தொடரும் தோழர்கள்

கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 10, 2016

விடுமுறை,சிரிமுறை!




ஒரு குருவிடம் சில சீடர்கள் பயின்று வந்தனர்.

குரு மிகவும் கண்டிப்பானவர்.

கொடுத்த பணியைச் சரியாகச் செய்யாவிட்டால்,பல தண்டனைகள் கொடுப்பார்.

சீடர்கள் நொந்து போயிருந்தனர்

ஒரு நாள் சொர்க்கம்,நரகம் பற்றிக் குரு பேசிக் கொண்டிருந்தார்.

நரகத்தில் பாவிகளை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பார்கள் என்று சொன்னார்.

முடிவில் சீடர்கள் கேட்டனர்,குரு எங்கு போவார் என்று.

குரு சொன்னார்”நானும் பாவங்கள் செய்திருக்கிறேன்;எனவே நரகத்துக்குத்தான் போவேன்” என்று.

சீடர்கள் சொன்னார்கள் நாங்களும் உங்களுடன் நரகம் வருவோம் என்று

குரு அவர்கள் அன்பில் நெகிழ்ந்து போய் அவர்களிடம் அதைச் சொன்னார்.

அவர்கள் சொன்னார்கள்”அப்படி இல்லை குருவே!நாங்கள் உங்களை எண்ணைச் சட்டியில் முக்கி எடுப்பதைக் காண ஆசைப் படுகிறோம்”

டிஸ்கி:நான் எழுதும் ஜோக்குகள் எல்லாம் பகிர்வுகளே அன்றி படைப்புகள் அல்ல!!?

ஞாயிறு, ஜனவரி 04, 2015

சன்டே,-ஃபன் டே!




ஒரு பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள்,குளியல்/கழிவு அறையில் சென்று  

 உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு, அங்கிருக்கும் கண்ணாடியில் உதடுகளை ஒற்றி அதிகமாக 

இருப்பதைச் சரி செய்து கொள்வது பழக்கமாயிற்று.துப்புரவுத் தொழிலாளிக்கு தினம் 

கண்ணாடியை ஈரத் துணியால் துடைத்துச் சுத்தம் செய்வது பெரிய வேலையாகி 

விட்டது.    அவன் முதல்வரிடம் முறையிட்டான்.அந்தப் பெண்கள் யாரென்று தெரிந்து   

கொண்ட  முதல்வர் அவர்களிடம் எப்படிச் சொன்னாலும் அவர்கள் மாற மாட்டார்கள்

 என்பதை உணர்ந்து,அந்தப் பெண்களையும்,துப்புரவுத் தொழிலாளியையும் அழைத்துக் 

கொண்டு குளியல் அறை சென்றார்.அங்கு பெண்களிடம் இதோ பாருங்கள் கண்ணாடி 

முழுவதும் சாயக் கறைகள்.இதைத் துடைப்பதற்குச் சிரமாக இருக்கிறது. இப்போது இவர் 

 துடைப்பதைப் பாருங்கள்”என்று சொல்லி விட்டுத் தொழிலாளியைப் பார்த்துத் துடைக்கச்

 சொன்னார்.அவனும் ஒரு துடைப்பானை எடுத்து அதை கழிவறை மலத் தொட்டியில் இருந்த 

தண்ணீரில் முக்கிக் கண்ணாடியைத் துடைத்தான்.

அதன் பின் கண்ணாடியில் உதட்டுச் சாயமே ஏற்படுவதில்லை!

வியாழன், செப்டம்பர் 05, 2013

அப்பம் தின்னலாமா?குழி எண்ணலாமா?!



நாம் பல நேரங்களில் கையில் இருக்கும் செய்ய வேண்டிய வேலையை விட்டு விட்டு, வேண்டாதவற்றைச் செய்து நாமும் நொந்து பிறரையும் நோகடித்துக் கொண்டிருக்கிறோம். 

மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு-”அப்பம் தின்னால் மதி,குத்தெண்ணண்டா”

அதாவது தின்பதற்கு அப்பம் கொடுத்தால் அதைத் தின்ன வேண்டும்;தின்றபின் அதன் சுவை பற்றிக் கருத்துச் சொன்னால் அது தொடர்புள்ள செயல்;அதை விடுத்துஅப்பத்தைக் கையில் வாங்கி அதில் எத்தனை ஓட்டைகள் இருக்கின்றன என்று எண்ணிக்கொண்டிருப்பது எவ்வளவு பயனற்ற செயல்.

எனவேதான் அந்தப்பழமொழி சொல்கிறது”அப்பம் தந்தால் அதைத் தின்றால் போதும்;அதில் இருக்கும் ஓட்டைகளை எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்!:

மனோன்மணியம் யாத்த சுந்தரனார் அவர்கள் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்.

நாஞ்சில் நாட்டில் கேரளப் பழக்க வழக்கங்கள் மட்டுமல்ல. தமிழும் மலையாளம் கலந்தே இருக்கும்.

அவர் தனது நூலில் இந்தப் பழமொழியை எடுத்தாள்கிறார்,

மனோன்மணி ஒரு இடத்தில் சொல்கிறாள்”அப்பம் தின்னவோ,அலால் குழி என்னவோ?”. அவளது நிலை பற்றி அவ்வாறு கூறுகிறாள்(நான் பட்டப் படிப்பில் படித்த நூல் மனோன்மணீயம்).

அப்போதெல்லாம் பட்டப்படிப்பில் இரு ஆங்கில நாடகங்கள்-ஷேக்ஸ்பியர்-ஆங்கிலப் பாடத்தில் உண்டு.நான் படித்தவை As you like it மற்றும் Othello.ஒரு இன்பியல் நாடகம்,ஒரு துன்பியல் நாடகம்.பல கல்லூரிகளில் ஷேக்ஸ்பியர் நடத்துவதில் சிறந்த ஆசிரியர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ரத்தத்திலகம் படத்தில் வரும் ஒதெல்லொ நாடகத்தில் சிவாஜிக்குப் பேசியிருந்தார்.அது போலவே ராஜ பார்ட் ரங்கதுரையின் ஹாம்லெட் டும் .ஒதெல்லோவில் வரும் அந்த “it is the cause,it is the cause my soul” என்ற வசனம் மறக்க முடியாதது. 

கல்வித் திட்டத்தில் தமிழ் நாடகம் என்றால் அது மனோன்மணீயம் மட்டுமே!


நமது பள்ளி மற்றும் கல்லூரிக் காலத்தில் நமக்கு போதித்த பல ஆசிரியர்களில், சிலரை நம்மால் மறக்க முடிவதில்லை.என்னைப் பொறுத்தவரை எனக்கு சிவகாசிப் பள்லியில்  ஆங்கிலம் கற்பித்த பசுபதி அவர்களும்,தமிழ் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் அவர்களும் மறக்க முடியாதவர்கள்.என்னுள் மறைந்திருந்த நடிப்பு ,பாட்டு,பேச்சு என்று பல திறமைகளை வெளிக் கொணர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள்.  

உத்தமபாளையம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் சண்முகசுந்தரம் அவர்களும் என் நினைவில் நிற்பவர்.இவர்கள் மட்டுமல்ல;எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே என்றும் வணங்கத்தக்கவர்கள்.  எனக்கு மட்டுமல்ல; அனைவருக்குமே !

இறைவனே குருவின் பெருமையை நமக்கு உணர்த்தி விட்டான்!

கற்பவன் இறைவனே ஆயினும்,கற்பிப்பவன் அவன் மகனே ஆயினும்,குருவிடம் சீடன் வணங்கித்தான் கற்க வேண்டும்!

இந்த ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களைப் போற்றுவோம்!

குருவே சரணம்!

டிஸ்கி:தற்போது விழாக்களில் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்பதும் இடம் பெற்ற நூல் எது என்பதும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்!

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--

ராமசாமி இறந்து போய் விட்டார்!

பெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.

அவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.

எனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.

வந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.

(ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகிறவர்கள் நம்பலாம்!)

அப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்”என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்?அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்! ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்!”

அந்த ஆன்மா கத்தியது”பாவி !நீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா? நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்?உன் பங்களா எப்படிக் கட்டினாய்? உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்?”

வேலாயுதம் சொன்னார்”ஆமாங்க!நானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு!”

ஆன்மா அலறியது”டேய்,பொம்பளைப் பொறுக்கி!நீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ!”

பொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது!

உடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.

அங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்”யார் இவன்? ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ? அவள் மகனோ?”

அவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்”.யாரப்பா நீ?” அவன் சொன்னான்.

“ஐயா!நான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்.”

அனைவரும் திகைத்து நின்றனர்.

அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.

அவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது!

”அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி நாயிர நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் ”—பாரதி!