நான் சென்னை விவேகானந்தா
கல்லூரியில் பட்ட மேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த நேரம்.
சென்னையின் ’அழகு’களில் என்னை
இழந்து கொண்டிருந்த காலம்.
திங்கட்கிழமை காலையில் முதல்
வகுப்பு, சமயம் பற்றிய வகுப்பு.
பகவத்கீதை,உபநிடதங்கள் எல்லாம்
போதிக்கப்படும்.
இப்போது நினைத்துப் பார்க்கையில் எப்படிப்பட்ட
அரிய வாய்ப்பு எனத் தோன்றுகிறது.
அந்த வாய்ப்பைச் சரியாகப்
பயன்படுத்தாமல் நழுவ விட்டதற்காக இன்று வருந்துகிறேன்
ஏனெனில் இன்று என் வயது அப்படி!
ஆனால் அந்த இனிய இருபதில் கீதை
ரசிக்குமா?கீதாவாக இருந்தால் ரசித்திருக்கலாம்!!
எனவே பல நாட்களில் அந்த வகுப்பை
வெட்டி விட்டுச் செல்வோம்.
ஆனால் அது எப்போதும் இயலாது.
அவ்வாறு வகுப்பில் மாட்டிக் கொண்ட
நாட்களில் தலையெழுத்தே என்று அமர்ந்திருப்போம்.
பகவத்கீதை பற்றி மிக அற்புதமாக விளக்கி வந்தவர்---
அண்ணா அவர்கள்.
ஆச்சரியப்படாதீர்கள். அண்ணாதான்.
என்றாவது நீங்கள் ராமகிருஷ்ணா மடப்
புத்தக நிலையத்துக்குச் சென்றால் அங்கு காணலாம், உபநிடதம் ,வேதம் பற்றிய பல புத்தகங்களை
.
புத்தகத்தைத் திறந்து பார்த்தால் ஆசிரியர் பெயர்
“அண்ணா” என்று இருக்கும்.
அவர்தான் எங்களுக்கு வகுப்பு எடுத்தவர்.
அவர் பெயர்’அண்ணா’ சுப்பிரமணிய ஐயர்.
ஆனால் அண்ணா என்றே அழைக்கப்பட்டவர்.
இனி அந்த வாய்ப்புக் கிடைக்குமா?!
.
தலைப்பின் வசீகரம்
பதிலளிநீக்குபதிவின் கடைசி வரி வரையில்
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
ரசித்துப் படித்துப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி
நீக்குஐயா நீங்கள் சமயப் பாடத்துக்குத்தால் எஸ் ஆகியிருக்கிறிங்க...
பதிலளிநீக்குநாங்க கணக்கு பாட வாத்திய கண்டாலே எஸ் தான்...
உண்மைதான் அவைகள் மிகப் பெறுமதியான பொழுதுகள் மீளப் பெற முடியாதவை
நன்றி ஆத்மா
நீக்கு//அந்த இனிய இருபதில் கீதை ரசிக்குமா?கீதாவாக இருந்தால் ரசித்திருக்கலாம்!!//
பதிலளிநீக்குஇந்த எழுபதிலும் கூட , கீதை படித்திருக்கவேண்டும் என்ற உறுத்தல் இருக்கும்பொழுது கூட,
அந்த கீதா வந்து அந்த கீதையை போதிக்கமாட்டாளா என .....
மனசு இருக்கிறதே !! அது
மிஸ் ஆயிடுத்தே என எதை நினைக்கிறதோ அதிலேயே ஒரு .......
ஒரு குட்டிக் கதை அல்ல ... உண்மை நிகழ்ச்சி . எனக்கு 1984 ல்.
ஆடிட் டீமின் லீடராக 1986 ல் விசாகப்பட்டினம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து. அது ஒரு சர்ப்ரைஸ் செக் . மார்ச் 31 கணக்கு வழக்குகளை
முடிப்பதில் விதி முறைகள் சரியாகப்பின் பற்றப்பட்டிருக்கின்றனவா, மீறப்பட்டிருகின்றனவா என பார்க்கவேண்டிய பொறுப்பு.
தலைமை அலுவலகத்திற்கு சென்று அங்கு உயர் அதிகாரியை சந்தித்து நாங்கள் இந்த வேலைக்காக வந்திருக்கிறோம் என்று
எங்கள் ஐ.டி யைக் காண்பித்து துவங்கவேண்டும். அதற்காக, அவரது பி.ஏ வை சந்தித்து பின் அவரது சேம்பர் உள்ளே செல்ல வேண்டும்.
சரியாக 10.40 மணி இருக்கும். பி.ஏ. முன் சென்றடைந்தோம். நாங்கள் மூன்று பேர். அவரோ டேபிளுக்குக் கீழ் குனிந்து உட்கார்ந்து மறு புறம்
ஏதோ தேடுகிறார் தேடிக்கொண்டே இருந்தார். நானும் ஒரு 10 , 15 நிமிடங்கள் காத்திருந்தேன். அவரோ தேடிக்கொண்டே இருக்கிறார். திரும்பக்கூட இல்லை.
பொறுமை எனக்கும் என் டீம் மெம்பர்ஸுக்கும் இல்லை.
ஸார் !! சார் ! எனக் கத்தவில்லை. உரத்தினோம்.
திடுக்கிட்டு, திரும்பினார் அவர். எங்களைப்பார்த்தார். யார் நீங்கள் என்ற முக பாவனையில்.....
நாங்கள் ஸர்ப்ரைஸ் செக் க்குக்காக சென்னை ஆடிட் டீம் என்றவுடன் சுதாரித்துக்கொண்டார். உட்காருங்கள்.
காபி சாப்பிடுங்கள் என்று உபசரிக்கத் துவங்கினார்.
" அது இருக்கட்டும்... என்ன அது ரொம்ப நேரமாகத் தேடிக்கொண்டு இருக்கிறீர்களே !! " என்று கேட்டுவிட்டேன்.
" அதுவா சார் ! நேற்று பாஸ் ( boss ) ஒரு லிஸ்ட் ஆஃப் மிஸ்ஸிங் ஃபைல்ஸ் என்று கொடுத்து அந்த லிஸ்டில் உள்ளதெல்லாம் இருக்கிறதா என நீங்கள் வருவதற்கு முன்னம் பார்க்கச்சொன்னார். : என்றார். .
" அப்படியா.. என்ன ஆயிற்று... " " கேட்டேன்.
" அந்த லிஸ்டை மிஸ் பண்ணிவிட்டேன். "
உங்கள் பதிவு இந்த நிகழ்வை நினைவுபடுத்தியது.
சுப்பு தாத்தா.
NB: To listen to Gita Lectures, pl visit Kesari School on Tuesdays by 6.00 p.m. and listen to Swamini Sathyavrataananda.
ஓய்வுக்குப் பின் சின்மயா மிஷன் கீதை வகுப்பில் சேர்ந்து கீதை படித்தேன்.பல் வேறு குருக்களிடம் சிறிது வேதமும் பயின்றேன்.அப்போது செய்யாமல் விட்டதை இப்போது செய்து விட்டேன். வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி ஐயா!
அண்ணா’ சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது ஆன்மீகத்து அவர் அண்ணா என்றால் அரசியலுக்கு அறிஞர் அண்ணா என்று சொல்வார்கள். ‘இனிய இருபதில் கீதை ரசிக்குமா?கீதாவாக இருந்தால் ரசித்திருக்கலாம்!’என்ற வழக்கமான உங்கள் குறும்பை இரசித்தேன். ‘இனி அந்த வாய்ப்புக் கிடைக்குமா?!’என்று கேட்டிருக்கிறீர்கள். என்ன செய்வது நாம் எல்லோரும் கண் கெட்டபின் தானே சூரிய நமஸ்காரம் செய்கிறோம்.
பதிலளிநீக்குசரிதான்;ஆனால் வயதுக்கேற்ப ரசனை மாறுவது இயற்கைதானே!
நீக்குநன்றி சார்
இராமகிருஷ்ண மடத்தின் பெரும்பாலான புத்தகங்களிலும் “அண்ணா” பெயர் இருக்கும். அவரே உங்களுக்கு ஆசிரியராக இருந்தாரா? ஓ.... கொடுத்து வைத்தவர் நீங்கள். ஆனால் கீதைக்கு பதில் கிதா... :)
பதிலளிநீக்குஎன்ன செய்ய வயது அப்படி!
நீக்குபதிவும் சூரி அவர்களின் பின்னூட்டமும் சுவாரசியம்.
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை
நீக்குஇனி அந்த வாய்ப்புக் கிடைக்குமா?!
பதிலளிநீக்குசுப்பு தாத்தா.
NB: To listen to Gita Lectures, pl visit Kesari School on Tuesdays by 6.00 p.m. and listen to Swamini Sathyavrataananda.
நன்றி இராஜராஜேஸ்வரி
நீக்குநன்றி ரமணி
பதிலளிநீக்குநன்றி சீனி
பதிலளிநீக்குஅரிய வாய்ப்பு தான்.....
பதிலளிநீக்குநல்லதொரு மனிதர் ஆசிரியராக கிடைத்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் கம்ப ரசத்தை பருகுங்கள், நன்றாகவே இருக்கும்
பதிலளிநீக்குகீதையை ரசிக்கும் வயது அப்போது இருக்கவில்லை :))
பதிலளிநீக்கு