தொடரும் தோழர்கள்

புதன், ஏப்ரல் 20, 2011

பெயர்க்காரணம்-தொடர் பதிவு!

பிரபல பதிவர்,நண்பர்,செங்கோவி அவர்கள்(கொட்டைப்புளி மாதிரி இல்லை,உண்மையிலேயே பிரபல பதிவர்) என்னை இத்தொடர் பதிவு எழுதுமாறு பிறப்பித்த கட்டளையைச் சிரமேற்கொண்டு உடனே எழுதிவிட்டேன்!(நம்மையும் ஒரு பதிவர் என்று சிலர் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்!)

”கொழந்தே”

பாட்டி என்னை அழைத்தார்கள்.

இந்தக் குழந்தைக்கு வயது அப்போது பதினெட்டு;கல்லூரி மாணவன்!

அழைத்த இடம் ரயில்வே பிளாட்ஃபாரம்.

குழந்தை அப்போது சீரியசாக அருகில் இருந்த சில இளம் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தது.பார்வைகளின் உரசிலில் சூடேறிக் கொண்டிருந்த நேரம்!

‘களுக்,களுக்’ அந்த அழைப்பைக்கேட்ட பெண்களின் சிரிப்பு!

போச்சு! எல்லாம் போச்சு!

பாட்டியிடம் அன்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்,இனிமேல் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று.பாட்டி மட்டுமல்ல என்னை அவ்வாறு அழைத்து வந்த அனைவருக்கும் அதேதான் மெசேஜ்!

இவ்வாறு அந்தப் பெயர் ஒழிந்தது!

பிறந்தபோது பஞ்சாங்கம் பார்த்துப் பெயர் வைத்திருந்தால் என் பெயர் கிருஷ்ணன்,குப்புசாமி,கேசவன்(கேனையன் இல்லை!) ,கோதண்டராமன் என்றிருந்திருக்கும்!

ஆனால் காரணம் ஏதும் இன்றி வைக்கப் பட்ட பெயர் சந்திர சேகரன்.வீட்டில் சேகர்,வெளியில் சந்துரு(எனக்குப் பிடிக்கவேயில்லை!),வடக்கே பணி புரியும்போது சேகர் சாப்.

ஆனால் வலைப் பதிவு தொடங்க எண்ணியதும் புனை பெயர் வைத்துக்கொள்ளும் ஆசை வந்தது.

வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம் வந்ததால்-’பித்தன்’

என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை’

எனவே சென்னை பித்தன்.


சென்னையைச் சேர்ந்த பித்தன்;ஆனால் சென்னையின் மேல் பித்தன் அல்ல!

காதல் பதிவுகள் சில என்னை சென்னைக் காதலனாக்கின!-நன்றி
கக்கு மாணிக்கம்!

கவிதைகள் சில என்னைக் கவிதை பித்தனாக்கின!-நன்றி நாஞ்சில் மனோ!

ஆனால் வேறு பெயர் வைத்தாலும் அதில் சென்னையோ ,பித்தனோ கட்டாயம் நின்றன!

இதுவே சென்னை பித்தனின் கதை!

நண்பரே செங்கோவி,நீங்கள் கொடுத்த பணியைச் செவ்வனே முடித்து விட்டேன் என நீங்கள் சொன்னால்

உங்களுக்கு ஒரு செவ்வணக்கம்!

பிற்சேர்க்கை:-
இது ஒரு தொடர் பதிவென்பதால்,இன்னும் சிலரை அழைப்பது என் கடமையாகிறது!
இதுவரை யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியாததால்,இதைப் படிக்கும் நண்பர்கள்,யாரெல்லாம் இப்படி ஒரு பதிவு எழுதவில்லையோ அவர்களுக்கெல்லாம் இது ஒரு திறந்த அழைப்பு!வாருங்கள்!எழுதுங்கள்!ஒரு வரி உங்கள் இயற்பெயர் பற்றியும் எழுதுங்கள்.தெரிந்து கொள்கிறோம்!

53 கருத்துகள்:

 1. என்னங்க இது இன்னிக்கு ஒரே பெயர் காரணமா இருக்கு....

  சொங்கோவி..
  ரஹீம்..
  அடுத்து நீங்களா...

  பதிலளிநீக்கு
 2. அடுத்து நான் கவீதை வீதி...
  பெயர் வர காரணம்ன்னு ஒரு பதிவு போடப் போறேன்..

  பதிலளிநீக்கு
 3. ”கொழந்தே” நல்லாதான சார் இருக்கு. அதப்போயி வேணாம்னு சொல்லிட்டீங்களே..

  பதிலளிநீக்கு
 4. //இந்தக் குழந்தைக்கு வயது அப்போது பதினெட்டு;கல்லூரி மாணவன்!

  அழைத்த இடம் ரயில்வே பிளாட்ஃபாரம்.

  குழந்தை அப்போது சீரியசாக அருகில் இருந்த சில இளம் பெண்களை சைட் அடித்துக் கொண்டிருந்தது.பார்வைகளின் உரசிலில் சூடேறிக் கொண்டிருந்த நேரம்!

  ‘களுக்,களுக்’ அந்த அழைப்பைக்கேட்ட பெண்களின் சிரிப்பு!

  போச்சு! எல்லாம் போச்சு!//


  அய்யய்யோ மானமே போச்சே....

  பதிலளிநீக்கு
 5. //கிருஷ்ணன்,குப்புசாமி,கேசவன்(கேனையன் இல்லை!) ,கோதண்டராமன் என்றிருந்திருக்கும்!///


  ஹா ஹா ஹா ஹா தல சூப்பர்.....

  பதிலளிநீக்கு
 6. //ஆனால் காரணம் ஏதும் இன்றி வைக்கப் பட்ட பெயர் சந்திர சேகரன்.வீட்டில் சேகர்,வெளியில் சந்துரு(எனக்குப் பிடிக்கவேயில்லை!),வடக்கே பணி புரியும்போது சேகர் சாப்.//


  டீக்கே டீக்கே ஹம் சமஜ் கயா'ஜி சேகர் சாப்.....

  பதிலளிநீக்கு
 7. //கவிதைகள் சில என்னைக் கவிதை பித்தனாக்கின!-நன்றி நாஞ்சில் மனோ!//  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 8. தமிழ்மணம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி தல, செமையா கெத்தா ஓட்டு போட்டுருக்கேன் ஹா ஹா ஹா ஹா....

  பதிலளிநீக்கு
 9. //வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம்//

  //நெஞ்சில் சுமக்கும் ’சென்னை’//

  //நண்பரே செங்கோவி...
  உங்களுக்கு ஒரு செவ்வணக்கம்!//

  அருமை! அப்பீலே இல்லீங்க! :)))

  பதிலளிநீக்கு
 10. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  //என்னங்க இது இன்னிக்கு ஒரே பெயர் காரணமா இருக்கு....

  சொங்கோவி..
  ரஹீம்..
  அடுத்து நீங்களா...//
  அழைப்பு வந்தது!எழுத்துப் பிறந்தது!
  திறந்த அழைப்பு அனுப்பியுள்ளேன்(மீண்டும் பதிவைப் பாருங்கள்)
  நீங்களும் வாருங்கள் சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 11. ஹையா அய்யா பேரு எனக்கு தெரிஞ்சு போச்சு....
  சந்திரசேகரன் ....சந்திரசேகரன் ...சந்திரசேகரன் ....

  பதிலளிநீக்கு
 12. குழந்தை என்ற பேரின் விஷேசமே....நமக்கு எழுபது,என்பது வயதானாலும் குழந்தையாவே இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //அடுத்து நான் கவீதை வீதி...
  பெயர் வர காரணம்ன்னு ஒரு பதிவு போடப் போறேன்..//
  வரவேற்கிறேன்!
  நீங்கள் வசிக்கும் வீதியெல்லாமே, கவிதை வீதிதானே,சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 14. ! சிவகுமார் ! கூறியது...

  //”கொழந்தே” நல்லாதான சார் இருக்கு. அதப்போயி வேணாம்னு சொல்லிட்டீங்களே..//
  எத்தனை நாள்தான் குழந்தையாக இருப்பது சிவகுமார்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 15. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  /

  போச்சு! எல்லாம் போச்சு!//


  //அய்யய்யோ மானமே போச்சே....//
  கப்பலேறிப் போயாச்சு!

  பதிலளிநீக்கு
 16. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  என்னங்க இது இன்னிக்கு ஒரே பெயர் காரணமா இருக்கு....

  சொங்கோவி..
  ரஹீம்..
  அடுத்து நீங்களா...///
  இவ்வளவு விவரமா என் பேரை கஸாலி ன்னு சொல்லி ஒரு பதிவே போட்டுட்டேன்...இன்னும் பாருங்க இவரு ரஹீம்ன்னு சொல்லிருக்காரு...அவ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கிருஷ்ணன்,குப்புசாமி,கேசவன்(கேனையன் இல்லை!) ,கோதண்டராமன் என்றிருந்திருக்கும்!///


  ஹா ஹா ஹா ஹா தல சூப்பர்..... நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 18. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //ஆனால் காரணம் ஏதும் இன்றி வைக்கப் பட்ட பெயர் சந்திர சேகரன்.வீட்டில் சேகர்,வெளியில் சந்துரு(எனக்குப் பிடிக்கவேயில்லை!),வடக்கே பணி புரியும்போது சேகர் சாப்.//


  //டீக்கே டீக்கே ஹம் சமஜ் கயா'ஜி சேகர் சாப்.....//
  தன்யவாத்!சுக்ரியா!

  பதிலளிநீக்கு
 19. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //கவிதைகள் சில என்னைக் கவிதை பித்தனாக்கின!-நன்றி நாஞ்சில் மனோ!//  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....//

  இதுவே ஒரு கவிதை போல இருக்கே!

  பதிலளிநீக்கு
 20. MANO நாஞ்சில் மனோ கூறியது...
  //
  தமிழ்மணம் வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சி தல, செமையா கெத்தா ஓட்டு போட்டுருக்கேன் ஹா ஹா ஹா ஹா....//
  அப்புறம் என்ன,ஜெயிச்சுடுவோம்!

  பதிலளிநீக்கு
 21. மனம் திறந்து... (மதி) கூறியது...

  //வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம்//

  //நெஞ்சில் சுமக்கும் ’சென்னை’//

  //நண்பரே செங்கோவி...
  உங்களுக்கு ஒரு செவ்வணக்கம்!//

  //அருமை! அப்பீலே இல்லீங்க! :)))//
  நன்றி மதி!திறந்த அழைப்பு உங்களுக்கும்!

  பதிலளிநீக்கு
 22. 'சென்னை பித்தன்’ என்ற காரணப்பெயரை ஏன் வைத்தீர்கள்
  என்பதை விளக்கியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம் வந்ததால்-’பித்தன்’

  என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை’  ......Super!!!! :-)

  பதிலளிநீக்கு
 24. பெயர்க்காரணம் அருமையாக சொல்லியுள்ளீர்கள். ந்ன்றி.
  இன்று உணவு உலகத்தில் --
  http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_20.html#more
  பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!

  பதிலளிநீக்கு
 25. வே.நடனசபாபதி சொன்னது…

  // 'சென்னை பித்தன்’ என்ற காரணப்பெயரை ஏன் வைத்தீர்கள்
  என்பதை விளக்கியமைக்கு நன்றி.//
  நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 26. Chitra கூறியது...

  வலைப் பதிவு தொடங்கும் ’பைத்தியக்காரத்தனமான’ எண்ணம் வந்ததால்-’பித்தன்’

  என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை’  // ......Super!!!! :-)//
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 27. FOOD கூறியது...

  //பெயர்க்காரணம் அருமையாக சொல்லியுள்ளீர்கள். ந்ன்றி.
  இன்று உணவு உலகத்தில் --
  http://unavuulagam.blogspot.com/2011/04/blog-post_20.html#more
  பாக்கெட் குளிர்பானங்கள் பருகலாம் வாங்க!//
  வந்து கொண்டே இருக்கிறேன்!
  நன்றி !

  பதிலளிநீக்கு
 28. பித்தன் எனக்கு மிகவும் படித்த பெயர். சிவனின் திருநாமம் அல்லவா .
  கொழந்தே இன்னும் நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 29. பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..

  பதிலளிநீக்கு
 30. சிவகுமாரன் சொன்னது…

  //பித்தன் எனக்கு மிகவும் படித்த பெயர். சிவனின் திருநாமம் அல்லவா .//
  இப்பெயர் வைத்துக் கொள்ள இதுவும் ஒரு காரணமே!

  //கொழந்தே இன்னும் நல்லாருக்கு.//
  குழந்தையாகவே இருந்தா இன்னும் நல்லாருக்கும்!
  நன்றி சிவகுமாரன்!

  பதிலளிநீக்கு
 31. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..//
  மறைத்து வைக்க இது என்ன பெரிய ரகசியமா!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 32. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //பெயர் காரணம் அருமை.. உங்க பெயர் எனக்கு தெரிஞ்சுடிச்சே..//
  மறைத்து வைக்க இது என்ன பெரிய ரகசியமா!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 33. ரஹீம் கஸாலி கூறியது...

  //ஹையா அய்யா பேரு எனக்கு தெரிஞ்சு போச்சு....
  சந்திரசேகரன் ....சந்திரசேகரன் ...சந்திரசேகரன் ....//
  அது என்னங்க,மூன்று முறை, சினிமாவில் கோர்ட்டில் கூப்பிடுவது போல்?(உண்மையில் அப்படிக் கூப்பிடுகிறார்களா என்ன?)

  இனி நல்ல விதமாகப் பரப்புங்க!

  பதிலளிநீக்கு
 34. ரஹீம் கஸாலி கூறியது...

  //குழந்தை என்ற பேரின் விஷேசமே....நமக்கு எழுபது,என்பது வயதானாலும் குழந்தையாவே இருக்கலாம்//
  அதில் சௌகர்யமும் இருக்கு, அசௌகர்யமும் இருக்கே,கஸாலி!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 35. ரஹீம் கஸாலி கூறியது...

  # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  என்னங்க இது இன்னிக்கு ஒரே பெயர் காரணமா இருக்கு....

  சொங்கோவி..
  ரஹீம்..
  அடுத்து நீங்களா...///
  //இவ்வளவு விவரமா என் பேரை கஸாலி ன்னு சொல்லி ஒரு பதிவே போட்டுட்டேன்...இன்னும் பாருங்க இவரு ரஹீம்ன்னு சொல்லிருக்காரு ...அவ்வ்வ்வ்....//

  பழகிப் போச்சில்ல,கொஞ்ச நாள் அப்படித்தான்!

  பதிலளிநீக்கு
 36. உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா.

  சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?

  பதிலளிநீக்கு
 37. பாலா சொன்னது…

  //உங்க பேருக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா.

  சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?//

  பித்தில் எத்தனையோ ரகம்!அதுவும் இங்கே கொஞ்சம் வெயில் அதிகம் இல்லையா!

  பதிலளிநீக்கு
 38. ”கோந்தே! இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருந்தது….!”ன்னு யாராது பதில் எழுதுவாங்கன்னு பார்த்தா, எழுதலயே :)

  பதிலளிநீக்கு
 39. சார், கலக்கிட்டீங்க..செம நக்கல் விடுறீங்களே!

  பதிலளிநீக்கு
 40. குழந்தை-ன்னே வச்சிருந்திருக்கலாம், எங்களுக்குக் கலாய்க்க வசதியா இருந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
 41. //என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை// பிண்ணனில லாலாலா சத்தம் கேட்குதே..அந்தக் கதையை எப்போ எடுத்து விடுவீங்க?

  பதிலளிநீக்கு
 42. அட இம்புட்டு தானா? நான் கூட ரீமா சென்னை,ரியா சென்னை, அமர்த்தியா சென்னை அண்ணனுக்கு பிடிக்கும் போல.. அதான் சென்னைபித்தன்னு நினைச்சுட்டேன் ஹி ஹி

  பதிலளிநீக்கு
 43. "கொழந்தே" இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. :))))
  இனிமே பின்னூட்டத்தில் கொழந்தே ன்னே எழுதப்போறேன்!

  //சென்னையில் நீங்கள் மட்டும் பித்தரா இல்லை சென்னையில் இருக்கும் பித்தர்களில் நீங்களும் ஒருவரா?//

  ----------பாலா

  விருதுநகர் காரரே......இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?

  பதிலளிநீக்கு
 44. வெங்கட் நாகராஜ் கூறியது...

  //”கோந்தே! இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருந்தது….!”ன்னு யாராது பதில் எழுதுவாங்கன்னு பார்த்தா, எழுதலயே :)//
  அதுதான் நீங்க எழுதிட்டீங்களே, வெங்கட்!
  நன்றி!
  (காலை முதல் இண்டெர்னெட் இல்லை!)

  பதிலளிநீக்கு
 45. செங்கோவி கூறியது...

  //சார், கலக்கிட்டீங்க..செம நக்கல் விடுறீங்களே!//
  :-D. நன்றி செங்கோவி!

  பதிலளிநீக்கு
 46. செங்கோவி கூறியது...

  //குழந்தை-ன்னே வச்சிருந்திருக் கலாம், எங்களுக்குக் கலாய்க்க வசதியா இருந்திருக்கும்!//
  நல்ல வேளை,பிழைத்தேன்!

  பதிலளிநீக்கு
 47. செங்கோவி கூறியது...

  //என் நெஞ்சில் சுமக்கும் நினைவுகளுக்குக் காரணமான-’சென்னை// பிண்ணனில லாலாலா சத்தம் கேட்குதே..அந்தக் கதையை எப்போ எடுத்து விடுவீங்க?//
  ஏற்கனவே கொஞ்சம் எடுத்து விட்டாச்சு!
  பாருங்கள்
  http://chennaipithan.blogspot.com/2011/01/blog-post_27.html
  http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_9541.html
  http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_28.html
  http://chennaipithan.blogspot.com/2011/02/blog-post_04.html
  http://chennaipithan.blogspot.com/2011/02/2.html
  http://chennaipithan.blogspot.com/2011/02/3.html

  பதிலளிநீக்கு
 48. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  //அட இம்புட்டு தானா? நான் கூட ரீமா சென்னை,ரியா சென்னை, அமர்த்தியா சென்னை அண்ணனுக்கு பிடிக்கும் போல.. அதான் சென்னைபித்தன்னு நினைச்சுட்டேன் ஹி ஹி//
  ரீமா,ரியா எல்லாம் சரி! அமர்த்தியாவைப் படிக்க,பிடிக்க ஒரு அறிவு ஜீவியாக இருக்க வேண்டுமே சிபி!
  எனக்குப் பிடித்த ஒரு சென் மிருணாள் சென்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 49. கக்கு - மாணிக்கம் கூறியது...

  //"கொழந்தே" இதுதான் எனக்கு பிடிச்சிருக்கு. :))))
  இனிமே பின்னூட்டத்தில் கொழந்தே ன்னே எழுதப்போறேன்!//
  அய்யோ!வாயைக் கொடுத்து நானே மாட்டிக்கிட்டேனே!அய்யா,சாமி! ஆளை விடுங்க!
  நன்றி ,கக்கு!

  பதிலளிநீக்கு
 50. பித்தா பிறை சூடி மாதிரி பிததன் பதிவு எழுதி.நல்லாஎழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 51. இராஜராஜேஸ்வரி கூறியது...

  // பித்தா பிறை சூடி மாதிரி பிததன் பதிவு எழுதி.நல்லாஎழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.//
  நன்றி இராஜராஜேஸ்வரி அவர்களே!

  பதிலளிநீக்கு