தொடரும் தோழர்கள்

ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலோசனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 12, 2013

உங்கள் ஆயுதம் கூராக இருக்கட்டும்!



ஒரு மரத் தொழிற்சாலை.

மின்சார,ராட்சதப் பொறிகள் வராத காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ராமு நீண்டநாட்களாக அங்கு மரம் வெட்டும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்தான் சோமு அங்கு வேலைக்குச் சேர்ந்தான்.

ஆனால் விரைவில்  அதிக சம்பளம் ,முதலாளியின் பாராட்டு எல்லாம் அவனுக்குக் கிடைத்தது .

ராமு முதலாளியிடம் சென்று ஏன் எனக் கேட்டான்.

அவர் சொன்னார்”சோமு நீ வேலை செய்யும் நேரம்தான் வேலை செய்கிறான்; ஆனால் அதிக மரங்களை வெட்டுகிறான்.எனவே அதற்குச் சரியான சம்பளம் பெறுகிறான்.”

ராமு சோமுவிடம் சென்று இது எவ்வாறு சாத்தியமாகிறது எனக்கேட்டான்.

சோமு சொன்னான்”ஒரு மரத்தை வெட்டியவுடன் நான் என் கோடரியைத் தீட்டிக் கூர் செய்து கொள்வேன்;அதனால் ஒவ்வொரு மரத்தையும் விரைவாக வெட்ட முடிகிறது;அதிக மரங்கள் வெட்டுகிறேன்”

ஆம்!

பணியில் முன்னேற இது ஒரு சிறந்த அறிவுரை.

நேற்று வந்தவன் என்னைத் தாண்டிச் சென்று விட்டானே எனப் பொருமுவதில் என்ன பயன்?

எப்போதும் உங்கள் ஆயுததைக் கூராக வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் பணியில் ஏற்படும் தினசரி மாற்றங்கள்,புதிய தொழில் நுட்பங்கள் எல்லாவற்றையும் அவ்வப்போது உள்வாங்கிக் கொள்ளுங்கள்.செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வராமல்,புதிய பாதைகளை நாடுங்கள்.

உங்கள் தொழிலுக்கான ஆயுதம் கத்தி என்றால் அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்

உங்கள் தொழிலுக்கான ஆயுதம் புத்தி என்றால் அதைத் தீட்டிக் கூராக்கிக் கொண்டே இருங்கள்

பணியில் முன்னேறுங்கள்!



சனி, ஆகஸ்ட் 11, 2012

அழகாயிருப்பது எப்படி?


அழுக்கில்லையென்றாலே அழகு வந்துவிடும்.

நான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு!

கீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---

உதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.

கண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும்  நல்ல  பண்புகளையே பாருங்கள்.

அழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.

நிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.

உதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது ,ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.

ஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.
அது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.

இறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்

இந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா?

ரோமன் ஹாலிடே என்ற படத்தில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி ,ஒரு மிக நல்ல  மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து!.