் உங்கள் சிரிக்கலாம் வாங்க பகிர்வு படித்து விட்டு. :)))

  பதிலளிநீக்கு
 60. சிரித்துவிட்டேன் வாய்விட்டு...நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 61. அன்பின் சென்னை பித்தன் - கதையும் ஜோக்குகளும் அருமை - மிக மிக இரசித்தேன் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு