தொடரும் தோழர்கள்

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

விடுமுறை,சிரிமுறை!

ஓர் ஊரில் ஒரு புதிய மருத்துவர் தொழில் தொடங்கினார்.

தன்னால் குணமாக்க முடியவில்லை எனில் 1000 உரூபாய் தருவதாகவும்,குணமானால் தனது கட்டணம் 500 என்றும் விளம்பரம் செய்தார்.

அவரை ஏமாற்ற நினைத்த ஒரு வழக்கறிஞர் அவரிடம் வந்தார்

எனக்கு சுவையே தெரிவதில்லை என்றார்.

மருத்துவர் அவரின் நோக்கத்தைப் புரிந்து கொண்டார்.

தாதியிடம் மருந்து  எண் 210 எடுத்து வந்து இவர் நாவில் தடவு என்றார்

அவள் வந்து எதையோ தடவினாள்

உடனே வக்கீல் கேட்டார்”என்ன இது மருந்து என்று சொல்லி மண்ணெண்ணெயைத் தடவுகிறீர்கள்? ”


உடன் மருத்துவர்”ஆகா! உங்ககளுக்கு சுவை வந்து விட்டது 500 கொடுங்கள்” என்று வாங்கிக் கொண்டார்.

எரிச்சலுடன் திரும்பிய வக்கீல் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்ய வந்தார்”எனக்கு நினைவாற்றலே இல்லை;எல்லாம் மறந்து போய் விடுகிறது”என்றார்

மருத்துவர் தாதியிடம்”மருந்து  எண்.169 ஐ அவர் நாவில் தடவு என்றார்”


தடவியதும் வக்கீல்  கோபமாகக் கேட்டார்”என்ன 210உம் 169உம் ஒன்றாகவே இருக்கின்றனவே?”

“ஆகா!உங்கள் நினைவாற்றல் திரும்பிவிட்டது பார்த்தீர்களா?எடுங்கள் 500 ”என்றார்!

வழக்கறிஞர் தலை குனிந்தவாறு திரும்பினார்.

(நன்பர் பார்த்தசாரதி சொன்ன ஜோக்!)






8 கருத்துகள்:

  1. விடாக்கண்டனை வென்ற கொடாக் கண்ட டாக்டர்! ஹாஹாஹா! அருமை!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    அற்புதமாக உள்ளது இரசித்தேன் த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஸூப்பர் ஐயா மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன்

    எத்தனுக்கும் எத்தன் எங்கும் உண்டு தானே?

    பதிலளிநீக்கு
  5. இந்த ஜோக் எங்கள் மெயில்லுக்கு வந்திருந்தது படித்திருந்தாலும் மீண்டும் ரசித்தோம் சார்..எங்களது ஏதோ ஒரு பதிவில் கூட சொன்னதாக நினைவு...

    பதிலளிநீக்கு
  6. இந்த நகைச்சுவை துணுக்கை முன்பே படித்திருந்தாலும் திரும்பவும் படிக்கும்போது சிரிக்காமல் இருக்கமுடியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு