தொடரும் தோழர்கள்

ஞாயிறு, ஜனவரி 04, 2015

சன்டே,-ஃபன் டே!




ஒரு பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில பெண்கள்,குளியல்/கழிவு அறையில் சென்று  

 உதட்டுச் சாயம் பூசிக் கொண்டு, அங்கிருக்கும் கண்ணாடியில் உதடுகளை ஒற்றி அதிகமாக 

இருப்பதைச் சரி செய்து கொள்வது பழக்கமாயிற்று.துப்புரவுத் தொழிலாளிக்கு தினம் 

கண்ணாடியை ஈரத் துணியால் துடைத்துச் சுத்தம் செய்வது பெரிய வேலையாகி 

விட்டது.    அவன் முதல்வரிடம் முறையிட்டான்.அந்தப் பெண்கள் யாரென்று தெரிந்து   

கொண்ட  முதல்வர் அவர்களிடம் எப்படிச் சொன்னாலும் அவர்கள் மாற மாட்டார்கள்

 என்பதை உணர்ந்து,அந்தப் பெண்களையும்,துப்புரவுத் தொழிலாளியையும் அழைத்துக் 

கொண்டு குளியல் அறை சென்றார்.அங்கு பெண்களிடம் இதோ பாருங்கள் கண்ணாடி 

முழுவதும் சாயக் கறைகள்.இதைத் துடைப்பதற்குச் சிரமாக இருக்கிறது. இப்போது இவர் 

 துடைப்பதைப் பாருங்கள்”என்று சொல்லி விட்டுத் தொழிலாளியைப் பார்த்துத் துடைக்கச்

 சொன்னார்.அவனும் ஒரு துடைப்பானை எடுத்து அதை கழிவறை மலத் தொட்டியில் இருந்த 

தண்ணீரில் முக்கிக் கண்ணாடியைத் துடைத்தான்.

அதன் பின் கண்ணாடியில் உதட்டுச் சாயமே ஏற்படுவதில்லை!

17 கருத்துகள்:

  1. நான் கேள்விபட்டது ,அவர்கள் உதட்டுச் சாயம் பூசிக் கொள்வதையே விட்டு விட்டதாக:)
    த ம 3

    பதிலளிநீக்கு
  2. ஐயா, உண்மையில் இப்படித்தான் நடக்கிறதோ!

    பதிலளிநீக்கு
  3. சில சமயங்களில் அதிர்ச்சி வைத்தியம் தேவைப் படுகிறது

    பதிலளிநீக்கு
  4. புத்திசாலியான பிரின்ஸிபால்! ஹாஹாஹா!

    பதிலளிநீக்கு