தொடரும் தோழர்கள்

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஓடும் ரயிலில் ஓர் அபத்த நாடகம்!



வாழ்க்கையின் பல நிகழ்வுகள் அபத்தமானவையே.

நிகழும் அந்தக் கணத்தில் அவை சாதாரணமாகத் தோன்றும் .

ஆனால் யோசித்துப் பார்க்கையில் அதில் உள்ள அபத்தம் புரியும்.

இதுதான் இருத்தலியல் என்பதா என்பது எனக்குத் தெரியாது!

பின் வரும் கதை வாழ்க்கையின் அந்த அபத்தத்தை வெளிக்காட்டுகிறது.

கதை---

ரயிலில் வழக்கம் போல் கூட்டம்.

அந்த s-2 கோச் வாசலில் டி.டி,இ யைச் சுற்றிக் கூட்டம் .

ஏதாவது படுக்கை கிடைக்காதா என முயலும் கூட்டம்.அவர் சொல்லி விட்டார்,எந்த வாய்ப்பும் இல்லை என்று.

அப்படியும் இருவர் வண்டி புறப்பட்டதும் அந்தப் பெட்டியில்
 ஏறி விட்டனர்.

டி.டி.இ யிடம் கெஞ்சிக் கூத்தாடி,கதவருகில் யாருக்கும் தொந்தரவின்றி இருப்பதாகவும், ஏதாவது  இருக்கை ரத்தானால் தங்களுக்குக் கொடுக்கும்படியும் சொல்லி அனுமதி வாங்கி விட்டனர்.

ரயில் சென்று கொண்டே இருந்தது.

இரண்டு மணி நேரம் கடந்திருக்கும்.

திடீரென்று ஒரு அழுகுரல்.

பலர் பெட்டி நடு நோக்கி விரைந்தனர்.

படுக்கை 25,26 இல் ஒரு தம்பதி பயணம் செய்தனர்.

அந்தக் கணவன் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார்.

பலரும் பலயோசனைகள் சொன்னார்கள். கடைசியில் அந்தத் தம்பதி அடுத்த நிலையத்தில் இறங்கி,வாடகைக் கார் பிடித்து ஊர் திரும்புவது என முடிவாயிற்று.

அடுத்த நிலையம் வந்தது .

அவர்கள் இறங்கினர்.

பெட்டியில் ஒரு கனத்த மௌனம்!

வண்டி புறப்பட்டது

காத்திருந்த அந்த இருவரும்  டி.டி.இ யை அணுகினர்.

“சார்,ரெண்டு பெர்த் காலியாயிருக்கே!எங்களுக்குக் கொடுங்களேன்!”
 ................................................................................................

30 கருத்துகள்:

  1. என்ன நடந்தாலும் நாம நம்மட விஷயத்தில தெளிவாக இருக்கனும் :)

    பதிலளிநீக்கு
  2. இப்படியும் மனிதர்கள் இருக்காங்க. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  3. ஒருவரது இழப்பு இன்னொருவருக்கு ஆதாயமாக இருக்கலாம். இதுதான் யதார்த்தம். நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  4. அவங்க வேற என்ன செய்ய முடியும்..

    பதிலளிநீக்கு
  5. எது எப்படி நடந்தாலும், நமது காரியம்தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் உண்டு என்பதை உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  6. சற்றுமுன் இறந்த ஒருவரின் இருக்கையை உடனே கேட்டுப்பெறும் அவர்களின் துனிச்சல் பாராட்டத்தக்கதே ஒரு வேலை டிக்கெட் பாரிசோதகர் அந்த இருக்கையை இவர்களுக்கு பரிந்துரைத்து இந்த பயணிகள் மறுத்திருந்தால் என்ன கூறியிருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் செயல் சரியா ,தவறா என்ற கேள்வீக்கே நான் வரவில்லை.விலகி நின்று பார்க்கும் மூன்றாவது மனிதனுக்கு வாழ்க்கையின்அந்த முரண் புலப்படும்.அவ்வளவே!
      நன்றி ஜெயம்

      நீக்கு
  7. யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது ..அருமை

    பதிலளிநீக்கு
  8. நிஜமாகவே நடந்து இருக்கிறது இது போல்! ஒரு பயணி இறந்து விட அவரது சீட்டினைக் கேட்டு வாங்கிக் கொண்டார் ஒருவர்.!

    பதிலளிநீக்கு
  9. இது சரியா தவறா என அவரவர் நிலையில்
    முடிவு செய்யட்டும் என விட்டது சிறப்பு

    பதிலளிநீக்கு
  10. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    பதிலளிநீக்கு
  11. இதை விட மோசமான ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பதவியில் இருந்த ஒரு ஊழியர் தீ விபத்தில் இறந்து விட்டார். தகவல் கிடைத்து அவரது வீட்டிற்கு புறப்பட வண்டியை ஸ்டார்ட் செய்த போது ஒருவர் வண்டியை நிறுத்தினார்.
    அவர் அந்தப் பதவிக்கான காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர். எனக்கு இந்த வாரத்திலேயே பதவி உயர்வு ஆணையை நிர்வாகத்திடம் பேசி வாங்கிக் கொடுங்களேன் என்றார்.

    பதிலளிநீக்கு
  12. எந்நேரமும் கம்பளி போர்த்தியபடி திண்ணையில் முடங்கிய அண்ணன் ஒருநாள் இறந்தபோது தம்பி சொன்னது 'அண்ணன் செத்தா மயிராச்சி. கம்பளி வித்தா காசாச்சி!'

    பதிலளிநீக்கு
  13. நெஞ்சைத் தொட்ட கதை! இதுதான் இன்றைய மனித இனமோ?

    பதிலளிநீக்கு
  14. well said, bandhu.
    இன்றைய வாழ்க்கை முறை இப்படித்தான் ஆகிவிட்டது.
    கேட்டால், எதார்த்தம் என்கின்றனர்.
    எழவு செய்தி கேட்டு ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் காட்டப்படும் திரைப்படத்தை ரசித்துக்கொண்டு பயணித்ததை நான் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. //S.Raman,Vellore21 டிசம்பர், 2012 9:29 pm
    இதை விட மோசமான ஒரு விஷயம் என் வாழ்வில் நடந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பதவியில் இருந்த ஒரு ஊழியர் தீ விபத்தில் இறந்து விட்டார். தகவல் கிடைத்து அவரது வீட்டிற்கு புறப்பட வண்டியை ஸ்டார்ட் செய்த போது ஒருவர் வண்டியை நிறுத்தினார்.
    அவர் அந்தப் பதவிக்கான காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர். எனக்கு இந்த வாரத்திலேயே பதவி உயர்வு ஆணையை நிர்வாகத்திடம் பேசி வாங்கிக் கொடுங்களேன் என்றார்.//
    சென்னையை சுற்றி உள்ள பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் யாரேனும் எதிர்பாராவிதமாக இறந்து விட்டால் அடுத்த நாளே அவ்விடத்திற்கு மாறுதல் கேட்டுப் பெறுவது உண்டு.

    பதிலளிநீக்கு