தொடரும் தோழர்கள்

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

எதுக்காக இந்த மாதிரி தலைப்பு வைக்கறீங்க?

சபாஷ்!சரியான கேள்வி!!


இது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி.


இதற்குப் பதில் அவசியம் சொல்லத்தான் வேண்டும்.


 பதிவுகள் எழுதத் தொடங்கும் அனைவரும்,தங்களது மன ஓட்டங்களுக்கு  ஒர் எழுத்துருவம்  கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.தங்களிடம் இருக்கும் திறமை களைப்  பலரும் அறிய வேண்டும் என்ற எண்ணத் தில்தான்,கவிதை,கதை அரசியல்,சினிமா என்று பலவும் எழுதத் தொடங்குகிறார்கள்.எதையாவது எழுத வேண்டும் என்ற உள்ள அரிப்புக்கு ஒரு வடிகாலாக அமைகிறது வலைப்பூ.

தொடக்கத்தில் அவர்களுக்கு ஓட்டு பற்றியோ, பின்னூட்டங்கள் பற்றியோ,ஹிட்ஸ் பற்றியோ கவலை இருப்பதில்லை.


நாள் செல்லச் செல்ல,வாடிக்கையாளர் வராத கடையில்,சரக்கு நல்லதாக இருப்பினும்,ஈ ஓட்டும் கடைக்காரனைப் போல் உணரும்போது யோசிக்கத்  தொடங்குகிறார்கள்.நான் எல்லோரும் அப்படி எனச் சொல்லவில்லை.பெரும்பான்மையினரின் மனநிலை அப்படித்தான்.ஒரு அங்கீகாரம் கிடைக்கும்போது மகிழாதவர்கள் இருப்பார்களா?நமக்கு ஏன் வாசகர்கள் அதிகம் இல்லை?ஏன் அதிக ஹிட்ஸ் வருவதில்லை, என்றெல்லாம் யோசனை வருகிறது.


எப்படியாவது ஹிட்ஸை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும் புதிய பதிவர்களுக்கான பதிவே எனது முந்தைய பதிவு!சிலர் கூறியது போல் சுண்டியிழுக்கும் தலைப்பு வைத்தால்,ஆவலுடன் பலர் படிக்க வருவர். ஹிட்ஸ் அதிகமாகும்.ஆனால் எழுதப்படும் செய்திக்கும் தலைப்புக்கும் நிச்சயமாத் தொடர்பு இருக்க வேண்டும். அது முக்கியம்!


இது மட்டுமே வழியல்ல!மேலும் பல வழிகள் உள்ளன. காலப்போக்கில் புதியவர்கள் அவைகளைத் தெரிந்து கொள்வர்.


இந்த நேரத்தில்,எனது பழைய பதிவொன்றை எடுத்துக் காட்டிய நண்பர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றி.அவர் எடுத்துக்காட்டிய பகுதி----


””ஒரு பதிவர் மனம் திறக்கிறார் “ என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய ( தேதி செப்டம்பர் 09, 2011 ) கட்டுரையை இப்போது நினைவு கூர்கிறேன்! அதில் தாங்கள் எழுதிய வரிகள்... // நான் ஆகஸ்டு 2008 இல் இப்பதிவை ஆரம்பித்தேன்.என் எண்ண ஓட்டங்களுக்கு ஒரு வடிகால் வேண்டும் என்ற நோக்கில், ஆரம்பித்தேன். அப்போ தெல்லாம்  ஆத்ம திருப்தி ஒன்றே என் நோக்கமாக இருந்தது.தமிழ் மணத்தில் மட்டும் இணைத் திருந்தேன். பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் பட்டதில்லை.ஓட்டுப் போடும் முறை அப்போது இருந்ததா எனத் தெரியாது. இருந்திருந்தாலும் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். எழுதுவது ஒன்றே என் நோக்கமாக இருந்தது. // //I have proved a point to myself. இனிப் பந்தயத்தில் ஓட வேண்டாம். இதற்குப் பொருள் எழுதுவதை நிறுத்தப் போகிறேன் என்பதல்ல.அப்படி நினைத்து யாரும் மகிழ வேண்டாம்!எழுதுவேன்;தொடர்ந்து எழுதுவேன். உள்ளத்தில் எண்ணம் பீறிட்டுக் கிளம்பும்போது எழுதுவேன்.// ””

என்ன செய்ய இளங்கோ!தொடர்ந்து ஓடாமல் இருக்க முடியவில்லையே இந்த எலிப் பந்தயத்தில்?!

11 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்வது சரிதான்.ஓடிக்கொண்டே இருந்தால்தான் இருக்கும் இடத்தை தக்க வைத்தக்கொள்ளமுடியும் என்பார்கள்.பதிவில் எழுதிக் கொண்டிருந்தால்தான் நம்முடைய இடத்தை இழக்காமலிருக்கமுடியும்.எனவே எழுதுங்கள் வழக்கம்போல்,எல்லோரையும் கவரும்படி.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. வாடிக்கையாளர் வராத கடையில்,சரக்கு நல்லதாக இருப்பினும்,ஈ ஓட்டும் கடைக்காரனைப் போல் உணரும்போது...//

  நல்லா கவனிச்சிருக்கீங்க மத்தவங்க ஈ ஓட்றத...

  பதிலளிநீக்கு
 3. /தொடர்ந்து ஓடாமல் இருக்க முடியவில்லையே இந்த எலிப் பந்தயத்தில்?!
  //

  ஓடவில்லை எனில் ஓரம்கட்டிடுவாங்க

  பதிலளிநீக்கு
 4. ஓகே! ஐய்யா! நீங்க சொன்னா சரியா இருக்கும்...

  பதிலளிநீக்கு
 5. இப்போதும் ஓடலாம். ஓட்டுக்கள் விழுவதை கவனிக்காமல், ரசனைகளைப் பகிர்ந்து கொள்ளும் களமாக ‌மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஓடினால்... நண்பர்களுடன் மகிழ்வாக ஓடிக் கொண்டே இருக்கலாம். ஓடுங்கள்... ஓடுவோம்!

  பதிலளிநீக்கு
 6. நீங்க சொல்வதெல்லாம் சரி

  பதிலளிநீக்கு
 7. தங்களின் ஓட்டம் கண்டு நாங்களும் வேகமாக தங்களுடன் பயணிக்க முயல்கிறோம் . எங்களுக்கு வழிகாட்டியாக , முன்னோடியாக தங்கள் பதிவு .

  பதிலளிநீக்கு
 8. //எதையாவது எழுத வேண்டும் என்ற உள்ள அரிப்புக்கு ஒரு வடிகாலாக அமைகிறது வலைப்பூ.//

  ஆமாம் இது எல்லோருக்கும் ஆரம்ப கட்டத்தில் உள்ள அரிப்பு தான்.

  //தொடக்கத்தில் அவர்களுக்கு ஓட்டு பற்றியோ, பின்னூட்டங்கள் பற்றியோ,ஹிட்ஸ் பற்றியோ கவலை இருப்பதில்லை.//

  சிலருக்கு கடைசிவரை இதைப்பற்றிய கவலை இருப்பதில்லை.

  ஒரு ஆத்ம திருப்திக்காக சிலர் இன்னும் எழுதிவருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

  உதாரணமாக என்னையே எடுத்துக்கொள்ளலாம்.

  என் பதிவினில் எந்த ஓட்டுப்பட்டைகளும் இப்போது கிடையாது.

  எல்லாம் எங்கோ காணாமல் போய் விட்டன. நான் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலையே படுவதில்லை. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

  யாராவது ஒரு 10 பேர்களாவது பின்னூட்டம் தரும் வரை, தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன்.


  //சிலர் கூறியது போல் சுண்டியிழுக்கும் தலைப்பு வைத்தால்,ஆவலுடன் பலர் படிக்க வருவர்.//

  சிலர் என்ன, நானே இதை தங்களின் சென்ற பதிவுக்கு பின்னூட்டமாகக் கூறியிருந்தேன்.
  =============================================
  தங்களின் இந்தப்பதிவும் விளக்கங்களும் அருமை, ஐயா. அனுபவம் பேசுகிறது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 9. ஹா ஹா சரியா சொன்னீங்க.. தொடர்ந்து ஓட வேண்டும் போலத்தான் இருக்கு. நேரம்தான் பத்தல. ஆர்வம் கூட குறைஞ்ச மாதிரி இருக்கு..:)

  பதிலளிநீக்கு
 10. சரியாகத்தான் சொன்னீர்கள் ... ஆடிய கால்களும் பாடிய வாயும் ஓய்வதில்லை vasu

  பதிலளிநீக்கு