தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 27, 2011

இம்சிக்காத கனவுகள்!

வேடந்தாங்கல் கருனின் “இராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்” என்ற பதிவைப் படித்ததும் நான் கண்ட கனவுகள் பற்றிய எனது பதிவை இப்போது மீள் பதிவாக வெளியிட ஒரு காரணம் கிடைத்தது என மகிழ்ந்தேன்! இதோ அப்பதிவு!--------

முன்பெல்லாம் எனக்குச் சில கனவுகள் அடிக்கடி வரும்.

ஒரு கனவில் நான் மேலே பறந்து கொண்டிருப்பேன்.தரையிலிருந்து எளிதாக மேலே கிளம்பிப் பறக்க ஆரம்பிப்பேன்.பறந்து கொண்டே பறவைப் பார்வையாய் கீழே இருக்கும் கட்டிடங்களை, மனிதர்களை யெல்லாம் பார்த்துப் பெருமிதம் அடைவேன்,என் திறமை குறித்து.மனிதர்கள் என்னக் காட்டி ஏதோ பேசிக்கொள்வர்.பறப்பது மிக எளிதான செயலாக இருக்கும்.இரண்டு கைகளயும் பக்கவாட்டில் நீட்டித்,துடுப்பு தள்ளுவது போல் முன்னிருந்து பின்னாகத் தள்ளி,காற்றைக் கிழித்துக் கொண்டு முன்னேறுவேன்.மேலே செல்ல மேலிருந்து கீழாகவும்,கீழே இறங்கக் கீழிருந்து மேலாகவும் கைகளை அசைத்துப் பறப்பேன்.விழிப்பு வந்த பின்னும் அந்தப் பறக்கும் உணர்ச்சி நீடிக்கும்.பறந்து பார்க்கலாமா என்று யோசிக்க வைக்கும்.அந்தக்கனவு வருவது நின்று பல ஆண்டுகளாகி விட்டது.முன்பு ஏன் வந்தது?பின்னர் ஏன் வருவதில்லை?அந்த வயதிற்கே உரிய,ஆசைகள் காரணமா?வாழ்க்கையில் மேலே மேலே செல்ல வேண்டும் என்ற ஆவல் காரணமா?மற்றவர் செய்யாத எதையாவது செய்ய வேண்டும் என்ற இச்சை காரணமா?வயதான பின்,வாழ்க்கையின் எதார்த்தங்கள் புரிந்த பின், பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தரையில் காலூன்றி நின்ற பின் அக்கனவு நின்று போனதா?எனக்குத் தெரியவில்லை.இன்னொரு கனவு-சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது வழியில் கிழே கிடக்கும் ரூபாய் நாணயத்தை குனிந்து எடுப்பேன்.அப்போது அருகில் இன்னொரு நாணயம் இருக்கும் அதை எடுக்கும் போது இன்னொன்று,இப்படி எடுக்க எடுக்க நாணயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.கனவு கலைந்து விடும்.இக்கனவும் பல ஆண்டுகளுக்கு முன் நின்று போனது.இதன் பொருள் என்ன?அந்த நாட்களில் எனக்குப் பணத்தாசை இருந்தது என்பதா?அப்படியானால்,தங்கக் காசுகள் நிறைந்த ஒரு புதையல் கிடைப்பது போல அல்லவா கனவு வந்திருக்க வேண்டும்?சில்லறைத் தனமான கனவு ஏன்?இப்படியிருக்குமோ?பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும்,அதைச் சிறிது சிறிதாகத்தான் சேர்க்க முடியும் என்ற அறிவும்தான் இக்கனவோ?இப்போது இக் கனவு வராமைக்குக் காரணம்-பணத்துக்கு நான் கொடுக்கும் மிகக் குறைந்த முக்கியத்துவம்?இந்த வயதில் எனக்கு என்ன வேண்டும்? உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இடம் இவை போதாவா?

ஆனால் வரவேண்டிய வயதில் வரவேண்டிய ஒரு கனவு எனக்கு வந்ததே இல்லை.என் வாலிபப் பருவத்தைப் பற்றித்தான் சொல்கிறேன்.என் நண்பர்கள் எல்லாம் தங்கள் கனவில்'அவள் வந்தாள், இவள் வந்தாள்'என்றெல்லாம் சொல்வார்கள் .ஆனால் என் கனவில் ஒரு நாள் கூட ஒரு மாலாவோ, நீலாவோ வந்ததில்லை.நானும் படுக்கப் போகும் முன், எனக்குத் தெரிந்த அழகான பெண்களைப் பற்றி நினைத்துக் கொண்டே படுப்பேன். ஆனாலும் கனவு வந்ததில்லை.ஒரு நாள் ஒரு பெண்ணைப் பற்றி நினைத்துக் கொண்டு, இன்று அவளுடன் கனவில்பேச வேண்டும் என்று அழுத்தமாக நினைத்துக் கொண்டு படுத்தேன்.தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)

இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?ஆழ்மனத்தில் இருந்த இந்த உணர்வுகள் கனவுகளையும் தடுத்திருக்குமோ?எது எப்படியோ?இந்தத் தயக்கமே எனக்கு, அலுவகத்தில் சக பெண் ஊழியர்களிடம், 'பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்'என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.காலம் செல்லச் செல்ல அந்தப் பயமும்,தயக்கமும் நீங்கி விட்டன.

இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற, கனவுகள்தான். அவை விழிக்கும்போது நினைவிருப்பதில்லை.

இன்றைய இளைஞர்களைக் கனவு காணச் சொல்கிறார் டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள்-தங்கள் எதிர்காலம் பற்றி,அத்துடன் இணைந்த நாட்டின் எதிர் காலம் பற்றி,ஒரு வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.

கனவுகள் பலிக்கட்டும்.

(மீள் பதிவு)

56 கருத்துகள்:

 1. .///தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)/// பாஸ் குரங்கில் இருந்து தானே மனிதன் வந்தான் ......)))))

  பதிலளிநீக்கு
 2. ///இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?/// நான் அறிந்தவரை இயற்கையிலே பெண்கள் மீது கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கு தான் அதிகளவு கனவு வருமாம்..)

  பதிலளிநீக்கு
 3. >>
  இதற்கு என்ன காரணம்?இயற்கையிலேயே எனக்குப் பெண்களுடன் பேசுவதில் இருந்த வெட்கம்,பயம்,தயக்கம் இவை காரணமோ?

  உங்களைத்தான் நான் வழிகாட்டியா வெச்சிருக்கேன்.. நீங்களே இப்படி சொன்னா எப்படி? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 4. //கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)///

  ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை...

  பதிலளிநீக்கு
 5. அருமையான பதிவு தல, எல்லாருக்கும் எல்லா வயதிலும் வரும் கனவுகள் அருமை....

  பதிலளிநீக்கு
 6. மேலே பறக்கும் போது ஏதாவது டிராப்பிக் ஜாம் இல்லையா...

  பதிலளிநீக்கு
 7. கனவில் இத்தனை விஷயங்களா? கலக்கீட்டீங்க போங்க!

  பதிலளிநீக்கு
 8. The First Step to realise your dream is: to Wake Up!

  நீங்க எழுந்துக்கறது மட்டுமில்லாம, எங்கேயாவது தேடிப் புடிச்சி ஒரு ஐடியா கெடச்சவுடனே, ஒழுங்கா பதிவு வேற எழுதிடறீங்களே, அப்புறம் என்ன... உங்களுக்குக் கனவில கூடத் தொந்தரவு வராது! :)))

  பதிலளிநீக்கு
 9. The First Step to realise your dream is: to Wake Up!

  நீங்க எழுந்துக்கறது மட்டுமில்லாம, எங்கேயாவது தேடிப் புடிச்சி ஒரு ஐடியா கெடச்சவுடனே, ஒழுங்கா பதிவு வேற எழுதிடறீங்களே, அப்புறம் என்ன... உங்களுக்குக் கனவில கூடத் தொந்தரவு வராது! :)))

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டேன்... ஆனா என் கனவிலே இன்னைக்கு என்ன வரப் போவுதோ, தெரியலையே! :)))

  பதிலளிநீக்கு
 11. பரவாயில்லை கனவுகளை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே? எனக்கு அடிக்கடி சைக்கோ கொலைகாரன் துரத்துவது போலத்தான் கனவு வரும். அந்த மாதிரி படங்கள் பார்ப்பதாலா என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 12. கந்தசாமி. கூறியது...

  பாஸ் குரங்கில் இருந்து தானே மனிதன் வந்தான் ......)))))
  ஆமாம்,ஆமாம்!:-D
  நன்றி கந்தசாமி அவர்களே!

  பதிலளிநீக்கு
 13. கந்தசாமி. கூறியது...

  // நான் அறிந்தவரை இயற்கையிலே பெண்கள் மீது கூச்ச சுபாவம் உள்ளவர்களுக்கு தான் அதிகளவு கனவு வருமாம்..)//
  ஆனால் அது பெண்கள் பற்றித்தான் இருக்கும்;இங்கு அப்படி இல்லையே!

  பதிலளிநீக்கு
 14. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  // முதல் கனவு//
  கலையாது!

  பதிலளிநீக்கு
 15. சி.பி.செந்தில்குமார் கூறியது...


  //உங்களைத்தான் நான் வழிகாட்டியா வெச்சிருக்கேன்.. நீங்களே இப்படி சொன்னா எப்படி? ஹி ஹி//
  அடப் பாவமே! தப்புப் பண்ணிட்டீங்களே!
  நன்றி சிபி

  பதிலளிநீக்கு
 16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)///

  //ஹா ஹா ஹா ஹா சிரிச்சி முடியலை...//

  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //அருமையான பதிவு தல, எல்லாருக்கும் எல்லா வயதிலும் வரும் கனவுகள் அருமை....//
  வயதுக்குச் சரியான கனவு வந்தால் நல்லதுதான்!

  பதிலளிநீக்கு
 18. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  // தொடர் பதிவா...//
  தூண்டல் பதிவு!(ஒரு பதிவு மற்றொன்றைத் தூண்டுவது!)
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 19. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //மேலே பறக்கும் போது ஏதாவது டிராப்பிக் ஜாம் இல்லையா...//
  சுகமான பயணம்தான்!

  பதிலளிநீக்கு
 20. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //கனவுகள் மெய்ப்படும்..//
  கனவுகள்+கற்பனைகள்=பதிவுகள்!

  பதிலளிநீக்கு
 21. ரஹீம் கஸாலி கூறியது...

  // கனவு காணும் வாழ்க்கை யாவும்..//
  வாழ்க்கையில் கனவு காணலாம்;ஆனால் கனவே வாழ்க்கையாகலாமா? :-}
  நன்றி கஸாலி!

  பதிலளிநீக்கு
 22. மனம் திறந்து... (மதி) கூறியது...

  //The First Step to realise your dream is: to Wake Up!

  நீங்க எழுந்துக்கறது மட்டுமில்லாம, எங்கேயாவது தேடிப் புடிச்சி ஒரு ஐடியா கெடச்சவுடனே, ஒழுங்கா பதிவு வேற எழுதிட றீங்களே,அப்புறம் என்ன... உங்களுக்குக் கனவில கூடத் தொந்தரவு வராது! :)))//
  நன்றி மதி!

  பதிலளிநீக்கு
 23. மனம் திறந்து... (மதி) கூறியது...

  //உங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டேன்... ஆனா என் கனவிலே இன்னைக்கு என்ன வரப் போவுதோ, தெரியலையே! :)))//
  கனவில் யாரெல்லாமோ கனவு காண்பதாக வந்தாலும் வரும்!
  sweet dreams,மதி!

  பதிலளிநீக்கு
 24. FOOD கூறியது...

  //கனவில் இத்தனை விஷயங்களா? கலக்கீட்டீங்க போங்க!//
  கனவு கான்பதில் கஞ்சத்தனம் ஏன்!
  நன்றி சங்கரலிங்கம் அவர்களே!

  பதிலளிநீக்கு
 25. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //நம்ம கடையிலும் இதே கனவுதான்...//
  உங்க கடைச் சரக்கைப் பார்த்துதானே,என் பழைய சரக்கைத் தூசி தட்டிக் கடையில் வைத்தேன்!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 26. பாலா கூறியது...

  //பரவாயில்லை கனவுகளை ஞாபகம் வைத்திருக்கிறீர்களே? எனக்கு அடிக்கடி சைக்கோ கொலைகாரன் துரத்துவது போலத்தான் கனவு வரும். அந்த மாதிரி படங்கள் பார்ப்பதாலா என்று தெரியவில்லை.//
  இருக்கலாம்.ஆழ்மனதில் இருப்பது கனவில் வரும் என்கிறார்கள். எனக் கென்னவோ அது சரியெனத் தோன்றவில்லை!
  நன்றி பாலா!

  பதிலளிநீக்கு
 27. கனவுகள் வரலைனாலும் பிரச்சினை தான் போல இருக்கே அய்யா...

  பதிலளிநீக்கு
 28. /கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)/

  Sema Timing Comedy

  பதிலளிநீக்கு
 29. எனக்கு பேயை நான் துரத்துவது போல கனவுகள் அடிக்கடி வரும். கடைசில கிளிமக்ஸ் வரும் பொது முழிச்சுக்குவேன். நான் பேய்ய சாகடிக்காம கனவு வருவது நிக்காது போல இருக்கு

  பதிலளிநீக்கு
 30. தங்கள் மீள் பதிவு நன்றாக இருக்கிறது. கடைசியில் அதென்ன ‘கனவுகள் பலிக்கட்டும்’? பலிக்க வேண்டுவது எந்தக் கனவுகள்? நீங்கள் கண்டிருப்பவை நிச்சயமாக ’அப்துல் கலாம்’ கனவுகளல்ல! ஒரு வேளை அந்த விட்டுப் போன ‘மாலா, நீலா’ கனவுகளோ? ஆசைதான்!

  பதிலளிநீக்கு
 31. கனவுகள் பலிக்கட்டும்…

  எனக்கும் நாணயக் கனவுகள் – எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டு இருக்கும்படி வரும் முன்பெல்லாம். இப்போது உங்கள் பதிவினைப் படித்தவுடன் தான் அக்கனவு இப்போது வருவதில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

  மீள் பதிவு என்றாலும் நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 32. //இப்போதெல்லாம் பெரும்பாலும் கனவுகளே வருவதில்லை.வந்தாலும் அர்த்தமற்ற, கனவுகள்தான்//

  ஆம். எனக்கு கூட தமிழ்நாட்டை நல்ல முதல்வர் ஆள்வது போல் கெட்ட கெட்ட கனவாக வருகிறது.

  பதிலளிநீக்கு
 33. செங்கோவி சொன்னது…

  //நாணயக் கனவு சூப்பர்!//
  நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 34. டக்கால்டி கூறியது...

  //கனவுகள் வரலைனாலும் பிரச்சினை தான் போல இருக்கே அய்யா...//
  கனவில்லாமல் தூக்கமா! காதலில்லாமல் வாழ்க்கையா!!

  பதிலளிநீக்கு
 35. டக்கால்டி கூறியது...

  /கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!(பெண் குரங்காக இருக்குமோ!)/

  நன்றி டக்கால்டி!

  பதிலளிநீக்கு
 36. டக்கால்டி கூறியது...

  //எனக்கு பேயை நான் துரத்துவது போல கனவுகள் அடிக்கடி வரும். கடைசில கிளிமக்ஸ் வரும் பொது முழிச்சுக்குவேன். நான் பேய்ய சாகடிக்காம கனவு வருவது நிக்காது போல இருக்கு//
  கொல்வதற்குப் பேய்களுக்கா பஞ்சம்?
  கொல்லுங்கள்,கனவை வெல்லுங்கள்!

  பதிலளிநீக்கு
 37. R.S.KRISHNAMURTHY கூறியது...

  //தங்கள் மீள் பதிவு நன்றாக இருக்கிறது. கடைசியில் அதென்ன ‘கனவுகள் பலிக்கட்டும்’? பலிக்க வேண்டுவது எந்தக் கனவுகள்? நீங்கள் கண்டிருப்பவை நிச்சயமாக ’அப்துல் கலாம்’ கனவுகளல்ல! ஒரு வேளை அந்த விட்டுப் போன ‘மாலா, நீலா’ கனவுகளோ? ஆசைதான்!//
  ஆசையின்றி வாழ்க்கை உண்டோ?ஆனால் நான் சொன்னது கலாம் அவர்கள் காணச்சொன்ன கனவுகளைத்தான்!
  நன்றி RSK.நலந்தானே!

  பதிலளிநீக்கு
 38. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //கனவுகள் பலிக்கட்டும்…

  எனக்கும் நாணயக் கனவுகள் – எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டு இருக்கும்படி வரும் முன்பெல்லாம். இப்போது உங்கள் பதிவினைப் படித்தவுடன் தான் அக்கனவு இப்போது வருவதில்லை என்பது நினைவுக்கு வருகிறது.

  மீள் பதிவு என்றாலும் நல்ல பகிர்வு.//
  சில கனவுகள் குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே வருகின்றன!
  (தேர்வுக்கு எதுவும் படிக்காமல் போனது போல் கனவு கண்டதுண்டா?)
  நன்றி வெங்கட்!

  பதிலளிநீக்கு
 39. ! சிவகுமார் ! கூறியது...


  //ஆம். எனக்கு கூட தமிழ்நாட்டை நல்ல முதல்வர் ஆள்வது போல் கெட்ட கெட்ட கனவாக வருகிறது.//
  தங்கள் கனவு நனவானால், நாட்டுக்கு நல்லது!கெட்ட கனவுகள் தான் பலிக்கும்!
  நன்றி சிவகுமார்!

  பதிலளிநீக்கு
 40. தாங்கள் கண்ட கனவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள். தங்களுடைய கனவுகளுக்கான விளக்கம் இதோ.

  1.கனவில் பறப்பதுபோல் வந்தால் அவைகள் பிரகாசமான கனவுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் சந்தோஷமாக பறப்பதுபோல் உணர்ந்தால் நீங்கள் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பதாக பொருளாம்.

  2.பணம் வருவது போல் கனவு கண்டால் வெற்றியும், வளமும் உங்களுக்கு கைக்கு எட்டிய தூரத்தில் தானாம். மேலும் பணத்தை பார்ப்பது அதிகாரம் அல்லது காதல்,( பாசம், அன்பு) க்கான உங்களுடைய வேட்கையை குறிக்கிறதாம்.

  3.கனவில் குரங்கு வந்தால் அது உள்ளுணர்வை குறிக்கிறதாம்.மற்றும் உங்களை சுற்றி உள்ளோர் தங்கள் நலனுக்காக உழைக்கிறார்கள் என்று பொருளாம். மற்றும் அது தங்களுடைய குறும்புத்தனத்தையும்,
  விளையாட்டுத்தனத்தையும் குறிக்கிறதாம்.

  என்ன நான் சொன்னது சரிதானே?

  பதிலளிநீக்கு
 41. @வே.நடனசபாபதி
  நான் கண்ட கனவுகளில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா?
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 42. ஆழ்மனதில் புதைந்து இருக்கும் எண்ணங்களே சில நேரம் கனவுகளாக தோன்றுவது உண்டு என்று ஒரு கருத்து உள்ளது . கணித மேதை திரு ராமநஞ்சம் அவர்கள் கண்ட கனவுகள் கணித உலகிற்கு பெரும் பயனை தந்தது . கனவில் கண்ட பிறகே பல கணித குறிப்புகளை அவர் வழங்கியது அனைவரும் அறிந்தது ... நிற்க ,உங்கள் கனவுகளை வர்ணித்த விதம் நன்றாக இருந்தது . குறிப்பாக பெண் குரங்கு பற்றிய கனவு ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 43. Vasu கூறியது...

  //உங்கள் கனவுகளை வர்ணித்த விதம் நன்றாக இருந்தது . குறிப்பாக பெண் குரங்கு பற்றிய கனவு ! //
  :} நன்றி வாசு!

  பதிலளிநீக்கு
 44. கனவுகள் அருமை நமெக்கெல்லாம் கனவு காண்பதோடு சரி எழுந்தவுடன் எல்லாம் மறந்துவிடும்

  பதிலளிநீக்கு
 45. FARHAN கூறியது...

  //கனவுகள் அருமை நமெக்கெல்லாம் கனவு காண்பதோடு சரி எழுந்தவுடன் எல்லாம் மறந்துவிடும்//
  இதெல்லாம் அந்தக் காலக் கனவுகள்!இப்பவெல்லாம் அர்த்தமில்லக் கனவுகள்,எழுந்தால் நினைவிருப் பதில்லை!
  நன்றி ஃபர்ஹன்!

  பதிலளிநீக்கு
 46. வளமான,வலிமையான புதிய பாரதம் பற்றி.

  கனவுகள் பலிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 47. //தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!//

  எத்தனை பல் இருந்தது.

  கனவுகள் தொடரட்டும்..

  பதிலளிநீக்கு
 48. அன்புடன் மலிக்கா கூறியது...

  //தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவு வந்து விட்டது.கனவில் ஒரு குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டி 'குர்' என்று விட்டுப் போனது !!//

  //எத்தனை பல் இருந்தது.//
  எண்ணவில்லையே!

  கனவுகள் தொடரட்டும்..
  நன்றி மலிக்கா அவர்களே!

  பதிலளிநீக்கு
 49. எனக்கும் இதே கனவுகள் என் சிறு வயதில் கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு