தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 08, 2014

நடு நிசிப் பசி!



பசி!

பயங்கரப் பசி!

இது வரை இந்த மாதிரி ஒரு பசி வந்ததில்லை.

வயிற்றுக்குள் ஏதோ பிறாண்டுவது போல ஓர் உணர்வு.

ஏழு மணி வாக்கில் அம்மா கையில் மோர் சாதம்(தொட்டுக் கொள்ளக் குழம்புடன்) போட்டு, பஜனை மடத்துக்கு அழைத்துப் போனாள்.

அங்கே போய்ச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் தூக்கம் வந்தது.மடத்தின் திண்ணையில் படுத்து தூங்கி விட்டான்;அவனைப் போல் பல சிறுவர்கள்!

“டேய் சேகர்!எழுந்திரு;ஆத்துக்குப் போகலாம்” அம்மா அவனைத் தட்டி எழுப்பிய போது விழித்துக் கொண்டான்.

அவன் பசியும் விழித்துக் கொண்டது.

வயிற்றைத் தடவிக் கொண்டான்.

அம்மாவின் கை பிடித்து வீடு நோக்கி நடக்கும்போது அம்மாவிடம் சொன்னான்”அம்மா, 
பசிக்கிறது”

”வேகமா வா ;பாதி ராத்திரில பசிக்கறதுன்னா என்ன பண்றது.போய்த் தண்ணியைக் குடிச்சிட்டுப் படு”..அம்மா.

வீடு வந்து சேர்ந்தார்கள்.

”படுத்துக்கோ”

முடியவில்லை;காலி வயிறு சங்கடம் செய்தது.

“அம்மா!ரொம்பப் பசிக்கிறது;ஏதாவது குடு”அழ ஆரம்பித்தான்.

அம்மா அவனை அனைத்துக்கொண்டாள்”தூங்கினா சரியாயிடும்”

அழுகை அதிகமாகியது.

அந்தச் சிறு வீட்டை ஒட்டி அதே போல் மற்றொரு வீடு.

நடுவில் மெல்லிய சுவர்.

ஒரு வீட்டில் பேசுவது மறு வீட்டில் கேட்கும்.

பக்கத்து வீட்டிலிருந்து குரல் வந்தது”ராஜம்!குழந்தை ஏன் அழறான்?”

“பசிக்கறதுன்னு அழறான் மாமி”

சில விநாடிகளில் கதவு தட்டப்பட்டது”கதவைத் திற”

மாமி உள்ளே வந்தாள்”சாயங்காலம் தோசைக்கு அரைச்சயே,எடு”

மாமியிடம் எப்போதும் எல்லாம் அதிகாரம்தான்.

அம்மா எடுத்துக் கொடுக்கிறாள்.

”கும்மட்டி அடுப்பை எடு;பற்ற வை”

அம்மா செய்கிறாள்

தோசைக்கல்,எண்ணெய் ஒவ்வொன்றாய் வருகின்றன,

சில நிமிடங்களில் இரண்டு தோசைகள் தயார்.

“இந்தாடா!சாப்பிட்டுட்டுப் படு”

மாமி செல்கிறாள்”கதவைத் தாப்பாள் போட்டுக்கோ”

சிறுவன் வயிறு நிரம்பியதும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பிக்கிறான்

அம்மா மாவுப் பாத்திரத்தை எடுத்து மூடி வைக்கிறாள்

“காத்தாலே நாலு கொழந்தைகளுக்கும் ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னால.இட்லி வார்த்துக் குடுக்கணும்.கொஞ்சம் மாவு கொறஞ்சு போச்சு.பரவாயில்ல.எனக்கு எதுவும் வேண்டாம்; அவா சாப்பிட்டாப் போறும்”

தனக்குத் தோன்றாததை உடன் தானே வந்து செய்த மாமிக்கு நன்றி கூறிக் கொள்கிறாள்.
..............
............
அந்தச் சிறுவன் யாரென்று நான் சொல்ல வேண்டுமா?!

 

24 கருத்துகள்:

  1. சொல்ல வேண்டாம் புரிந்தது

    பதிலளிநீக்கு
  2. .பரவாயில்ல.எனக்கு எதுவும் வேண்டாம்; அவா சாப்பிட்டாப் போறும்”//

    தாய்மையின் வார்த்தைகள்..!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா
    உள்ளத்தை அள்ளிச் செல்லும் பதிவு வாழ்த்துக்கள்
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  4. எப்படியோ வயிறு நிரம்பியது சிறுவனுக்கு...!

    பதிலளிநீக்கு
  5. அருமை! தனதை பிறருக்கு தருவது தாய்மை மட்டுமே! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான நிகழ்வைப் பதிந்த விதம் அருமை
    மனம் நிறைந்தது

    பதிலளிநீக்கு
  7. //”பரவாயில்ல.எனக்கு எதுவும் வேண்டாம்; அவா சாப்பிட்டாப் போறும்”//

    அது தான் தாய் என்பவளின் மகத்துவமே.

    பதிலளிநீக்கு
  8. என்ன சொல்ல?அம்மா க்கள் எப்போதுமே,வருமுன் காப்போர் தான்!

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவின் நடையே அந்த சிறுவன் யாரென்று சொல்லிவிட்டது. மனதை தொட்ட நிகழ்வு.

    பதிலளிநீக்கு
  10. [சும்மாவா சென்னாங்க! அம்மாவே தெய்வம்!

    த ம 6

    பதிலளிநீக்கு
  11. அன்பின் ஆழம் நெகிழ்ச்சியின் அகலம். nice.

    பதிலளிநீக்கு
  12. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சார்.

    பதிலளிநீக்கு
  13. .இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சார்/

    பதிலளிநீக்கு
  14. மிக்க நன்றி ஐயா தங்களுக்கும் என் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    பதிலளிநீக்கு
  15. தங்களுக்கும்,குடும்பத்தினருக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஐயா
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  18. கண்கள் கலங்குகிறது.. நெகிழ்ச்சி.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் ஐய்யா...

    பதிலளிநீக்கு
  19. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு