தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 08, 2015

காவீய புதன்என்ன இது ’காவிய ’என எழுதாமல் ’காவீய ’என எழுதியிருக்கிறாரே ,எழுத்துப் பிழையோ என எண்ண வேண்டாம்.

காவீயம்தான்

காவி பற்றியது

எனவே காவீயம்!

இந்துத்துவா பற்றிப் பேசும் கட்சி என்பதால் பா ஜ க காவிக்கட்சி எனப்படுகிறது.

காவி என்பது இந்து சாமியார்களின் அடையாளம் மட்டுமா?

புத்தத் துறவிகளும் காவி உடை அணிவதுண்டு.

நமது தேசியக் கொடியிலேயே காவி நிறம் உள்ளது

இந்நிறம் பற்றி டாக்டர் சர்வேபள்ளி இராதாகிருஷ்ணன் சொன்னார்” Bhagwa or the saffron colour denotes renunciation or disinterestedness. Our leaders must be indifferent to material gains and dedicate themselves to their work.
என்ன ஆயிற்று?  

காவி அணிந்தவரெல்லாம் சாமியாரல்ல.

ஆனால் காவி அணியாத சாமியாரும் உண்டு.

அவர்களில் ஒருவர் ஸ்வாமி பித்தானந்த சரஸ்வதி.

அவரது அருளுரையிலிருந்து ஒரு பகுதி மீண்டும் உங்கள் பார்வைக்கு

//ஒரு கிராமவாசி இருந்தான்.ஒரு முறை வெளியூருக்கு ரயிலில் போக எண்ணினான். அதுவே அவனுக்கு ரயிலில் முதல் முறை.பயணச்சீட்டு வாங்கும்போது அவனிடம் சொன்னார்கள் ’20 கிலோ எடையுள்ள பொருள்தான் எடுத்துச் செல்லலாம்என்று! அவனிடம் இரண்டு பொருள்கள் இருந்தன.ஒன்று பத்து கிலோ எடை;மற்றது 20 கிலோ எடை!

அவன் ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தான்.20 கிலோ எடையுள்ள பெட்டியைக் கீழே வைத்தான்.அதிக பட்சம் 20 கிலோ எடையைத்தான் ரயிலில் கொண்டு செல்லலாம் என்று சொல்லப்பட்டதால்,10 கிலோ எடையுள்ள பையைத் தன் தலை மீது வைத்துக் கொண்டான்.

டிக்கட் பரிசோதகர் வந்தார்,தலையில் பையுடன் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்துத் திகைத்தார்.கேட்டார்ஏன் இப்படிப் பையைத்தலையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறீர்கள்

அவன் சொன்னான்ஐயா! 20 கிலோ எடைதான் எடுத்துச் செல்லலாம் என்று சொன்னார்கள்.பெட்டி மட்டுமே 20 கிலோ.எனவே அதை ரயிலில் வைத்துவிட்டு இந்தப் பையைத் தலையில் சுமக்கிறேன்!

அவருக்குச் சிரிப்பு வந்தது!அவன் தலையில் இருக்கும் எடையையும் ரயில்தானே சுமக்கிறது என்று உணராத அவன் அறியாமையை எண்ணி ,’இப்படியும் ஒரு மனிதனாஎன வியந்தார்!

நம்மில் பலரும் அந்த மனிதன் போலத்தான் இருக்கிறோம்!வேண்டாத கவலைகளை, எண்ணங்களைச் சுமந்து கொண்டு நம்மை நாமே வருத்திக் கொள்கிறோம்!நமது கவலைகளச் சுமப்பதற்கு அவன் ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து,நாம் சுமந்தாலும் அவனும் அவற்றைச் சுமக்கிறான் என்பதை உணராது காலம் தள்ளுகிறோம்.

"
சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,என்னிடத்தில் வாருங்கள்;நான் இளைப்பாறுதல் தருவேன்”—ஏசு பிரான் கூற்று.

எல்லாவற்றையும் என்னில் அர்ப்பணித்து என்னையே சரணடைபவர்களை அவர்கள் தளைகளிலிருந்து விலக்கி அமைதி தருகிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா!

வள்ளுவர் அழகாகச் சொல்கிறார்--

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

வாருங்கள்.நம் வருத்தங்களைக்,கவலைகளை,மனச்சுமைகளை அவன் காலடியில் போட்டு விட்டு நாம் சுமையின்றி இளைப்பாறுவோம்!

நான் கடவுளை நம்பவில்லைஎன்று சொல்பவர்களாக இருப்பினும் கவலையில்லை!

நார்மன் வின்சன்ட் பீல் சொல்கிறார்ஒவ்வொரு நாளும் படுக்கப் போகுமுன் உங்கள் கவலைகளை, வருத்தங்களை, ஒரு கற்பனையான கைக்குட்டையில் கட்டி அவற்றை வெளியே தூக்கி எறிந்து விடுங்கள். மனம் இலேசாகும்.மறு நாளைப் புதிதாகத் துவக்குங்கள்.//

வாருங்கள்!தினம் தினம் புதியவர்களாகப் பிறப்போம்!

8 கருத்துகள்:

 1. superb story
  Superb guidance
  On the eve of
  Our new year
  Subbu thatha

  பதிலளிநீக்கு
 2. ரயில் கதை அருமை ஐயா
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. தினம் தினம் புதிதாய் பிறப்போம்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  உண்மைதான் புதிய சிந்தனை எப்போதும் புதிய வழி பிறக்கும்...
  த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. தினம் தினம் புதியவர்களாகப் பிறப்போம்....

  நல்ல சிந்தனை.

  பதிலளிநீக்கு
 6. அருமையான எடுத்துக்காட்டுகளுடன் காவீய புதனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! அடுத்து குருவே சரணம்!

  பதிலளிநீக்கு