தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

வா மன்மத,வா!

அழகாய் ஆடி அசைந்து வருகிறது ரதம்
பட பட வெனப் பறக்கிறது மீன் கொடி
அழகான வாலிபன் அவன் ரதத்தினில்
கையிலோர் வில்லுமுண்டு,கரும்பாலே
வரிசையாய் வண்டுகளே நாணாக
அம்புறாத்துணியினில் ஐந்து பாணங்கள்
அத்தனையும் மலர்க்கணைகள்
தாமரை,அசோகம்,மா,முல்லை,நீலோத்பலமென
வந்து விட்டான் அவன்,இது அவன் ஆண்டு
இளைஞர்களே,இளைஞிகளே,தயாராயிருங்கள்
பாணங்கள் உங்கள் நெஞ்சைத்துளைக்கும்
ஏனெனில் இது அவன் ஆண்டு
காதலில் நீர் விழுவது திண்ணம்
விழத்தான் முடியும்,வீழ்த்துபவன் அவன்
எழ முடியுமா மீண்டும்,இறைவனுக்கே முடியவில்லை!
மன்மத வருக!மகிழ்ச்சியைத் தருக!!

அனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு வாழ்த்துகள்.

காமன் கணையின் தாக்கம் பற்றிய ஒரு சித்தர் பாடல் உங்களுக்காக---

மாமன் மகளோ மச்சினியோ நானறியேன்,
காமன் கணையெனக்கு, கனலாக வேகுதடி,
மாமன் மகளாகி மச்சினியும், நீயானால்
காமன் கணை மூன்றும், கண் விழிக்க வேகாவோ.

11 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்இனிய சித்திரைப் புத்தாண்டு வாழத்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. மூத்த வலைப் பதிவர், அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கவிதையை ரசித்தேன்.
  த.ம.4

  பதிலளிநீக்கு
 3. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. அன்பு நண்பரே!

  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 5. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா
  தமிழ் மணத்தில் நுழைக்க.... 7

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு