தொடரும் தோழர்கள்

வெள்ளி, மே 06, 2011

அட்சய திரிதியையன்று ஆயிரத்தில் ஒருவன்!

இன்று அக்ஷய திரிதியை!

”என்ன சார்,காலையில் ரெண்டு பாக்கெட் பால் வாங்கிட்டு வந்தீங்க போல?”

”ஆமாம் சார்,பாயசம் செய்யத்தான்!”

“வீட்டில ஏதும் விசேஷமா? நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”

”வீட்டில இல்லை சார்,நாட்டிலேயே விசேஷம்தான்.இன்னிக்கு அட்சய திரிதியை!”

“ஓகோ!அதுதான் பால் ,பாயசம்,மல்லிப்பூவெல்லாமா!இன்னும் ஏதோ பாக்கி இருக்கு போலிருக்கே?”

”அதுக்குத்தான் மனைவியோடு நகைக் கடைக்குப் போகப் போகிறேன்.அவளுக்கு நகை வாங்க.”

”தங்க நகைதானே?”

”இல்லை.பிளாட்டினம் நகை.அதுதான் ரொம்ப நல்லதுன்னு டி.வி யில் சொன்னாங்க!”

“வெண்மை நல்லது என்றால் வெள்ளி வாங்கலாமே?”

“விலை மதிப்பில்லாத பிளாட்டினம்தான் நல்லதாம்”

“என்ன வாங்கப் போறீங்க?”

“ஒரு சங்கிலியும்,பெண்டண்ட்டும்.அதுதான் ஒரு நடிகையும் வாங்கினாங்களாம்”

சில ஆண்டுகளாக இப்படித்தான் மக்கள் முட்டாளாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!

க்ஷயம் என்ற வட மொழிச் சொல்லுக்கு ,வடமொழி-தமிழ் அகராதியில் பொருள்-அழிவு,நஷ்டம்,வீழ்ச்சி,குறைதல்.

அக்ஷயம் என்பது அதற்கு எதிரான பொருளைத்தரும்.-அதாவது குறையாதது அல்லது வளர்வது.

எனவே இந்த நாளில் செய்யப்படும் எதுவும் வளரும் என்ற நம்பிக்கை!

முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்;அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!

அந்த நம்பிக்கையிலாவது சில பசித்த வயிறுகளுக்கு நல்லது நடந்தது.தானம் செய்தவர்களுக்கும் ஒரு மன நிறைவு இருந்தது.

ஆனால் இன்றோ!

உங்களுக்குப் பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாவிடினும்,கொடுக்கின்ற அந்த மகிழ்ச்சிக்காக,சில பசித்த வயிறுகள் நிறையும்,அந்த முகங்கள் மலரும்,அந்த மனங்கள் வாழ்த்தும் என்ற காரணத்துக்காக இந்த ஒரு நாளிலாவது, நகைக் கடையில் வரிசையில் நின்று செலவழிக்கும் பணத்தில் ஒரு அற்பமான பகுதியில்,தானம் செய்து மகிழ்ச்சியைப் பரப்பலாமே!

இந்த தானத்தை நகைக்கடைக்காரர்களே கொஞ்சம் பெரிய அளவில் செய்யலாமே!
இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே! கடையில் ஒரு அறிவிப்புப் பலகையில் இதை வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் காண வைத்தால் ஒரு விளம்பரமும் ஆகுமே!

பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!

அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!

கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!



டிஸ்கி -- அட்சய திரிதியை பற்றிப் பல பதிவுகள் வந்து விட்டன.எண்ணிப் பார்த்தால் ஒரு ஆயிரம் பதிவுகள் இருக்குமா?!

அந்த ஆயிரத்தில் இதுவும் ஒன்று.

எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!

38 கருத்துகள்:

  1. வடை தந்தால் சொல்வேன் -
    நீங்கள் ஆயிரத்தில் ஒருவரே!

    பதிலளிநீக்கு
  2. //இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே!//
    சமுதாய சிந்தனை. -வரவேண்டும் அனைவர் உள்ளங்களிலும்.

    பதிலளிநீக்கு
  3. >>நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”

    ஹா ஹா அண்ணனுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை போல,,

    பதிலளிநீக்கு
  4. //கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!//
    ம்ம் :-)

    பதிலளிநீக்கு
  5. ஆயிரத்தில் ஒரு வார்த்தை - ஆயிரத்தில் ஒருவன் வாயிலிருந்து - அதுவும் மிக நல்ல வார்த்தை. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை அழகாய் சொன்னதற்கு என்ன தரலாம்? :)

    பதிலளிநீக்கு
  6. FOOD கூறியது...

    //வடை தந்தால் சொல்வேன் -
    நீங்கள் ஆயிரத்தில் ஒருவரே!//

    கலப்படமில்லாத தூய எண்ணையில் சுட்ட வடை உங்களுக்கே!
    நன்றி சங்கரலிங்கம் அவர்களே!

    பதிலளிநீக்கு
  7. FOOD கூறியது...

    //இன்றைய விற்பனையில் இரண்டு விழுக்காட்டுக்குக் குறையாமல் அன்ன தானத்திற்கு எனத் தீர்மானித்து கடைக்கு அருகில் ஒரு மண்டபத்தில் அன்ன தானம் செய்யலாமே!//
    //சமுதாய சிந்தனை.-வர வேண்டும் அனைவர் உள்ளங்களிலும்.//
    வந்தால் நல்லதே!

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் ஆயிரத்தில்,ஒருவரே! தங்களின் நல்ல மனம் வாழ்க.


    ///ஹா ஹா அண்ணனுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை போல,,///

    அண்ணனுக்கு மீசையே வைத்துகொள்ள பிடிக்காது செந்தில். படத்தை பாருங்க , நல்ல "உறிச்ச கோழி " மேரிக்கி மழ மழ வென ஷேவ் அடித்து விட்டுத்தான் அண்ணாதே மல்லிகைபூவும், பால் பாக்கெட்டும் வாங்க கிளம்பிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  9. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    >>நிறைய மல்லிப்பூவெல்லாம் வாங்கிட்டு வந்தீங்க?”

    // ஹா ஹா அண்ணனுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை போல,,//
    தம்பி!நான் நினைத்தது பூஜைக்குப் பூ வாங்கிட்டுப் போறாரு என்று!நீங்கள் வேறென்னவோ நினைக்கிறீர்கள்.வயதே காரணம்!
    நன்றி சிபி!

    பதிலளிநீக்கு
  10. ஜீ... கூறியது...

    //கொஞ்சமாவது நல்லது நடக்கட்டுமே!//
    // ம்ம் :-)//
    மே!
    நன்றி,ஜீ!

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் நாகராஜ் கூறியது...

    //ஆயிரத்தில் ஒரு வார்த்தை - ஆயிரத்தில் ஒருவன் வாயிலிருந்து - அதுவும் மிக நல்ல வார்த்தை. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை அழகாய் சொன்னதற்கு என்ன தரலாம்? :)//
    பிளாட்டினம் மோதிரம்?!
    நன்றி வெங்கட்!

    பதிலளிநீக்கு
  12. கக்கு - மாணிக்கம் கூறியது...

    //நீங்கள் ஆயிரத்தில்,ஒருவரே! தங்களின் நல்ல மனம் வாழ்க. //
    நன்றி கக்கு!
    //அண்ணனுக்கு மீசையே வைத்துகொள்ள பிடிக்காது செந்தில். படத்தை பாருங்க , நல்ல "உறிச்ச கோழி " மேரிக்கி மழ மழ வென ஷேவ் அடித்து விட்டுத்தான் அண்ணாதே மல்லிகைபூவும், பால் பாக்கெட்டும் வாங்க கிளம்பிவிட்டார்.//
    சிபிக்குச் சொன்ன அதே பதில்தான் இதுக்கும்.
    ’ஹாண்டல் பார்’ மீசையும், ’சைட் பர்ன்ஸ்’ ஸும் வச்ச காலமும் இருந்தது.இப்ப இப்படி!
    ( எங்கே,கொஞ்ச நாளாக் காணோம்?)

    பதிலளிநீக்கு
  13. முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்;அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!


    .....வியாபாரத்துக்காக எப்படி எல்லாம் அர்த்தம் திரித்து விட்டு இருக்கிறார்கள். அவ்வ்வ்வ்......

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா6 மே, 2011 அன்று AM 11:31

    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் தொடரும்! இவங்கள திருத்த முடியாது. பட்டாதான் தெரியும்!

    பதிலளிநீக்கு
  15. Chitra சொன்னது…

    முன்பெல்லாம்,இந்நாளில் தானம் செய்து வந்தார்கள்;அதிலும் அன்னதானம் செய்வது சிறப்பான பலனைத் தரும் என நம்பி அவ்வாறே செய்தார்கள்.அதனால் கிடைக்கும் புண்ணியம் பல மடங்காகப் பெருகும் என்பதே நம்பிக்கை!


    // .....வியாபாரத்துக்காக எப்படி எல்லாம் அர்த்தம் திரித்து விட்டு இருக்கிறார்கள். அவ்வ்வ்வ்......//
    அதுதான் வியாபாரம்!
    நன்றி சித்ரா!

    பதிலளிநீக்கு
  16. ! சிவகுமார் ! கூறியது...

    // ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றங்கள் தொடரும்! இவங்கள திருத்த முடியாது. பட்டாதான் தெரியும்!//
    கடைகளில் மட்டுமல்ல; வங்கிகளிலும் இப்போது தங்கக் காசு விற்க ஆரம்பித்து விட்டார்கள்.அங்கும் நல்ல விற்பனையே!
    நன்றி சிவகுமார்!

    பதிலளிநீக்கு
  17. “பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது?” கடைக்காரர்களுக்கு தான்!

    நீங்கள் சொல்வதுபோல் அக்ஷய திரிதியை அன்று அன்னதானம் செய்தாலே, பயன்பெறுவோர் வாழ்த்தும் வாழ்த்துக்கள் நமக்குள் ஏற்படுத்தும் மன நிறைவை, பொன் நகை தராது என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
  18. வே.நடனசபாபதி சொன்னது…

    //“பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது?” கடைக்காரர்களுக்கு தான்!

    //நீங்கள் சொல்வதுபோல் அக்ஷய திரிதியை அன்று அன்ன தானம் செய்தாலே, பயன்பெறுவோர் வாழ்த்தும் வாழ்த்துக்கள் நமக்குள் ஏற்படுத்தும் மன நிறைவை, பொன் நகை தராது என்பது உறுதி.//

    இதை அனைவரும் உணர வேண்டுமே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  19. சரியாக சொன்னீர்கள்..

    நகை வாங்கும் காசில்
    நாலு காசை
    நாட்டு ஏழைகளுக்கு
    கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?

    பதிலளிநீக்கு
  20. சரியாக சொன்னீர்கள்..

    நகை வாங்கும் காசில்
    நாலு காசை
    நாட்டு ஏழைகளுக்கு
    கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?

    பதிலளிநீக்கு
  21. சரியாக சொன்னீர்கள்..

    நகை வாங்கும் காசில்
    நாலு காசை
    நாட்டு ஏழைகளுக்கு
    கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா6 மே, 2011 அன்று PM 4:58

    ///பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!// நூறு வீதம் உண்மை தான் சேர்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா6 மே, 2011 அன்று PM 5:00

    ///பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!
    அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!/// உண்மையாகவே இது நல்ல ஐடியாவாக இருக்கே..

    பதிலளிநீக்கு
  24. //ஹா ஹா அண்ணனுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை போல,,//

    எலேய் கொன்னியா மரியாதையா தல'க்கு கமெண்ட்ஸ் போடு இல்லாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி....

    பதிலளிநீக்கு
  25. //எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!//

    இன்னைக்கு இல்லை தல நீங்க என்னைக்குமே ஆயிரத்தில் ஒருவன்'தான்...

    பதிலளிநீக்கு
  26. // FOOD கூறியது...
    வடை தந்தால் சொல்வேன் -
    நீங்கள் ஆயிரத்தில் ஒருவரே!//

    ஆபீசர், வடையினால் இப்போது மைனஸ் ஓட்டு விழுந்துட்டு இருக்கு சாக்குரத.....

    பதிலளிநீக்கு
  27. எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!//
    நல்ல சிந்தனை .அட்சய திருதியை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. மனோவி சொன்னது…

    //சரியாக சொன்னீர்கள்..

    நகை வாங்கும் காசில்
    நாலு காசை
    நாட்டு ஏழைகளுக்கு
    கொடுப்பதால் என்ன குறைந்து விடும்..?//
    மனம் வர வேண்டுமே!
    நன்றி மனோவி!

    பதிலளிநீக்கு
  29. கந்தசாமி. கூறியது...

    ///பிளாட்டினம் வாங்குவது நல்லது என்றால் ,யாருக்கு நல்லது? இன்று நகை வாங்கினால் மென்மேலும் நகை வந்து சேரும் என்ற ஒரு நம்பிக்கையைச் சில ஆண்டுகளாகக் கிளப்பி விட்டு இலாபம் காண்பவர்களுக்கு நல்லதுதான்!// //நூறு வீதம் உண்மை தான் சேர்//
    அதுதானே நடக்கிறது!
    நன்றி கந்தசாமி அவர்களே!

    பதிலளிநீக்கு
  30. கந்தசாமி. கூறியது...

    ///பொருள் வாங்கிச் செல்பவர்களுக்கு ஒரு கடவுள் படம் போட்ட அட்டையின் பின்புறம், அவர்கள் பில் தொகையின் 2 % தொகையைக்குறிப்பிட்டு,”இது இன்று உங்கள் புண்ணியக் கணக்கு” என்று அச்சிட்டுக் கொடுக்கலாமே!
    அப்படியெல்லாம் நடந்தால்----வியாபாரத்துக்கு வியாபாரம்,விளம்பரத்துக்கு விளம்பரம், புண்ணியத்துக்குப் புண்ணியம்!/// //உண்மையாகவே இது நல்ல ஐடியாவாக இருக்கே..//
    இப்படிப் புதிதாக ஏதாவது செய்து பார்க்கலாம்தானே அவர்கள்!

    பதிலளிநீக்கு
  31. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //ஹா ஹா அண்ணனுக்கு மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலை போல,,//

    // எலேய் கொன்னியா மரியாதையா தல'க்கு கமெண்ட்ஸ் போடு இல்லாட்டி பிச்சிபுடுவேன் பிச்சி....//
    ஆகா!இப்படிப் பாசமுள்ள ஓர் உடன்பிறப்பு இருக்கையில் எனக்கேன் கவலை?
    நன்றி மனோ!

    பதிலளிநீக்கு
  32. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!//

    //இன்னைக்கு இல்லை தல நீங்க என்னைக்குமே ஆயிரத்தில் ஒருவன்'தான்...//
    மீண்டும் அன்புக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  33. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    // FOOD கூறியது...
    வடை தந்தால் சொல்வேன் -
    நீங்கள் ஆயிரத்தில் ஒருவரே!//

    //ஆபீசர், வடையினால் இப்போது மைனஸ் ஓட்டு விழுந்துட்டு இருக்கு சாக்குரத.....//
    அதுக்காக வடையை விட்டு விட முடியுமா!

    பதிலளிநீக்கு
  34. இராஜராஜேஸ்வரி கூறியது...

    எனவே நான் ஆயிரத்தில் ஒருவன்!!//
    // நல்ல சிந்தனை .அட்சய திருதியை வாழ்த்துக்கள்.//
    நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

    பதிலளிநீக்கு
  35. நல்ல பதிவு.

    //அட்சய திரிதியை பற்றிப் பல பதிவுகள் வந்து விட்டன.எண்ணிப் பார்த்தால் ஒரு ஆயிரம் பதிவுகள் இருக்குமா?!//

    நீங்கள் ஆயிரத்தில் ஒருவன். நான் ஆயிரத்துக்கு மேல் ஒருவன்.
    ஏனென்றால் இப்பொழுதான் பதிவு போட்டுள்ளேன்.

    கண்டிப்பாக, அட்சய திருதியையன்று தங்கம் வாங்காதவர்களுக்கு மட்டும்!

    நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  36. விக்கி உலகம் சொன்னது…

    //ரைட்டு!//
    நன்றி!

    பதிலளிநீக்கு
  37. அமைதி அப்பா கூறியது...

    // நல்ல பதிவு.//
    நன்றி!

    பதிலளிநீக்கு