தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 30, 2015

சாமியார்களின் சாபம்!உனக்கேன் இந்த வேலை?

பதிவு எழுத வேண்டும் என்றால் எவ்வளவோ இருக்கிறது

சினிமா பற்றி எழுதலாம்.

சாப்பாடு பற்றி எழுதலாம்-அந்த மாதிரி எழுதுவதுதான் மிகப் பிரபலம்.

அந்தக்கால மெட்ராஸ் பற்றி எழுதலாம்,ஒரு நண்பர் முன்பே உன்னிடம் கேட்டுக் கொண்டது போல்

கதை, உனக்குத் தெரிந்த அளவில் கவிதை என்று ஏதாவது எழுதலாம்.

படித்த புத்தகங்கள் பற்றி எழுதலாம்-படித்தால்தானே எழுதுவதற்கு!

இலக்கியம் பற்றி எழுதலாம்.

இப்படி எழுத எத்தனையோ செய்தி கொட்டிக்கிடக்க,நீ ஏன் பெரிய சீர்திருத்தவாதி போல் சாமியார்கள் பற்றி எழுதினாய்?

அதனால் என்ன சாதித்தாய்?

நித்தியும் கல்கியும் மாகான்கள்,பகவான்கள்(ஜி அல்ல!)

அவர்களைப் பற்றியெல்லாம் எழுதலாமா?

இப்போது பார் சபித்து விட்டார்கள்.

இத்தனை ஆண்டுகளாகத் தலை வலி,காய்ச்சல் என்று வந்தது உண்டா உனக்கு?

நேற்று என்ன ஆயிற்று?மாலை உடல்வலி தொடக்கம்;பின் தலைவலி;தொடர்ந்து காய்ச்சல்.

இரவு நல்ல காய்ச்சல்!

ஒரு டோலோ 650 போட்டுக் கொண்டு படுத்தாய்.

காலை காய்ச்சல் குறைந்திருந்தாலும் உடல் வலியும் தலைவலியும் குறையவில்ல அல்லவா?

மருத்துவரிடம் சென்று மாத்திரைகள் வாங்கி வர வேண்டியதாகி விட்டது!

எளிமையாக ஒரு மிளகு ரசம் சாதம் காலையில்.சூடாக ருசியாக(நீயே சமைத்துச் சாப்பிட்டால் ருசியாகத்தான் இருக்கும்!)

 இனி இரவு ரொட்டி,பால்தான்.

ஏன் இந்தச் சங்கடம் மகான்கள் சாபம் கொடுத்து விட்டார்கள்

அதுதான் இத் தண்டனை

இனியாவது திருந்து!

டிஸ்கி:இன்று டான்ஸ் சாமியார் பற்றி எழுத எண்ணியிருந்தேன்.
உடல் வலி,உட்கார்ந்து இதற்கு மேலும் எழுத முடியாது.
இனி திங்கள் கிழமைதான்!

இது ஒரு அங்கதப் பதிவே என்பதைத் தெளிவு படுத்தி விடுகிறேன்!

17 கருத்துகள்:

 1. நான் பின்னூட்டம் போடக்கூட ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

  ஐ ஆம் வெரி சாரி.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 2. நல்ல அங்கதம். டான்ஸ் சாமியாரப் படிச்சு நாங்க ஆடிப்பூடுவோம்னுதான் தோணுது. மண்டேக்கு ஆவலா வெய்ட்டிங் தல.

  பதிலளிநீக்கு

 3. //இது ஒரு அங்கதப் பதிவே என்பதைத் தெளிவு படுத்தி விடுகிறேன்!//

  இது ஒருவேளை சங்கேதப் பதிவோ?

  பதிலளிநீக்கு
 4. சங்கரர் சாபம் சொத்து வழக்கு .நித்யா சாபம் படுதோல்வி ...சாமியார் சாபங்கள் --வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று விளையாட போகும்போது சொல்லிவச்சாங்க ,வீரத்தை முளையிலேயே கிள்ளிவச்சாங்க.

  பதிலளிநீக்கு
 5. அட ,சாமியார்களுக்கு படிக்க கூடவா நேரமிருக்கு ?பலிக்கும் படி சாபம் தரும் சாமியார்கள் இருப்பதாக தெரியவில்லை :)
  த ம 2

  பதிலளிநீக்கு
 6. அச்சச்சோ!!! health தை கவனிச்சுகோங்க சார்! சாமியார்களை அப்புறம் கவனிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 7. திங்கட்கிழமை சீக்கிரம் வரட்டும்.
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் உடலை கவனித்துகொள்ளுங்கள்.....ஹிந்தியில் அமிர்கான் நடித்த PK படம் பாருங்கள் மதம்,சாமியார்கள்,தூதுவர்கள் பற்றி புரிய வாய்ப்புகள் அதிகம் நன்றி..........

  பதிலளிநீக்கு
 9. திங்கள் கிழமைக்காக வெயிட்டிங்.....

  உடம்பை பார்த்துக்கோங்க!

  பதிலளிநீக்கு
 10. சாமியார்கள் சபித்து விட்டார்களா? ஹா.. ஹா..

  பதிலளிநீக்கு
 11. டான்ஸ் சாமியார் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 12. உடான்ஸ் சாமியார்கள் அத்தியாயம் முடிந்து டான்ஸ் சாமியாரா? ம்ம்... உடல்நிலையில் கவனம் வையுங்கள். டேக் ரெஸ்ட்.

  பதிலளிநீக்கு
 13. முதலில் உடல் நிலையைக் கவனிக்கவும் மற்றவை பிறகு!

  பதிலளிநீக்கு