இரயில்
நிலையம்.
வழக்கமான
பரபரப்பு
இன்னும்
சிறிது நேரத்தில் வரப்போகும் இரயிலுக்காகக் காத்திருக்கும் கூட்டம்
சிலர்
கையில் மினரல் தண்ணீர் பாட்டில்;சிலர் பிளாட்பாரக் குழாயில் தண்ணீர் பிடித்தபடி..
சிலர்
கையில் உள்ள பொட்டலத்தில் இருந்து எதையோ கொறித்தபடி.,சிலர் கப்பில் உள்ள காபி/டீயை
உறிஞ்சியபடி.,சிலர் மற்றவர்களைப் பார்த்தபடி. ..
என்ன
செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான் அந்தச் சிறுவன்.
மூன்று
வயதே இருக்கும் அவனைச் சிறுவன் என்பதா,குழந்தை என்பதா?
பிளாட்பாரத்தில்
இங்கும் இங்கும் ஓடுகிறான்.ஒரு ஓரத்தில் படுத்திருக்கும் அந்த ஆண்,பெண் அருகே வந்து
அமர்ந்து கொள்கிறான்.
ஒரு
கிழிந்த பொம்மையுடன் விளையாடுகிறான்.
அந்தப்
பெண்ணின் அருகில் படுக்கிறான்.
எழுகிறான்
மீண்டும்
ஓடுகிறான்.
ஓரிருவர்
அவனை நிறுத்தி விசாரிக்க, படுத்திருப்பவர்கள் அவன் பெற்றோர் எனவும் அவர்கள் அருகில்
உள்ள ஓர் ஊர்க்கோவிலுக்குப் போவதாகவும், அவர்கள் தூங்கி எழுந்தவுடன் போகப்போவதாகவும்
மழலையில் சொல்கிறான்.
சிலர்
பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
படுத்திருக்கும்
தம்பதியிடம் எந்த அசைவும் இருப்பதாகத் தெரியவில்லை
அருகில்
சென்று பார்க்கையில் தெரிய வருகிறது –அவர்கள் உயிருடன் இல்லை என்பது.
சிறுவன்/குழந்தை
ஏதும் அறியாமல் அம்மாவின் புடவைத்தலைப்பைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.............
நில்லுங்கள்.
என்னால்
மேலே எழுத முடியவில்லை.எழுதியதைப் படிக்க முடியவில்லை
கண்களிலிருந்து
கண்ணீர் தாரையாக வழிந்து ஓடுகிறது.
ஏதோ
ஒரு ஊரில் ஒரு இரயில் நிலையத்தில் மூன்று வயது குழந்தை, நிர்க் கதியாக, அனாதையாக............
இறைவா!இது
என்ன நீதி? அக்குழந்தை என்ன பாவம் செய்தது?
ஏன்
இப்படிச் செய்தாய்?
இருவரும்
சேர்ந்தே இறந்திருக்கிறார்கள் என்றால்,அது தற்கொலையா?காரணம் என்ன?
காரணம்
எதுவாக இருந்தாலும் அந்தக் குழந்தையைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லையா அவர்கள்?
இனி
அக்குழந்தையின் நிலை என்ன?
கேள்விகள்
,கேள்விகள்,கேள்விகள்......விடை தெரியாத......
(டைம்ஸ்
இந்தியா,சென்னை,23-08-2016,செய்தியின் அடிப்படையில்)
ரு