தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 02, 2013

தீபாவளி வாழ்த்துகள்!

இன்று தீபாவளி;நரகாசுரனைக் கொன்ற நாள்
ஒன்று கேட்பேன் நான் இந்நாளில், சொல்லுங்கள்
நம்முள்ளிருக்கும் நரகாசுரன்களைக் கொன்றோமா?
பேராசை,சினம்,கடும்பற்று,முறையற்ற காமம்,
உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் பொல்லாத
அசுரர்களைக் கொன்றொழிக்க வேண்டாமா?

அதற்கெல்லாம் நாளாகும்,இன்று தீபாவளி,
அதிகாலை குளிப்போம்,புதுத்துணி அணிவோம்
அதிரசம் புசிப்போம், ஆட்டம்பாம் வெடிப்போம்
அதன்பின் என்ன செய்ய?

முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து
தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.
கொறிப்பதற்குப் பலகாரம் குறைவில்லை
லட்டு தின்னும் ஓநாயை சிங்கம் துரத்த ,
விஸ்வரூப தரிசனமும் உண்டின்று பார்ப்பதற்கு
யார் வந்தால் என்ன வாழ்த்துச் சொல்ல?
வெறுமிடைஞ்சல் ,கழுத்தறுப்பு, ரம்பம் என்றே
வெறுத்து ஒதுக்குவோம்,படத்தில் மூழ்குவோம்!
இதற்கு மேல் இன்பம் வேறென்ன வேண்டும்?!

தீபாவளி நல்வாழ்த்துகள்!

(இது ஒரு திருத்தப்பட்ட மீள் பதிவு)


15 கருத்துகள்:

 1. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தீப ஒளித் திருநாளன்று முட்டாள் பெட்டியின் முன் அமர்வதில்லை என்பது இரண்டு ஆண்டுகளாக நான் கடைப்பிடித்து வருகிற விஷயம். நீங்கள் சொல்வதுபோல் நம்முள்ளிருகஅம் பல அசுரர்களைக் கொன்று தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடிடுவோம்! இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் தல!

  பதிலளிநீக்கு
 3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 5. திருத்தப்பட்ட மீள் பதிவானாலும் திருத்தமான பதிவு. தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. தங்கள் ஆதங்கம் மிகத்தெளிவாக உள்ளது. அதே அதே !

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், ஐயா.

  பதிலளிநீக்கு
 7. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. மங்களம் பொங்கும் திருநாளாக
  மனதினில் இந்நாள் நிலைத்திடவே
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் என் இனிய
  தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

  பதிலளிநீக்கு
 9. நலம் தரும் அறிவுரைப் பாடல்!

  பதிலளிநீக்கு
 10. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! முட்டாள் பெட்டி முன் முழு நேரம் அமர்வதில்லை! இன்று துப்பாக்கி மட்டுமே முட்டாள் பெட்டிமுன் வெடித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. முட்டாள் பெட்டியின் முன்..... :) அப்பாடா நான் அந்த முட்டாள் பெட்டிக்கு முன்னர் உட்காருவதில்லை. ஆனால் சிறிய மடிப்பெட்டியின் முன் உட்கார்ந்து விடுகிறேன் !:(

  உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 12. //முட்டாள் பெட்டி முன் முழுநாளும் அமர்ந்து
  தட்டாமல் நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.// இதை நானும் செய்வதில்லை......இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

 13. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
  ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
  இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
  அன்பாம் அமுதை அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கும் காலம் கடந்த இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள்,அய்யா!

  பதிலளிநீக்கு