தொடரும் தோழர்கள்

புதன், ஜனவரி 15, 2014

பாதை முடிவதில்லை!போக வேண்டிய பாதை நீ....ண்டு கிடக்கிறது

வளைந்து நெளிந்து,சில இடங்களில் பிரிந்து

இலக்கற்ற இப்பயணத்தில் செல்வதெங்கே!

கிளைச் சாலைகளின் சந்திப்பில்,யோசனைதான்

எப்பக்கம் செல்வது,எது சிறந்தது என்ற யோசனை

இலக்கேதும் இல்லையெனில் எங்கு சென்றால் என்ன?

எல்லாமே ஒன்றுதான்!எதுவுமே நன்றுதான்!

பாதை ஒன்று போல் எங்கும் இருப்பதில்லை

அழகான வழுக்கிச் செல்லும் சிமிண்ட் சாலை சில தூரம்

அங்கும் இங்கும் குழி நிறைந்த பாதை பல நேரம்

கள்ளும் முள்ளும் கூடக் கலங்க வைக்கும் ஆங்காங்கே

சின்ஞ்சிறு கற்கள்,பென்னம்பெரும் பாறைகள்

அத்தனையும் கடந்து

மகிழ்ந்து,வருந்தி,வலியுடன், உற்சாகமாய்

போய்க் கொண்டுதான் இருக்கிறது பயணம்!

இலக்கின்றி!

கைகோர்த்து உடன் வர ஒருவரும் இல்லாத

வெறும் பயணம்!

பயணப்பாதையில் சந்திப்புகள் அநேகம்

எதிர்ப்பட்டு அறிமுகமாவோர்

உரையாடிச் செல்வோர்

சிறிது தொலைவு உடன் வருவோர்

எத்தனை வித மனிதர்கள்!

யார் வந்தால் என்ன

யார் போனால் என்ன

பாதை எப்படி இருந்தாலும்

பயணிக்கையில் என்ன நடந்தாலும்

பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

பயணம் ஒருநாள் முடியும்

பாதை முடிவதில்லை.!


17 கருத்துகள்:

 1. //பயணம் ஒருநாள் முடியும், பாதை முடிவதில்லை.!//

  உண்மை ஐயா. அருமை. ;)

  பதிலளிநீக்கு
 2. அருமை... உண்மை ஐயா...

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.
  நீங்கள் சொல்லும் வரிகள் அத்தனையும் உண்மைதான் ஐயா.....
  வாழ்த்துக்கள்....த.ம.3வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. யார் வந்தால் என்ன யார் போனால் என்ன.. எத்தனை பயணித்தும் பாதையின் பக்குவம் பயணிக்கு வருவதேயில்லை.

  பதிலளிநீக்கு
 5. //பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!
  பயணம் ஒருநாள் முடியும் //

  எல்லோருக்கும் ஒருநாள் உண்டான முடிவுதான். முடிவிற்குப் பின்பும் நாம் சந்திக்க முடியுமா என்றுதான் தெரியவில்லை!

  பதிலளிநீக்கு
 6. தொடர்ந்து பயணிப்போம்
  சந்தோஷமாகவே
  சக பயணி

  பதிலளிநீக்கு
 7. கடைசி ரெண்டு வரியும் செம நச்சின்னு சொல்லிட்டீங்க தல...!

  பதிலளிநீக்கு
 8. பயணங்கள் முடிவதில்லை என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். இல்லை, இல்லை. பாதைதான் முடிவதில்லை என அழகாக சொல்லிவிட்டீர்கள். கருத்துக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. கடைசி வரிகள் நிதர்சனமானது! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
 10. அரிய தத்துவம் எளிமையாய்! அருமையான எழுத்து உங்களுடையது நண்பரே!

  பதிலளிநீக்கு
 11. பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன...பாடல் வரிகளை நினைவு படுத்தியது உங்கள் கவிதை !
  +8

  பதிலளிநீக்கு
 12. // பயணம் ஒருநாள் முடியும்

  பாதை முடிவதில்லை.!
  //
  அருமையான தத்துவம்.....

  பலருக்கு இந்த விஷயம் புரிவதில்லை!

  பதிலளிநீக்கு
 13. பயணப்பாதையில் சந்திப்புகள் அநேகம்..
  அவர்களால் தான் வாழ்க்கை அர்த்தப்பட்டு போகிறது.. அவர்கள் நம்முடனே தொடர்ந்து வராமல் போனாலும்

  பதிலளிநீக்கு