தொடரும் தோழர்கள்

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

நாளை என்பது நம் கையில் இல்லை!

யார் மீதேனும் வருத்தமா
யாரோடேனும் சண்டையா
சரி செய்ய யாரும் இல்லையா?
நீங்களே முயலுங்கள் 
உடன் சரி செய்ய!
இன்று அவரும் விரும்பலாம்
உங்களுடன் நட்பாயிருக்க
இன்றில்லையென்றால்
நாளை காலம் கடந்து போய் விடலாம்!

யாரையேனும் நேசிக்கிறீர்களா,
அவருக்கு அது தெரியாமலே?
உடனே சொல்லி விடுங்கள்
இன்று அவரும் உங்களை நேசிக்கலாம்
நாளை காலம் கடந்து விடக்கூடும்!

உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
நண்பர் மீது இன்னமும் நட்பா?
உடனே சொல்லி விடுங்கள்!
அவர் இன்னும் உங்கள் மீது
நட்புடன் இருக்கலாம்.
நாளை காலம் கை நழுவிப் போனதாகலாம்!

 எவருடையதேனும் நட்புஅணைப்புக்கு ஏக்கமா?
இன்றே வேண்டும் எனக் கேட்டு விடுங்கள்.
கட்டிப்பிடி வைத்தியம்
அவருக்கும் தேவைப்படலாம்.
இன்று நீங்கள் கேட்கத் தவறினால்
நாளை காலம் கடந்து போயிருக்கலாம்!

உண்மையான நண்பர்களைப்
பாராட்டுகிறீர்களா?
இன்றே சொல்லி விடுங்கள்.
அவர்களும் உங்கள் நட்பைப்
பாராட்டக்கூடும்
இன்று அவர்கள் எங்கோ
விலகிச் சென்று விட்டால்
நாளை கால தாமதமாகி விடலாம்.

இறுதியாக
உங்கள் பெற்றோரை அதிகமாக நேசிக்கிறீர்களா?
இன்று வரை அதை  வெளிக்காட்டியதில்லையா?
உடன் செயல் படுங்கள்.
இன்று அவர்கள் இருக்கிறார்கள் உங்களுடன்
உங்கள் அன்பை வெளிக்காட்ட
நாளை ?

41 கருத்துகள்:

 1. இதை நிறைய முறை பட்டு அனுபவித்து மனம் நொந்து பாடம் கற்றவன் நான் பித்தரே...

  பதிலளிநீக்கு
 2. //உங்களை மறந்து விட்டாரென்று எண்ணும்
  நண்பர் மீது இன்னமும் நட்பா?
  உடனே சொல்லி விடுங்கள்!
  அவர் இன்னும் உங்கள் மீது
  நட்புடன் இருக்கலாம்.//

  கட்டிப்பிடி வைத்தியம் உள்பட அனைத்தும் அருமை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கருத்துகள்... பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றே செய் ... அதுவும்
  இன்றே செய்

  தேவையான அறிவுரை ஐயா...

  பதிலளிநீக்கு
 5. சிறந்த அனுபவ குறிப்புகள் ஐயா நன்றி

  பதிலளிநீக்கு
 6. நாளை என்பதே நாளைக் கடத்தல் தானே!
  நல்ல கருத்து பித்தரே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 7. நாளை என்பதே ஒரு சாக்குபோக்கு தானே ஐயா? அதனால் எத்தனை நல்ல விஷயங்கள் சுயநலத்திற்காக தள்ளிப் போடப்படுகிறது????

  பதிலளிநீக்கு
 8. வறட்டு பிடிவாதம் உங்களை ஒரு நாள் சிந்திக்க வைக்கும்
  அதற்குள் நீங்கள் சிந்தித்துக்கொள்ளுங்கள்
  இதான சார் எல்லாருக்குமே பிரச்சின.................................

  பதிலளிநீக்கு
 9. நினைப்பதை இன்றே, இப்போதே செய்ய வலியுறுத்தும் அழகான பதிவு.

  பதிலளிநீக்கு
 10. நாளை என்பதே இல்லை என்பதுதானே ஐயா!. நல்ல கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. நன்றே செய் அதையும் இன்றே செய் - என்பதை அழகாய் தெளிவாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 12. அனைவரும் மனதில் கொள்ள வேண்டிய அருமையான
  அனுபவப் பதிவு.பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. எதையும் தள்ளிப் போடாமல் இன்றே செய்வது நன்று என்பதை அழகுற உரைத்திருக்கிறீர்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 14. எதையும் காலம் தாழ்த்த வேண்டாம்

  கவி சொன்ன விதம் அழகு - நன்றி

  பதிலளிநீக்கு
 15. உண்மைதான் ஐயா நன்றே செய்க இன்றே செய்யுங்கள் .

  பதிலளிநீக்கு
 16. நல்ல பதிவு என்பதை இன்றே வாழ்த்துகிறேன். நாளை கால தாமதமாகி விடலாம்!!

  பதிலளிநீக்கு
 17. அனைத்துமே நல்ல கருத்துகள். பகிர்வுக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 18. அனுபவம்தானே சிறந்த ஆசிரியர் ரெவெரி.நன்றி.

  பதிலளிநீக்கு
 19. நாளை என்பது வராமலே போகலாம். இல்லையா? அற்புதமான வரிகள்...ரசித்தேன்...ருசித்தேன்...

  பதிலளிநீக்கு