தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஜனவரி 23, 2015

தொட்டால் தொடரும்

பதிவர் நண்பர் கேபிள் சங்கரின் “தொட்டால் தொடரும்”இமாலய  வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

வெற்றியைத் தொட்டால் தொடரும் மேலும் வெற்றிகள்.

பின் வரும் கவுஜக்கும் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’
ஆனால் ’ஸ்பை’யின் குறும்படத்துக்குத் தொடர்பிருக்கலாம்!


-----------------------------------------------------------------------------------------------
தொட்டால் தொடரும்!

உண்மைதான்.

தொட்டால் தொடரும் உணர்வு

உனர்வைத் தொடரும் ஆவல்

ஆவலைத் தொடரும் ஊக்கம்

ஊகத்தைத் தொடரும் உற்சாகம்

உற்சாகத்தைத் தொடரும்  வலி

வலியைத் தொடரும் நோய்

நோயைத் தொடரும் முடிவு

தொட்டது போதைப் பொருளாயின்!

தீயைத் தொட்டால் தொடரும் காயம்-வெறி

நாயைத் தொட்டால் தொடரும் ஊசிகள்-போதைப்

பேயைத் தொட்டால் தொடரும் சாவு-விலைமகள்

மாயை தொட்டால் தொடரும்உதவிகள்”.

ஆனால்மல்லிகை மலரைத் தொட்டால்

  
  தொடரும் மணம் விரல் நுனியில்

சொல்லிசைக் கவிதை தொட்டால்

     தொடரும் தேன்தமிழ் நெஞ்சில்

மெல்லிசைப் பாடல் தொட்டால்

     தொடரும் இசைச்சுவை காதில்
  

எனில்

தொடுவது நல்லதா யிருக்கட்டும்.
13 கருத்துகள்:


 1. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 2. தொடுவது நல்லதா யிருக்கட்டும்...நல்லா இருக்கு...

  பதிலளிநீக்கு
 3. திரை உலகில் அந்த சங்கரைப் போல் ,'நம்ம 'சங்கரும் வெற்றி பெறுவார் !
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. ஏன் மைனஸ் வோட்டு? !!

  கேபிள் சங்கருக்கு இப்போதேயும், ஆவிக்கு அட்வான்ஸாகவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வோட்டு இல்லை.ரெண்டாயிடுச்சு!
   ஏதோ காரணத்தால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை!
   நன்றி ஸ்ரீராம்

   நீக்கு

 5. கேபிள் சங்கர் அவர்களின் ‘தொட்டால் தொடரும்’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எத்தனை எதிர்மறை வாக்குகள் வந்தாலும் தொடரட்டும் உங்கள் பணி!

  பதிலளிநீக்கு
 6. நீங்க சொன்ன நேரம்,ரெண்டாயிடுச்சு!
  நன்றி

  பதிலளிநீக்கு
 7. தொடுவது நல்லாதாய் இருக்கட்டும்... சூப்பரய்யா...

  பதிலளிநீக்கு