தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 16, 2012

அண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை!

இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்.அப்போது நான் பிறக்கக் கூட இல்லை.இது நான் கேள்விப்பட்ட செய்திதான்.


அப்போது என் பெற்றோர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தனர்.தந்தை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர்...இந்தச் சம்பவம் நடந்தபோது என் பெற்றோரின் முதல் குழந்தையான என் அண்ணா கைக் குழந்தையாக இருந்தார். எதிர் வீட்டில் அக்காலத்தில் பிரபல நடிகையான எம்.ஆர்.சந்தானலக்ஷ்மி குடியிருந்தார்.அவர் அப்போது  எம்.கே.தியாகராஜ பாகவதருடன் “அம்பிகாபதி” படத்தில்  நாயகியாக,அமராவதி பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.பின்னர் சில படங்களில் கதாநாயகியின் தாயாகவும் நடித்தார்.


ஒருநாள் என் தாயார் குழந்தையைக் கையில் எடுத்துக்கொண்டு வீட்டு வாசலுக்கு வந்த போது.எதிர் விட்டில் இருந்த நடிகை சந்தானலக்ஷ்மி பார்த்து விட்டு,என் அன்னையிடம் வந்து அவரைப் பற்றி அவர் குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்து விட்டுக் குழந்தையைக் (அண்ணாவை!) கையில் வாங்கி,வாயில் முத்தமிட்டார்கள்(எப்போதும் குழந்தைகளைக் கன்னத்தில்தான் முத்தமிடுவார்கள்.பாரதி கூடப் பாடுகிறான்”கன்னத்தில் முத்தமிட்டால்" என்றுதான்!)நடிகை என்பதால் வாயில் முத்தமிட்டார்களோ! முத்தமிட்ட பின்”என்ன சாப்பிட்டான்?தித்திக்கிறதே?”என்றும் கேட்டார்கள்!


என் அண்ணாவை .முத்தமிட்டவர் பிரபல நடிகை! ஓகே!


என் அண்ணா இன்னும் சில ஆண்டுகளில் கொள்ளுத்தாத்தாவாகவும் ஆகிவிடுவார். அப்போதும்  இந்த,முத்தக் கதை பரம்பரையாய்த் தொடரும்!சாதாரண விஷயமா இது!!


ஹி,ஹி,ஹி!!

47 கருத்துகள்:

  1. வழக்கம்போல் தலைப்பைப் பார்த்து ஏமாந்துவிட்டேன்.ஏப்ரல் 1 அன்று ஏமாற்றுவார்கள். நீங்கள் ஏப்ரல் மாதம் முழுதும் ஏமாற்றுவீர்கள் போல் இருக்கிறதே!

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா நல்லா வைக்கிறீங்களே தலைப்பு

    ஆம்மாமா......சாதாரண விஷயமா இது!!

    பதிலளிநீக்கு
  3. நான் அறிஞர் அண்ணா-ன்னு நினைச்சேன்

    பதிலளிநீக்கு
  4. அடக் கடவுளே... அண்ணா என்றதும் என்னமோ நினைத்துக் கொண்டு வந்தால்... இப்படி ஏமாத்திட்டீங்களே... உங்களை... ஏமாந்தாலும் ரசிச்சு சிரிக்கவும் செஞ்சதென்னமோ வாஸ்தவம்தான்!

    பதிலளிநீக்கு
  5. சார் உங்க தலைப்பை பார்த்ததுமே நான் உஷார் ஆகிட்டேன். வர வர உங்களுக்கு லொள்ளு அதிகமாகி கொண்டே வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. எப்போதுமே தலைப்பில் கொஞ்சம் உசார்ப்படுத்தி
    இழுப்பதில் தாங்கள் வல்லவர் என்பதை மறுபடியும்
    உறுதிப் படுத்தியிருக்கிறீர்கள்.
    இதுபோன்ற சம்பவங்கள் வாழ்வினை திருப்பிப் பார்க்கும் போது
    இனிமையாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  7. வலைப்பூவுக்குத் தலைப்பே பிரதானம்!

    பதிலளிநீக்கு
  8. சுண்டியிழுக்கும் தலைப்புத்தேர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  9. எதுக்காக இந்த மாதிரி தலைப்பு வைக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  10. அண்ணாவை முத்தமிட்ட நடிகை இப்ப இருக்காங்களா?

    பதிலளிநீக்கு
  11. ஹி.. ஹி.. ஹி...

    தலைப்பில் ஏமாற்றம் இருந்தாலும், பதிவில் ஏமாற்றம் இல்லை!. சிரிக்க வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  12. என் நண்பியுடன் படுத்த 'கலைஞர்' என்றும், 'அம்மா' உறவு கொண்ட பெரும்புள்ளி என்றும், தலப்புகளை வைக்க குறிப்பால் உணர்த்தியுள்ளீர்கள். பதிவர்கள் தயாராகிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  13. என். உலகநாதன் சொன்னது…

    // எதுக்காக இந்த மாதிரி தலைப்பு வைக்கறீங்க?//
    இதற்குப் பதில் இங்கு சொல்ல முடியாது.தனிப்பதிவே எழுதவேண்டும்!நன்றி உலகநாதன்

    பதிலளிநீக்கு
  14. வீடு சுரேஸ்குமார் சொன்னது…

    //அண்ணாவை முத்தமிட்ட நடிகை இப்ப இருக்காங்களா?//

    இல்லை சுரேஸ்குமார்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எப்படி எல்லாம் யோசிக்கிறிங்க போங்க .

    பதிலளிநீக்கு
  16. refer my comments on frozen bank account on account of wrong credit in the account of M.K. vasu

    பதிலளிநீக்கு
  17. தங்கள் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  18. Your contribotion is ok.But dont have any TOPICS like this .Many may have also heart attack also HIHIHI HIIII.

    பதிலளிநீக்கு