தொடரும் தோழர்கள்

செவ்வாய், நவம்பர் 11, 2014

மனம் ஒரு குரங்கு




உடல் நலத்துடன் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியமாகிறது.

 உங்கள் வயதுக்கேற்ப, உடல் நிலைக்கேற்ப என்ன சாப்பிடலாம்.எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதற்கு உணவியலர்கள் இருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடன் இருந்தால் நலமாக வாழலாம்.

ஆனால் இந்த மனம் இருக்கிறதே,அது குரங்கு..மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல், சிந்தனைகள் அங்கும் இங்கும் கட்டுப்பாடற்றுத் தாவும்.

மனம் ஒரு குதிரை.

காற்றைக் கிழித்து வேகமாகச் செல்லும் குதிரைகள் போல்.எண்ணங்கள் ஏதோ திசையில் கட்டற்ற வேகத்தில் பாயும்.

வாயு வேகம் ,மனோ வேகம் என்று அதனால்தான் சொன்னார்கள்.

குதிரைக்குக் கடிவாளம் போடுவது போல் மனத்துக்கும் கடிவாளம் தேவைப் படுகிறது.

உடல் நலமாக வாழ உணவுக்கட்டுப்பாடு தேவைப் படுவது போல,மன நலத்துக்கு 
மன, எண்ணங்களின் கட்டுப்பாடு தேவையாகிறது.

இதை எவ்வாறு செய்வது?

முதலில் மனத்தில் ஏற்படும் எதிர்மறையான சிந்தனைகளை சிறிது சிறிதாக  விலக்க முயலுங்கள்.ஒரு நாளில் இது சாத்தியமாகாது.தொடர்ந்த முயற்சி தேவை.இப்படிப்பட்ட சிந்தனைகள்,வேக உணவு,குப்பை உணவு என்றெல்லாம் சொல்லப்படும்,இன்றைய இளைஞர்கள் விரும்பி உண்ணும் உணவு போன்றவை.அத்தகைய உணவுகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து இல்லை. அதே போல் அத்தகைய சிந்தனைகளில்,மனத்துக்குத் தேவையான ஊட்டசத்து இல்லை!

எனவே ஆக்க பூர்வமான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆக்க பூர்வமான சிந்தனையென்றால்,வாழ்க்கையின் எதிர்மறையான பகுதியை அறிய மறுப்பதல்ல.

வாழ்க்கையில் ஒரு கடினமான பகுதியும் இருக்கவே செய்யும்.

ஆக்கபூர்வமான சிந்தனை உள்ளவர்,இருண்ட பகுதியிலேயே தன் மனத்தை இருத்தியிருக்க மாட்டார்.மோசமான சந்தர்ப்பங்களிலிருந்து கூட சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவது எப்படி என்று யோசிப்பார்.

ஒரு வணிக நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் மட்டும் விற்பனை குறைந்தே இருந்தது.

நிறுவனத்தின்  விற்பனை மேலாளர் அம் மண்டல விற்பனைப் பிரதிநிதிகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தார்.

அவர்கள் முன் ஒரு பெரிய வெள்ளை அட்டை மாட்டப்பட்டது. 

அட்டையின் நடுவில் ஒரு சிறு கருப்புப் புள்ளி வைக்கப்பட்டிருந்தது.

மேலாளர் அனைவரையும் பார்த்து என்ன தெரிகிறது எனக் கேட்டார். அனைவரும்,கருப்புப் புள்ளி என்றே பதில் அளித்தனர்.

மேலாளர் அதைத்தவிர என்ன தெரிகிறது எனக் கேட்டதற்கு அனைவரும் வேறு ஒன்றும் இல்லை என்றே கூறினர்.

மேலாளர் சொன்னார்உங்கள் பிரச்சினையே அதுதான்.இவ்வளவு பெரிய வெள்ளை அட்டையில் உள்ள சிறு கருப்புப் புள்ளியை மட்டுமே பார்ர்க்கிறீர்கள் சுற்றியிருக்கும் வெண்மை கண்ணில் படவில்லை. உங்கள் பகுதிக்குச் சென்று பணியைச் செய்யும்போது இனி வாய்ப்பு களைத்தேடக் கற்றுக் கொள்ளுங்கள்.இடர்களை மட்டுமே எதிர் நோக்காதீர்கள்

நம்மில் பலர் வாழ்க்கையில் கருப்புப்புள்ளியை மட்டுமே பார்க்கிறோம். சுற்றியிருக்கும் வெண்மையைப் பார்ப்பதில்லை.

அதைச் செய்தால் பிரச்சினைகள் இல்லாது போகும்.


12 கருத்துகள்:

  1. நன்றாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். நாகேஷ் ஒரு படத்தில் சொல்வார். பிரச்னை என்பது ஒரு சிறு கல் மாதிரி. கண்ணுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்த்தால் உலகையே மறைக்கும். சற்று தூரத்தில் வைத்துப் பார்த்தால் மிக மிகச் சிறிதாகத் தோன்றும் என்பார்.

    அது போல பாசிட்டிவ் எண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்வதில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட் சார்... இதையே கமலும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்...

      நீக்கு

  2. // நம்மில் பலர் வாழ்க்கையில் கருப்புப்புள்ளியை மட்டுமே பார்க்கிறோம். சுற்றியிருக்கும் வெண்மையைப் பார்ப்பதில்லை.

    அதைச் செய்தால் பிரச்சினைகள் இல்லாது போகும்.//

    இது தெரிந்திருந்தும் அநேகர் கருப்புப்புள்ளியைத்தான் பார்க்கிறார்கள். அதுதான் பிரச்சினையே.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கருத்துக்கள்! சிறந்த பகிர்வு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சின்ன கறுப்பு புள்ளி தானே என்று விட்டுவிட்டுப் போகவேண்டும்.... அந்த ஒரு புள்ளியையே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா

    சொல்ல வேண்டிய கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. மேலாளர் சொன்னார்”உங்கள் பிரச்சினையே அதுதான்.இவ்வளவு பெரிய வெள்ளை அட்டையில் உள்ள சிறு கருப்புப் புள்ளியை மட்டுமே பார்ர்க்கிறீர்கள் சுற்றியிருக்கும் வெண்மை கண்ணில் படவில்லை. உங்கள் பகுதிக்குச் சென்று பணியைச் செய்யும்போது இனி வாய்ப்பு களைத்தேடக் கற்றுக் கொள்ளுங்கள்.இடர்களை மட்டுமே எதிர் நோக்காதீர்கள்”

    உண்மை ஐயா... உண்மை...
    அருமை..

    பதிலளிநீக்கு
  7. நான் முயற்சி செய்கிறேன் பித்தன் ஐயா.
    ஆனால் ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது....(

    பதிலளிநீக்கு
  8. "மனதை கட்டுப்படுத்துங்கள்". பின்பற்றுவதற்கு கஷ்டமான ஒரு விஷயத்தை எளிதாய் புரியும்படி சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு

  9. சிறந்த உளநல வழிகாட்டல்
    பயனுள்ள பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் எளிமையாக சொல்லி விட்டீர்கள். சாப்பிடும் விஷயத்தில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
    Tha.ma.6

    பதிலளிநீக்கு