தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 06, 2013

உணவும் உணவு சார்ந்த இடமும்--பக்க உணவு(side dish)



சைட் டிஷ் என்று பார்த்ததும் எதையோ எண்ணி ஓடி வந்திருந்தால் மன்னிக்கவும்!

இது சப்பாத்திக்கான சைட் டிஷ்தான்.

இப்போதெல்லாம் தினம் மாற்றி மாற்றி இட்லி,தோசை,உப்புமா என்று செய்து சாப்பிட்டு 
அலுத்து விட்டது.

இன்று சப்பாத்தி செய்யலாம் என முடிவு எடுத்தேன்.

தொட்டுக் கொள்ள ,செய்வதற்கு அதிகம் சிரமம் இல்லாத ஒரு பக்க உணவு தேவை.

அதற்கு நான் செய்ததே இந்த கடலை மாவு சப்ஜி.

இதை பாம்பே சட்னி என நான் அழைக்காதகாரணம் ஒரு சின்ன வித்தியாசம்தான்.

மற்றபடி இது பாம்பே சட்னி போலத்தான்.

இதோ நான் செய்த சைட் டிஷ்……..




தேவையான பொருட்கள்:
கடலை மாவு,வெங்காயம்,தக்காளி.எண்ணெய்

செய்முறை:
கடலை மாவைத் தண்ணீரில் நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும்.அதில் கொஞ்சம் சாம்பார் பொடி,தேவையான உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.(வழக்கமாக பாம்பே சட்னியில் இஞ்சி பச்சை மிளகாய்தான் சேர்ப்பார்கள்,நான் சாம்பார் பொடி சேர்த்தேன்)

வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்துக் கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும் .

பின் கடலை மாவுக் கரைசலை  அதில்  ஊற்றிக் கிளறவும்.

ஃபுல்காவுடன் சேர்த்துச் சாப்பிட அருமையான  சைட் டிஷ் தயார்!

7 கருத்துகள்:

  1. இதுவரை இப்படி சாப்பிட்டதில்லை. செய்து பார்த்திட வேண்டியது தான்! :)

    பதிலளிநீக்கு
  2. வீட்டம்மாவை செய்ய சொல்லி, சாப்பிட்டுப் பார்த்திடவேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப சிம்பிலா இருக்குதே! நன்றி

    பதிலளிநீக்கு