தொடரும் தோழர்கள்

சனி, டிசம்பர் 19, 2015

ஒரு கொடியில் இரு மலர்கள்



ஒரு கொடியில் இரு மலர்கள்

 
ஒரு கதாநாயகன் இரு கதாநாயகிகள் அதுவும் கதாநாயகிக்கும், கதாநாயகனை இழப்ப வருக்கும் கிட்டதட்ட சமமான பாத்திரங்கள்.
 
இருவரும் நல்லவர்களே. கொஞ்சம் தியாகம். அதற்கான நல்ல காரணம்.
 
இந்த அளவுக்கு ஆழமுள்ள இரு மலர்கள் பற்றிப் படங்கள் பல.
 
மிகச் சிறந்த சில படங்களை பற்றி ஒரு சின்ன அலசல். ஒரு  சில நல்ல படங்கள்  கூட விடப் பட்டிருக்கலாம். குறிப்பிடுங்கள்.
 
நன்றாக ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்த ஒன்பது இரு மலர்கள்.அமரதீபம்மதுரை வீரன், வஞ்சிக் கோட்டை வாலிபன், கல்யாணப் பரிசு, கொஞ்சும் சலங்கை, கற்பகம், புதிய பறவை. இரு மலர்கள். இரு கோடுகள்.
 
தேவதாஸ் இந்தப்படங்களுக்க அப்பாற்றப்பட்ட ஒப்பற்ற படம். ஆனால் ஒன்று, லலிதா சந்திரமுகி பாத்திரத்தை கச்சிதமாக பண்ணியிருந்தாலும் பார்வதி சாவித்திரியின் நடிப்பை பல ஏணிகள் வைத்தாலும் எட்டியிருக்க முடியாது.
 
மன்னாதி மன்னன், தேனும் பாலும் படங்கள், தேர்வு செய்யப்பட்ட படங்களுக்கு வெகு தூரத்தில் உள்ளவை.
 
வெள்ளிவிழா, சிந்து பைரவி முதல் மரியாதை, சின்னவீடு, சதி லீலாவதி, ரெட்டை வால் குருவி, வீரா இவைகள் எல்லாமே சின்ன வீடுகள் ரகம்.
 
இதைத்தவிர மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், எங்கேயோ கேட்ட குரல், உறவு சொல்ல ஒருவன், சற்று வித்தியாசமானவை. 

பல மலர்கள் ஒரு கொடியில் மலர்ந்தன. சொன்னத்தான் நினைக்கிறேன். ஆனால் இயக்குநர் சிகரம். எல்லா மலர்களையும் மாற்றான் தோட்டத்து மல்லிகைகள் ஆக்கிவிடுவார்.
பாவம் ஜெயசித்ரா, சிநேகிதி ஜெயசுதா காமுகன், கமலுடன் ஒடிப்போவதைத் தடுக்க தன் கற்பையே தியாகம் செய்து விடுவார். கிழட்டுக்கணவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜெய சுதாவை  ஏற்றுக்கொண்டு விடுவார்.

 
இன்னொரு அழகான வாலிபன் கிடைத்தால் ஜெயசுதா ஒடாமல் இருப்பார் என்பது என்ன நிச்சயம். புஷ்பா கதாபாத்திரத்தை இயக்குநர் சிகரம் சிதைத்து விடுவார். திரையில் பூனையை சிதைக்கவிடுவார் எதை? சிவகுமாரின் காதல் ஒவியத்தை கே.பி.யின் காதல் மகா முத்திரை.
 
மக்கள் பாராட்டை பெற்ற படம்சிந்து பைரவி விருதுகள் பல குவிந்தன.
 
இதில் ஒரு கொடியில் ஒரு மலர் சட்டபூர்வமானது. இன்னொரு மலர் முள்ளும் மலரும். இந்த நாடோடிப்பாடகி தாய் தந்தை தேடி அலைந்து தாய் மட்டும் கிடைப்பாள். ஒரு பாடகனை பூஜிப்பாள். தாய் செய்த குற்றத்தை தானும் செய்வாள். ரொம்ப புத்திசாலிப் பெண் செய்யக் கூடிய காரியமா இது? தன் குழந்தைக்கு ஒரு நல்ல ஐடெண்டியை வழங்குவதே இவள் கடமை. ஆனால் சிந்துவின் குழந்தை தாயும் தந்தையும் அறிந்த நாடோடிப் பாடல் பரிசுக் குழுவிற்கு பிடித்திருந்தது. பசி, “ஷோபாசில நேரங்களில் சில மனிதர்கள், திக்கற்ற பார்வதி லட்சுமிஇவர்களும் கூட சோரம் போனவர்கள், ஊர்வசிகளே அப்படித்தானே’.

மக்கள் திலகத்தின் சொந்தம். படங்கள் விசேஷமானவை

 (தொடரும்).

ஆக்கம்:பார்த்தசாரதி 

11 கருத்துகள்:

  1. ஒரு கொடியில் இரு மலர்கள் .... மகிழ்ச்சி.

    திரைப்பட அலசல்கள் தங்கள் பாணியில் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என் நண்பர் பார்த்தசாரதியின் படைப்பு. தொடர்வார்
      நன்றி ஐயா

      நீக்கு
  2. நல்ல விமர்சக அலசல் தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  3. இவ்வாறான இரு கதாநாயகர்கள், கதாநாயகிகளைக் கொண்ட கதைகள் பல முடிச்சுகளுடன் காணப்படும். பின்னர் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும். அவ்வாறான முறையை நான் ரசித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான அலசல்
    தொடர்கிறேன் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. ஆகா எவ்வளவு படங்கள்! எதுவும் நினைவில் இல்லையே! நல்ல தொகுப்பு பித்தரே!

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான அலசல். ஆனால் வேகமாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். கேபி என்றுமே தன் கதாநாயகிகளை சந்தோஷமாக இருக்க விட்டதில்லை! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. பார்த்த சாரதி ,படங்களை பார்த்த சாரதி மட்டுமில்லை ,நினைவில் வைத்திருக்கும் சாரதியும் கூட :)

    பதிலளிநீக்கு
  8. நல்ல அலசல் ...
    தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு