தொடரும் தோழர்கள்

திங்கள், ஏப்ரல் 04, 2011

பரல்கள்!

முதலில் ஒரு குட்டிக் கதை;சுவாரஸ்யமான கதை!

அவன் காரில் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறான்.

வழியில் ஒரு பெண் வண்டியை நிறுத்தச் சொல்லி,லிஃப்ட் கேட்கிறாள்.

போய்க் கொண்டிருக்கும்போதே அவள் மயக்கமடைகிறாள்.

அவன் அவளை மருத்துவரிடம் எடுத்துச் செல்கிறான்.

பரிசோதனை செய்து விட்டு மருத்துவர் அவனிடம் சொல்கிறார்,”வாழ்த்துகள்.நீங்கள் தந்தையாகப் போகிறீர்கள்!”

அவன் அதிர்ச்சி அடைகிறான்.

”இல்லை இல்லை,இது என் குழந்தையில்லை” என மறுக்கிறான்.

அந்தப் பெண் சொல்கிறாள்”இவர்தான் குழந்தையின் தந்தை”

மேலும் அதிர்ச்சி!

குற்றமற்றவனென நிருபிக்க மரபணு சோதனை செய்யச் சொல்கிறான்.
போலீஸ் வருகிறது.சோதனை நடக்கிறது!

சோதனை முடிவு வருகிறது.அதன் படி அவன் ஒரு தந்தையாகும் தகுதியற்றவன் எனத் தெரிகிறது!

மென்மேலும் அதிர்ச்சி!

எப்படியோ சிக்கலிலிருந்து தப்பியாயிற்று.

திரும்பி வீடு செல்லும்போது யோசிக்கிறான்.

”வீட்டில் காத்திருக்கும் இரண்டு குழந்தைகள்,? ”….

இதுதான் மிகப் பெரிய அதிர்ச்சி!!

வேடிக்கையான கதை;
------------*-----------*-----------
இனி உங்கள் சிந்தனைக்குச் சில சிந்தனைகள்!

1)கோபம் அதிகரிக்கும்போது,நாக்கு,மூளையை விட வேகமாகச் செயல் படுகிறது!

2)கடந்த காலத்தை மாற்ற முடியாது;ஆனால்,நிகழ்காலத்தைப் பாழாக்க முடியும்,எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்பட்டு!

3) நேற்று பற்றிய வருத்தங்களும்,நாளை பற்றிய கவலைகளும் இதயத்தை நிரப்பியிருந்தால்,மகிழ்வளிக்கும் இன்று என்பது இல்லாமல் போய் விடும்!

4)எல்லா மனிதரின் புன்னகைக்கும் ஒரே மொழிதான்!

5)யார் மீதாவது கோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திலும்,நாம் 60 விநாடிகள் மகிழ்ச்சியை இழக்கிறோம்!

6)எத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுத்தாலும் குறையாதது—அன்பு!
----------*---------*----------
கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லையென்றால்,இப்போது எதுவும் முழுமையடையாது அல்லவா?

பைக்கில் சென்று கொண்டிருந்த இரு இளைஞர்களை,போக்குவரத்துக் காவலர் நிறுத்தி,ஏதோ கேட்பதைப் பார்த்தார் ஒருவர்.இளஞர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துக் காட்டாமல் கைபேசியை எடுத்து அழுத்திவிட்டு,அதைக் காவலரிடம் காண்பித்து விட்டுப்பின் சென்றனர்.அவர் ஆவலை அடக்கமுடியாமல் இளைஞர்களைப் பின் தொடர்ந்து சென்று என்ன நடந்தது என்று விசாரிக்க,அவர்கள் சொன்னார்கள்”காவலர்கள்,கிரிக்கெட் ஸ்கோர் கேட்டனர்,கைபேசியில் தகவலைக் காட்டினோம்” என்று!( நன்றி—இந்தியாவின் நேரங்கள்.4-4-2011)

இதுதான் இந்தியா!

41 கருத்துகள்:

 1. அந்தக் கதை மூலமாக என்ன சொல்ல வர்றீங்ன்னு புரியலையே?

  பதிலளிநீக்கு
 2. தமிழ்மணத்தில் உங்க ஓட்டும் பொடுங்க..

  பதிலளிநீக்கு
 3. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //அந்தக் கதை மூலமாக என்ன சொல்ல வர்றீங்ன்னு புரியலையே?//

  இன்னும் ஒரு முறை படியுங்கள்!

  பதிலளிநீக்கு
 4. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //சிந்தனைகள் அருமை..//
  எவ்வளவு வேகம்!
  நன்றி கருன்!

  பதிலளிநீக்கு
 5. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //தமிழ்மணத்தில் உங்க ஓட்டும் பொடுங்க..//
  போட்டாச்சு;நன்றி!

  பதிலளிநீக்கு
 6. !* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...

  //தமிழ்10 என்ன ஆச்சு?//
  வந்திடுச்சு!

  பதிலளிநீக்கு
 7. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //ம்... சூப்பர் தல...//

  நன்றி சௌந்தர்;தேர்வெல்லாம் முடிஞ்சாச்சா?
  சில நாட்களாக நம்ம பக்கம் காணோமே!

  பதிலளிநீக்கு
 8. ////
  சென்னை பித்தன் சொன்னது…

  # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

  //ம்... சூப்பர் தல...//

  நன்றி சௌந்தர்;தேர்வெல்லாம் முடிஞ்சாச்சா?
  சில நாட்களாக நம்ம பக்கம் காணோமே!
  ////


  இன்னும் ஒரு வாரம் இப்படி தான் இருக்கும் தல...
  தங்களை மறக்க முடியுமா...

  பதிலளிநீக்கு
 9. சிந்தனைக்குச் சில சிந்தனைகள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. போலீஸ்காரங்க கிட்ட போன்லேருந்து வேறு எதையோ காட்டினாங்கன்னு நினைச்சேன். ஹி...ஹி...

  பதிலளிநீக்கு
 11. //திரும்பி வீடு செல்லும்போது யோசிக்கிறான்.

  ”வீட்டில் காத்திருக்கும் இரண்டு குழந்தைகள்,? ”….//

  அய்யய்யோ அப்புறம் என்னாச்சு....

  பதிலளிநீக்கு
 12. முத்துசிவா கூறியது...

  //சிந்தனைக்குச் சில சிந்தனைகள் அனைத்தும் அருமை.//
  நன்றி முத்து சிவா!

  பதிலளிநீக்கு
 13. //)எத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுத்தாலும் குறையாதது—அன்பு!//

  சத்தியம்....

  பதிலளிநீக்கு
 14. ரஹீம் கஸாலி கூறியது...

  // போலீஸ்காரங்க கிட்ட போன்லேருந்து வேறு எதையோ காட்டினாங்கன்னு நினைச்சேன். ஹி...ஹி...//
  நினைப்பீங்க,நினைப்பீங்க!
  நன்றி கஸாலி!

  பதிலளிநீக்கு
 15. Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

  //பகிர்வு அருமை!//
  நன்றி ரவிகுமார்!

  பதிலளிநீக்கு
 16. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //திரும்பி வீடு செல்லும்போது யோசிக்கிறான்.

  ”வீட்டில் காத்திருக்கும் இரண்டு குழந்தைகள்,? ”….//

  //அய்யய்யோ அப்புறம் என்னாச்சு....//
  ”கதை முடிஞ்சது,கத்தரிக்காய் காச்சுது!”

  பதிலளிநீக்கு
 17. MANO நாஞ்சில் மனோ கூறியது...

  //)எத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுத்தாலும் குறையாதது—அன்பு!//

  //சத்தியம்....//

  அப்படியே!
  நன்றி மனோ!

  பதிலளிநீக்கு
 18. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...


  //இன்னும் ஒரு வாரம் இப்படி தான் இருக்கும் தல...
  தங்களை மறக்க முடியுமா...//
  நன்றி சௌந்தர்!

  பதிலளிநீக்கு
 19. அந்தக் கதை மூலமாக என்ன சொல்ல வர்றீங்ன்னு புரியலையே//
  புரிஞ்சு என்ன பண்ண போறிங்கன்னு ..?

  பதிலளிநீக்கு
 20. பகிர்வுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 21. மூணு ஓட்டும் போட்டாச்சு அய்யா

  பதிலளிநீக்கு
 22. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  அந்தக் கதை மூலமாக என்ன சொல்ல வர்றீங்ன்னு புரியலையே//
  //புரிஞ்சு என்ன பண்ண போறிங்கன்னு ..?//

  :-}!

  பதிலளிநீக்கு
 23. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  // பகிர்வுக்கு மிக்க நன்றி//
  நன்றி சதீஷ் குமார்!

  பதிலளிநீக்கு
 24. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

  //மூணு ஓட்டும் போட்டாச்சு அய்யா//
  மூன்று நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 25. FOOD கூறியது...

  //இன்று செம கலக்கல்.//
  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 26. கிரிகெட் ஜுரம் இன்னமுமா குறைய வில்லை? ஆச்சு அடுத்து IPL வந்தாச்சு.

  பதிலளிநீக்கு
 27. கக்கு - மாணிக்கம் சொன்னது…

  //கிரிகெட் ஜுரம் இன்னமுமா குறைய வில்லை? ஆச்சு அடுத்து IPL வந்தாச்சு.//

  ஜுரம் குறைந்துவிட்டது;இது பின் விளைவுதான்!
  IPL எல்லா ஆட்டமும் பார்த்தால் பைத்தியம்தான் பிடிக்கும்!நம்ம ’சென்னை’யைப் பெயரிலேயெ வைத்திருக்கும் டீம் ஆடும்போது பார்க்கலாம்!
  நன்றி மாணிக்கம்!

  பதிலளிநீக்கு
 28. கதையும் அருமை. கருத்துக்களும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 29. @வேடந்தாங்கல்
  @நாஞ்சில் மனோ
  @பயணங்கள்
  ஹா,ஹா!அடுத்த பதிவை சேமிக்கும்போது எதோ தவறு நடந்து விட்டது!
  மன்னிக்கவும்! அன்புக்கு மிக நன்றி!
  ’திக்,திக்’ நீக்கப் பட்டது. நாளை முழுப் பதிவு வரும்!

  பதிலளிநீக்கு
 30. வே.நடனசபாபதி கூறியது...

  //கதையும் அருமை. கருத்துக்களும் அருமை. நன்றி.//
  மிக்க நன்றி சபாபதி அவர்களே!

  பதிலளிநீக்கு
 31. Chitra கூறியது...

  //கலகலப்பான தொகுப்பு.... :-)//
  நன்றி சித்ரா!

  பதிலளிநீக்கு
 32. தமிழக மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். உலக கோப்பை, ஐ பி எல், மற்றும் தேர்தல். யாருக்கு வெற்றி தோல்வி என்றாலும் ரசிக்கப்போவது நாம் தான்.

  பதிலளிநீக்கு
 33. Selvaraj கூறியது...

  //இது கதையல்ல! நிஜம் ஐயா!
  இதோ, என்னுடைய பதிவை படியுங்கள்.//

  படித்தேன்;பிரமித்தேன்.
  நான் எழுதியது ஒரு நண்பர் எனக்குச் சொன்ன கதை!
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 34. கே. ஆர்.விஜயன் கூறியது...

  //தமிழக மக்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். உலக கோப்பை, ஐ பி எல், மற்றும் தேர்தல். யாருக்கு வெற்றி தோல்வி என்றாலும் ரசிக்கப்போவது நாம் தான்.//
  உண்மைதான் விஜயன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு