தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 26, 2013

ஓய்வறைச் சம்பவம்!கிளப்பில் இருந்தபோது  கழிப்பறை செல்ல நேர்ந்தது.

அடுத்தடுத்து இரண்டு கழிப்பறைகள்

 ஒன்றினுள் சென்று அமர்ந்தேன்.

அடுத்த கழிப்பறையில் இருந்து ஒரு குரல் கேட்டது”எப்படி இருக்கீங்க?சௌக்கியமா?”

யாரடா இது கக்கூசில் வந்து குசலம் விசாரிப்பது?

இருந்தாலும் பதில் அளித்தேன் ”சௌக்கியம்தான்”

“என்ன பண்ணிட்டிருக்கீங்க?”குரல் தொடர்ந்தது.

இது என்ன மடத்தனமான கேள்வி?கழிப்பறையில் என்ன செய்வார்கள்?என்ன பதில் சொல்வது?

பொதுவாகச் சொன்னேன்”சும்மாதான் இருக்கேன்”

இதென்ன தொந்தரவாகப் போய் விட்ட்து?அடுத்த கேள்வி வருமுன் போய்விட வேண்டும்!

மீண்டும் குரல்”இப்ப நான் வரலாமா?”

ஐயோ!என்ன கஷ்டகாலம் இது?எதையாவது சொல்வோம்”இன்னும் முடிக்கலை”

இப்போது குரல் மீண்டும் கேட்டது”நான் உங்கிட்ட அப்புறம் பேசறேன்.இங்க எவனோ முட்டாள் அடுத்த கக்கூசில் இருந்து உன்னிடம் நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்!”

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


30 கருத்துகள்:

 1. இறுதிவரியை படித்ததும்
  அடக்கமுடியவில்லை சிரிப்பை
  ரசித்துச் சிரித்தேன்

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா... விழுந்து விழுந்து சிரித்தேன்..... த.ம.4

  பதிலளிநீக்கு
 3. ரஸித்தேன். இது கைபேசி கலாச்சாரத்தின் மஹிமை. ;)

  பதிலளிநீக்கு
 4. அய்யா....
  திகிலூட்டும் நகைச்சுவையை
  படித்தேன்........
  திகிலோடு ரசித்தேன்
  புதுமையான பதிவு

  பதிலளிநீக்கு
 5. தெரியாதவருக்கு பதில் சொல்வானேன். பின் வாங்கிக் கட்டிக்கொள்வானேன்?
  படித்தேன். இரசித்தேன். சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 6. சிரிச்சு சிரிச்சு சிரிக்கிறதை நிறுத்த முடியல்ல.

  ஹார்ட் அட்டாக் வந்துடுத்து.

  சீக்கிரம் ஆம்புலன்ஸ் அனுப்பவும்.
  ( கக்கூஸ் முழுக்க போய்ட்டு அப்பறம் வந்து அனுப்புங்கள் )

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 7. சிரித்து மகிழ்ந்தேன் பித்தன் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. ஹா... ஹா... ஹா... அந்த கடைசி வரி ட்விஸ்ட்டை நிச்சயம் எதிர்பார்ககலை நான். குபீர் சிரிப்பை வரவழைத்தது நண்பரே1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதை பக்கமா கொண்டு வாங்க. ஒரு ரகசியம்.

   நல்ல வேளை !! நான் தான் அந்த இரண்டாவது நபர் என்பது
   சென்னை பித்தனுக்கு தெரியாமலே போயிடுத்து.

   நீங்க அவுத்து உட்டுடாதீங்க...

   ரகசியத்தை சொன்னேன்.

   சுப்பு தாத்தா.

   நீக்கு